.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, January 6, 2014

தொடரும் வெற்றிப்பட ஃபார்முலா...

சந்தேகமே வேண்டாம். தெலுங்கு சினிமாதான் ஒரே பாடம். தென்னிந்திய கமர்ஷியல் சினிமாவில் கால் பதிக்க நினைக்கும் அனைவரும் கசடற கற்க வேண்டிய பால பாடங்கள் ஆந்திராவில்தான் தயாராகின்றன.ஆக்ஷனா... இந்தா பிடி என கொடுக்கிறார்கள். லோ பட்ஜெட் கொத்து பரோட்டாவா... எடுத்துக்கோ என பரிமாறுகிறார்கள். நெகிழ வைக்கும் குடும்பச் சித்திரங்களா... வாங்க வாங்க என அழைக்கிறார்கள். த்ரில்லரா... இந்த பயம் போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா என அலற வைக்கிறார்கள். மொத்தத்தில் எல்லா ஜானரையும் நீக்கமற கொடுக்கிறார்கள். க்ளாமருக்கான எல்லைக்கோட்டை பிரமாதமாக வரையறுக்கிறார்கள்.1980களில் தமிழ்ச் சினிமா இப்படித்தான் இருந்தது என்பது கடந்தகால வரலாறானது நமது துர்பாக்கியம்.இதெல்லாம் ...

கார்த்தியின் “சிறுத்தை 2“

கார்த்தி நடித்து வெற்றிகரமாக ஓடிய சிறுத்தை படத்தின் 2–ம் பாகம் தயாராகி கொண்டிருக்கிறது. சிவா இயக்கத்தில் கார்த்தி, தமன்னா ஜோடி போட்ட படம் சிறுத்தை. 2011ம் ஆண்டு வெளியான இப்படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வசூல் மழையை பொழிந்த இப்படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க இருக்கிறரார் சிவா. தற்போது அட்டகத்தி ரஞ்சித்தின் இயக்கத்தில் வட சென்னையை மையமாக வைத்து எடுக்கப்படும் படத்தில் கார்த்தி நடிக்கயிருக்கிறார். இந்தப் படத்துக்குப் பிறகு சிவா இயக்கத்தில் சிறுத்தை இரண்டாம் பாகத்தில் கார்த்தி நடிக்கிறார் . ...

ஆபரேஷனை மீண்டும் தள்ளிப்போட்ட அஜீத்...!

கால் எலும்பில் ஏற்பட்ட காயத்துக்கான ஆபரேஷனை மீண்டும் தள்ளிப்போட்டார் அஜீத். விஷ்ணுவர்தன் இயக்கிய ஆரம்பம் பட ஷூட்டிங் துபாயில் நடந்தபோது கார் சேஸிங் காட்சியில் நடித்தார் அஜீத். வேகமாக ஓடும் காரின் முன்பக்கத்தில் நின்றபடி அவர் மோதும் சண்டை காட்சி படமாக்கப்பட்டது. அப்போது அவரது கால் வழுக்கி முன்பக்க சக்கரத்தில் சிக்கியது. இதில் கால் எலும்பில் காயம் ஏற்பட்டது. டாக்டர்கள் எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது எலும்பில் காயம் ஏற்பட்டிருந்தது தெரிந்தது. அதற்கு ஆபரேஷன் செய்யவும் ஆலோசனை கூறினர். ஆனால் படத்தை முடித்துவிட்டு ஆபரேஷன் செய்வதாக கூறினார் அஜீத். இந்நிலையில் வீரம் படத்தின் ஷூட்டிங்கை விரைந்து முடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால் ஆபரேஷனை தள்ளிப்போட்டார்....

இட்லி, தோசை மாவை இன்ஸ்டன்டா வாங்கினால் வரும் ஆபத்து!

கலப்படம் இல்லாத பொருட்களே இன்று இல்லை எனும் அளவிற்கு கலப்படங்களோடு இரண்டரக்கலந்து காலத்தை ஓட்டிவருகின்றோம்.உப்பு முதல் ஊற்காய் வரை பாக்கெட்டுகளில் அடைத்து கடைகளில் விற்பனை செய்யும் சமையல் சாமான்கள் தாராளமாகக் கிடைப்பதால் வீடுகளில் சுயமாகத் தயாரிக்கும் எண்ணமே மக்களிடத்தில் மறைந்து போயிற்று.எனவே தாம் இன்று இட்லி,தோசை மாவுக்கு கூட நாம் கடைகளை நோக்கி ஓடும் அவலம்! இதையடுத்து கடந்த 10 ஆண்டுகளில் இட்லி, தோசை மாவை விலைக்கு விற்கும் பழக்கம் விரிவடைந்துக் கொண்டே போகிறது. இட்லி, தோசை மாவு விற்கப்படுவதால் ஒரு புறம் பெண்களின் வேலைச்சுமை குறைகிறது. மறுபுறம் வீட்டில் இருந்தபடியே பணம் ஈட்டும் தொழிலாக மாவு விற்பனை நடைபெறுகிறது.மேலும் சிறிய மளிகைக்கடை முதல்...
Page 1 of 77712345Next

 
back to top