இன்றைய 4ஜி தகவல் பரிமாற்ற வேகத்தினைக் காட்டிலும் பல நூறு மடங்கு வேகமாகச் செல்லும் அலை வரிசைக் கற்றையினையும், அதற்கான ரிசீவரையும் தான் வடிவமைத்துள்ளதாக சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த தொழில் நுட்பத்தை வர்த்தக ரீதியாகப் பொது மக்களுக்கு வழங்குவதற்கான ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், வரும் 2020 ஆம் ஆண்டில் இதனை வழங்க முடியும் எனவும் சாம்சங் தெரிவித்துள்ளது.
இந்த அலைக்கற்றை கட்டமைப்பு மில்லிமீட்டர் அலைவரிசையைக் கையாளும் திறனைக் கொண்டுள்ளதாகவும், தற்போது 4ஜி அலைவரிசையில், வெகு தூரத்திற்கு தகவல் பரிமாற்றத்தில் ஏற்படும் சிக்கல்களை இது தீர்த்துவிடும் என்று கூறுகிறது.
இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில், இது 28 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கி, நொடிக்கு 1.056 கிகா பிட்ஸ் தகவல்களைக் கடத்தும் திறன் கொண்டதாகத் தற்போது அமைந்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.
எனவே, தற்போதுள்ள 4ஜி வேகத்தினைக் காட்டிலும் பல நூறு மடங்கு வேகத்தில் தகவல்களை 5ஜி அலைவரிசைக் கட்டமைப்பில் அனுப்ப முடியும்.
இந்தியா உட்பட, உலகின் பல நாடுகளில் இன்னும் 4ஜி அலைவரிசையே வர்த்தக ரீதியாக மக்களிடம் அறிமுகமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது



4:17 AM
Unknown


Posted in:
0 comments:
Post a Comment