விதவிதமான எழுத்துருக்களைப் பயன்படுத்தி போட்டோஷாப் (Photoshop), வலைத்தளங்கள் (Websites)... சொற்செயலிகள் (Word Processor) ஆகியவற்றில் பயன்படுத்தியிருப்போம். பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம்.
இவற்றையெல்லாம் மிஞ்சும் வகையில் உங்கள் கைப்பட எழுதிய கையெழுத்துகளையே உங்கள் கணினியில் எழுத்துருவாக நிறுவிப் பயன்படுத்த முடியும்.
ஆச்சர்யமாக இருக்கிறதா? இது உண்மையும் கூட.. உங்கள் கையெழுத்துகளை உங்கள் கணினியில் பயன்படுத்தக்கூடிய வகையில் எழுத்துருவாக மாற்றித் தருகிறது ஒரு இணையதளம். இதற்கு தளத்தில் சொல்லப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றினாலே போதும்.
உங்களுடைய உண்மையான கையெழுத்துகளைக் கொண்டு கணினியிலும் எழுதலாம்.
செய்முறை:
1. முதலில் இந்த இணையதளம் செல்லுங்கள். அங்கு Print your Template என்பதை கிளிக் செய்யுங்கள்..
2. தோன்றும் பக்கத்தில் PDF paper size is A4; for all other countries: என்ற தலைப்பின் கீழ் இணைப்பைக் கிளிக் செய்துகொண்டு ஒரு கோப்பை print செய்துகொள்ளுங்கள்.
3. பிறகு அதில் உங்கள் கைப்பட எழுத்துக்களை எழுதுங்கள். இதற்கு உங்கள் Ball Point பேனாவை உபயோகிப்பது நலம். அல்லது Skech போன்றவைகளை உபயோகிக்கலாம். இந்த படிவத்தில் உள்ள எழுத்துக்களை அனைத்தையும் நிரப்புங்கள்.
4. எப்படி நிரப்புவது என்பதை கீழுள்ள படத்தை கிளிக் செய்து பார்த்துக்கொள்ளலாம்.
பச்சை நிறத்தில் டிக் செய்துள்ளது சரியான முறை. சிவப்பு நிறத்தில் உள்ளது தவறான முறை. படத்தை நன்றாக கவனித்துப் பார்த்தால் புரியும்.
5. உங்கள் எழுத்துக்களை படிவத்தின் கட்டத்தில் இருபக்கமும் நான்கு வரிகள் இருக்கும். இந்த நான்கு கோடுகளுக்குள் உங்கள் எழுத்துகள் அமைய வேண்டும். எழுத்துக்களை எழுதுவதில் கவனத்துடன் செயல்படுங்கள்.
6. அனைத்து எழுத்துக்களையும் நிரப்பி முடித்துவிட்டு அந்தப் படிவத்தை ஒரு முறை Scan செய்துவிடுங்கள். Scan செய்த படமானது .gif, .jpg, .jpeg, .png, .pdf, .tif, and .tiff போன்ற ஏதாவது ஒரு கோப்புமுறைகளில் இருக்க வேண்டும். இது கட்டாயம்.
7. சேமித்த கோப்பை தரவேற்ற பக்கப்பட்டையில் உள்ள (sidebar)Upload Template என்பதை அழுத்தவும். தோன்றும் பக்கத்தில் Font Name என்பதில் உங்களுடைய எழுத்துருவிற்கு பெயர் கொடுங்கள். பிறகு Choose File என்பதைக் கிளிக் செய்து நீங்கள் Scan செய்த படிவப் படத்தை (Scanned Image) தரவேற்றம் செய்துவிடவும்.
இதற்கு கிட்ட தட்ட ஒரு நிமிட நேரம் எடுத்துக்கொள்ளும். உங்கள் இணைய இணைப்பின் வேகத்தைப் பொறுத்து கூடுதலாக ஓரிரு நிமிடங்கள் ஆகலாம்...
அப்லோட் செய்துவிட்டு next button -ஐ அழுத்துங்கள்.. இப்போது உங்கள் கையெழுத்துகளின் மாதிரியை பார்க்கலாம்..
அந்த பக்கத்தில் உள்ள Dowonload font என்பதை அழுத்தி உங்கள் கையெழுத்துகளைக் கொண்ட எழுத்துருக் கோப்பைப் பெற்றுக்கொள்ளலாம். இதற்கு உங்களிடம் கூப்பன் கோட் கேட்கும்.. இந்த கூப்பன் கோட்டைப் பெற நீங்கள் 10$ பேபால் முறையில் அவர்களுக்கு செலுத்த வேண்டும். ஏறக்குறைய நம்முடைய பண மதிப்பில் 500 ரூபாய். பிறகு கூப்பன் கோட்டை பெற்றுக்கொண்டு அதில் உள்ளிடவும். இப்போது உங்களுக்குத் தேவையான எழுத்துருவை தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
எழுத்துருவை நிறுவும் முறை (Font Installation):
தரவிறக்கிய உங்கள் எழுத்துருவை கணினியில் Font போல்டரில் நிறுவவும். இதற்கு உங்கள் கணினியில் Font என தட்டச்சிட்டு தேடுங்கள்.. அல்லது நீங்கள் விண்டோஸ் 7 பயன்படுத்தினால், Start==>control Panel==>appearance and Personalisation==>Font என்பதை கிளிக் செய்யவும்.
விண்டோஸ் XP பயன்படுத்தினால் அதில் Start==>settings==>control Panel==>Fonts என்பதைத் திறந்துகொள்ளுங்கள். பிறகு அதில் உங்கள் எழுத்துருவை காப்பி பேஸ்ட் செய்யவும். அல்லது Drag and Drop முறையில் எழுத்துருக் கோப்பை Font Folder-ல் இழுத்துவிடவும். பிறகு கணினியை ஒரு முறை மறுதொடக்கம் (Restart) செய்துகொள்ளுங்கள்..
மீண்டும் கணினியை இயக்கி, ஒரு சொற்செயலி ms-word அல்லது wordpad போன்ற ஏதேனும் ஒன்றில் நீங்கள் தட்டச்சிடுங்கள். அந்த தட்டச்சிட்ட எழுத்துகளை தேர்வுசெய்து உங்கள் சொந்த எழுத்துருவை தேர்ந்துடுத்துப் பாருங்கள்.. நீங்கள் கைப்பட எழுதிய எழுத்துருக்கள் கணினியில் இருக்கும்.. !!!
0 comments:
Post a Comment