
இன்னும் 280 கோடி ஆண்டுகளில் உலகம் அழியும் என செயின்ட் ஆண்ட் ரூஸ் பல்கலைக்கழக வானவியல் உயிரின நிபுணர் ஜோக் ஓ மல்லே ஜேம்ஸ் தெரிவித்துள்ளார். உலக வெப்பமயமாதல் காரணமாக சூரியனிடம் இருந்து மிக கடுமையான வெப்பம் பூமியை தாக்கும். அதன் மூலம் ஏற்படும் ரசாயன மாற்றம் காரணமாக ஆக்சிஜனின் அளவு குறைந்து கார்பன்டை ஆக்சைடு அளவு விகிதம் அதிகரிக்கும். இதனால் தாவரங்கள், மிருகங்கள் உள்ளிட்ட உயிரினங்கள் படிப்படியாக அழியும். உயிரினங்கள் அனைத்தும் அழியும் நேரத்தில் மூட்டைபூச்சிகள் மட்டுமே கடைசி வரை உயிர் வாழும். ஏனெனில் இவை நீரின்றியும், அதிக வெப்ப சக்தியை தாங்கியும் வாழக் கூடிய உயிரினம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.



6:14 PM
Unknown
Posted in:
0 comments:
Post a Comment