.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, August 22, 2013

ஹைக்கூ கவிதைகள்...

தெருவிளக்கு:

மழைவிட்ட நேரம்
தேங்கிய நீரில் முகம் பார்த்தது
தெருவிளக்கு..

அளவீடு:
நீந்தி நீந்தி சோர்ந்து விட்டது
தொட்டியை அளவெடுக்கிறது
மீன்தொட்டியில் தங்கமீன்!

தேசிய கீதம்:
அரசியல்வாதிகளை
நாற்காலியை விட்டு
எழச் செய்து விடுகிறது
தேசிய கீதம்!

மாற்றம்:
வசந்தம்
வேலையின்றிக் கிடக்கிறது
பனைவிசிறி...

உழைப்பு:
விடிய விடிய உழைத்தும்
வியர்வை இல்லை
கடிகார முட்கள்.

நட்சத்திரம்:
யார்சூட மலர்ந்திருக்கின்றன
விண்வெளித் தோட்டத்தில்
நட்சத்திரப் பூக்கள்...

ஏக்கம்:
பால் குடித்த பிள்ளையாரை
ஏக்கமாய் பார்க்கும்
பசித்த சிறுமி.

பனித்துளி:
பச்சை நாற்றுகளின்
பனித்துளி கண்ணாடிகளில்
வியர்வைபிம்பங்கள்...

மணிக்கூண்டு
கல்லூரி மணிக்கூண்டு
பழைய மாணவன்
விசாரிக்கும் மணியோசை

0 comments:

 
back to top