உத்தர பிரதேசத்தில் 19ம் நூற்றாண்டு மன்னரின் கோட்டையில் 1000 டன் தங்கம் உள்ளதா என்று தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ள தொல்பொருள் துறைக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. உ.பி. மாநிலம் உன்னவோ மாவட்டம் தான்டியா கேரா கிராமத்தில் 19ம் நூற்றாண்டை சேர்ந்த மன்னர் ராஜா ராவ் ராம் பக்ஷ் வாழ்ந்த அரண்மனை உள்ளது.
இக்கோட்டைக்குள் 1000 டன் தங்கத்தை புதைத்து வைத் திருப்பதாகவும், அதை தோண்டி எடுக்கும்படி தனது கனவில் வந்து ராஜா ராம் ராவ் பக்ஷ் கூறியதாகவும் சோபன் சர்கார் என்னும் சாமியார் கூறினார். இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையினர் கடந்த 18ம் தேதி முதல் கோட்டையில் தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், தவறானவர்களின் கைகளுக்கு தங்கம் சென்றுவிடாமல் தடுக்க அங்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய தொல்பொருள் துறைக்கு உத்தரவிடுமாறு வக்கீல் எம்.எல்.சர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான பெஞ்ச், ‘‘உணர்வுபூர்வமான எந்த பிரச்னையிலும் நீதிமன்றம் தலையிடாது. வெறும் ஊகங்களின் அடிப்படையில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது. இப்போதுள்ள நிலையில், எந்த உத்தரவும் தேவைப்படவில்லை’’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
4வது நாள்:
இதனிடையே, தொல்பொருள் துறை துணை இயக்குனர் பி.கே.மிஸ்ரா தலைமையிலான 12 பேர் குழுவினர் மேற்பார்வையில் தோண்டும் பணி நேற்று 4ம் நாளாக தொடர்ந்தது. தோண்டும் இடத்தில் பழமையான சுவர் காணப்படுவதால் அதற்கு சேதம் ஏற்படாமல் பணிகள் மெது வாக நடப்பதாக கிராம தலைவர் அஜய்பால் சிங் கூறினார்.மோடி சமாதானம்: தோண்டும் பணிக்காக மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்த நரேந்திர மோடி, கறுப்பு பணத்தை வெளிநாடுகளில் இருந்து மீட்காமல் சாமியார் பேச்சை கேட்டு தோண்டுவதா? என்று கடந்த வா ரம் கூறினார். சாமியாரின் பக்தர்களை சமாதானப்படுத்தும் வகையில், ‘‘சாமி யார் சோபன் சர்கார் மீது லட்சக்கணக்கானோர் நம்பிக்கை வைத்துள்ளனர். அவர் மீதும் அவரது துறவறத்தின் மீதும் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளேன்’ என்று டுவிட் டர் இணையதளத்தில் மோடி கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment