1) டாக்டர் இராஜேந்திரப் பிரசாத் (Rajendra Prasad) 1950-1962
இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரும் இந்திய விடுதலைப் போராட்ட வீரரும்
ஆவார். காங்கிரஸ் கட்சித் தலைவர்களுள் ஒருவர். 1950 முதல் 1962 வரை இந்திய
குடியரசுத் தலைவராக இருந்தார்.
டாக்டர் . ராஜேந்திரபிரசாத் முதல் ஜனாதிபதி மற்றும் 2 முறை இந்த பதவியை
வகித்தவர் என்ற பெருமையையும் பெறுகிறார்.
வகித்தவர் என்ற பெருமையையும் பெறுகிறார்.
2) டாக்டர் ராதாகிருஷ்ணன் - 1962-1967
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (செப்டம்பர் 5, 1888 - ஏப்ரல் 17, 1975) சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார்.
திருத்தணியில் பிறந்த ராதாகிருஷ்ணன், தெலுங்கு மொழியை தாய்மொழியாக
கொண்டவர். இவர், தன் இளமைக்காலத்தை திருத்தணியிலும், திருப்பதியிலும்
கழித்தார். பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார்.
இவர் ஆசிரியராக பணியாற்றியதால் இவர் பிறந்த தினமான செப்டம்பர் 5,
இந்தியாவில் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. 1954ஆம் ஆண்டு இவருக்கு
பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
3) டாக்டர் ஜாகிர் ஹுசேன் - 1967-1969
சாகீர் உசேன் (ஜாகீர் உசேன்) இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் 1967இல் இருந்து 1969 இல் அவர் இறக்கும் வரை அப்பதவியை வகித்தார். 1962-1967 காலத்தில் இவர் துணைக் குடியரசுத் தலைவராகவும் இருந்தார்.
சாகீர் உசேன் (ஜாகீர் உசேன்) இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் 1967இல் இருந்து 1969 இல் அவர் இறக்கும் வரை அப்பதவியை வகித்தார். 1962-1967 காலத்தில் இவர் துணைக் குடியரசுத் தலைவராகவும் இருந்தார்.
0 comments:
Post a Comment