'டிவி, பிரிட்ஜ், ஏ.சி., டூவீலர்' போன்றவற்றிற்கு, குறைந்த வட்டியில் கடன்;-
நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், உற்பத்தி பொருட்களின் தேக்கத்தை போக்கவும், 'டிவி, பிரிட்ஜ், ஏ.சி., டூவீலர்' போன்றவற்றிற்கு, குறைந்த வட்டியில் கடன் வழங்குமாறு, பொதுத் துறை வங்கிகளுக்கு, மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ஆயுத பூஜை, தீபாவளி என தொடர்ச்சியாக பண்டிகைகளைக் கொண்டாடத் தயாராகும் மக்கள், புதிய பொருட்களை வாங்க, இதன் மூலம் வழி ஏற்பட்டு உள்ளது. நுகர்வோர் சாதனங்களுக்கு, குறைந்த வட்டியில் கடன் வழங்குவதற்காக, பொதுத் துறை வங்கிகளுக்கு, மத்திய அரசு, குறிப்பிட்ட தொகையை பங்கு மூலதனமாக வழங்கும்.
கூடுதல் மூலதனம்:
வங்கிகளுக்கு நடப்பு நிதியாண்டில், பங்கு மூலதனமாக, 14 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும் என, மத்திய அரசு, இந்த ஆண்டு பட்ஜெட்டில் தெரிவித்தது. இதற்கும் மேலாக, தற்போதைய அறிவிப்பின்படி, பொதுத் துறை வங்கிகளுக்கு, கூடுதல் மூலதனம் வழங்கப்படும். டில்லியில் நேற்று, மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் மற்றும் பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் அரவிந்த் மயாராம் ஆகியோர் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இதை அடுத்து, மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: பொதுத் துறை வங்கிகளின் மூலதன இருப்பு விகிதத்தை அதிகரித்துக் கொள்வதற்காக, 14 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என, நடப்பு நிதியாண்டிற்கான மத்திய அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த நிதி வரம்பு, தேவையான அளவிற்கு உயர்த்தப்படும். இதன் மூலம், 'டிவி, பிரிட்ஜ், ஏ.சி., டூவீலர்' போன்ற நுகர்வோர் சாதனங்களுக்கு வங்கிகள், தாராளமாக கடன் வழங்க முடியும். இது, இச்சாதனங்களுக்கான தேவையை அதிகரிக்கச் செய்யும். அதே சமயம்,
நுகர்வோருக்கு, குறிப்பாக, நடுத்தர மக்கள் இதனால் பயன் பெறுவர். இந்த நடவடிக்கை, தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கமளித்து, உற்பத்தி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவை அதிகரிக்க வழி வகுக்கும்.
வங்கி கடன் வளர்ச்சி:
கடந்த செப்டம்பர் இறுதி நிலவரப்படி, வங்கிகளின் கடன் வளர்ச்சி, ஆண்டுக்கணக்கில், 18 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதே சமயம், சில துறைகளில், வளர்ச்சி மந்தமாக உள்ளது. குறிப்பாக, நுகர்வோர் சாதனங்கள் துறையின் வளர்ச்சி, குறைவாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு, மத்திய அரசு, பொதுத் துறை வங்கிகளுக்கு வழங்கும் மூலதனத்தை உயர்த்துவது என, முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு, பொதுத் துறை வங்கிகளுக்கு கூடுதலாக எவ்வளவு தொகையை பங்கு மூலதனமாக வழங்கும் என்பது குறித்து, அரசு எதுவும் தெரிவிக்கவில்லை. அதுபோல், நுகர்வோர் சாதனங்களின் கடனுக்கு, வட்டி விகிதம் எவ்வளவு குறைக்கப்படும் என்பது குறித்தும் வங்கிகள் இதுவரை அறிவிப்பு வெளியிடவில்லை. வட்டி குறைப்பு அவசியம் குறித்து, ப.சிதம்பரம், விரைவில் வங்கி தலைவர்களுடன் பேச்சு நடத்த உள்ளார். இதையடுத்து, குறைக்கப்பட்ட வட்டி விகிதம் குறித்து, வங்கிகள், அடுத்த வாரம் அறிவிப்பு வெளியிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தேக்கம்:
'டிவி, பிரிட்ஜ்' உள்ளிட்ட நுகர்வோர் சாதனங்கள் துறையின் உற்பத்தி வளர்ச்சி, சென்ற ஜூலையில், 9.3 சதவீதம் குறைந்துள்ளது. இந்த வளர்ச்சி, சென்ற ஆண்டு, இதே மாதத்தில், 0.8 சதவீதமாக இருந்தது. நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல், ஜூலை வரையிலான நான்கு மாதங்களில், இத்துறையின் உற்பத்தி, 12 சதவீதம் குறைந்துள்ளது. இது, சென்ற நிதியாண்டின், இதே காலத்தில், 6.1 சதவீதம் வளர்ச்சி கண்டிருந்தது. அரசின் இந்த புது நடவடிக்கை மூலம் இந்த தேக்கத்தில் மாற்றம் ஏற்படும் என, எதிர்பார்க்கலாம்.

0 comments:
Post a Comment