நாம் அன்றாடம் சாப்பிடும் உணவு வகைகள் அனைத்தும் நமக்கு போதுமான ஊட்டச்சத்து அளிக்கிறதா? இல்லை. நாம் சாப்பிடும் உணவில் 20-30% உணவு தான் ஊட்டச்சத்து தரக்கூடிய உணவு, மீதி அனைத்தும் நமக்கு தெரியாமல் நமது உடலை அழித்து கொண்டிருக்கும் உணவு வகைகள்.
சுவை நன்றாக இருப்பதால், நாம் சில வகை உணவுகளை விரும்பிக் சாப்பிடுகிறோம். ஆனால், அவ் வகை உணவுகள் நம் உடலுக்கு பெரிதும் தீங்கு செய்கிறது. ஊட்டச்சத்தின் அடிப்படையில் பார்க்கும் போது, நாம் எல்லா வகையான உணவுகளையும் குறிப்பிட வேண்டும்.
உதாரணமாக, சில வகையான சிறந்த உணவுகள் நமது எடை குறைப்பிற்கு உதவும், வேறு சில நமது அறிவுத்திறனை ஊக்குவிக்கும் மற்றும் நினைவாற்றலை மேம்படுத்தும் உணவுகள். இதற்கு மாறாக சிலவகை உணவுகள் மூளைச் செயல்பாட்டை அழிக்கும் உணவாகவே இருக்கிறது.
உணவியல் வல்லுநர்கள் கூறும் அறிவுரை என்ன வென்றால், இவ்வகை உணவுகளை குறைவாக உட்கொள்வதினால், அதன் கேடு விளைவிக்கும் தன்மை கட்டுப்படுத்தப்படுகிறது. இதோ நமது அறிவுத்திறனை மெதுவாக அழிக்கும் முதல் 11 உணவுகள் என்னவென்று பார்க்கலாம்.
1.சர்க்கரை உணவுகள் :
சர்க்கரை மற்றும் சர்க்கரை கலந்த உணவுகள், எடை குறைப்பை கெடுப்பதுமட்டுமல்லாது, மூளைச்செயல்பாட்டையும் கெடுக்கும். நீண்ட காலம் சர்க்கரை உட்கொள்வதினால், அது நரம்பியல் பிரச்சினைகளை உருவாக்கும் மற்றும் ஞாபகத்திறனையும் பாதிக்கும். அது மட்டுமல்லாது, சர்க்கரை உணவுகள் நமது படிப்பாற்றலையும் பாதிக்கும். இதனால் தான் சர்க்கரை அதிகமாக உள்ள உணவு வகைகளான பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஸ்வீட், கான் சிரப் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
2.மது :
மது உட்கொள்ளுதல் நாளடைவில் நமது கல்லீரலை பாதிக்கும். இதனால் வருவது தான் `பிரைன் ஃபாக்' எனப்படும் மூளை மூடுபனி. பிரைன் ஃபாக் என்ற பெயருக்கு ஏற்ப இது மனக்குழப்பத்தை ஏற்படுத்தி, சிந்திக்கும் திறனை தாக்குவதோடு, நினைவாற்றலையும் தாக்கும்.
இதனால் மது அதிகம் உட்கொண்டால், சில பொருட்களின் பெயர் மறந்து போய் விடும், சில நிகழ்வுகளை நினைவு கூற முடியாது, நாம் கனவுலகில் இருக்கின்றோமா நிஜவுலகில் இருக்கின்றோமா என்று கூட தெரியாத நிலை வந்துவிடும்.
இவை அனைத்தும் மது நமது மூளையின் செயல்பாட்டை பாதிப்பதால் ஏற்படுகிறது. நல்ல வேளையாக, இந்த அறிகுறிகள் அனைத்தும் திரும்புதலால் நாம் மது அருந்துவதை நிறுத்த வேண்டும் அல்லது வாரம் ஒன்று அல்லது இரண்டு தடவை அருந்துவது என கட்டுப்படுத்த வேண்டும்.
3.ஜங்க் உணவுகள் :
அண்மையில் மாண்ட்ரியல் பல்கலைகழகத்தில் நடந்த ஆராய்ச்சியின் படி, ஜங்க் உணவுகள் நமது மூளையில் உள்ள ரசாயனத்தை மாற்றி, அவை மனஅழுத்தம் மற்றும் கவலை நிலைக்கு ஆளாக்கும். அதிக கொழுப்பு சத்துள்ள உணவுகள் சாப்பிட்டு பழகி விட்டு, அதனை நிறுத்தும் போதும் இதே போன்ற அறிகுறிகள் ஏற்படும்.
இந்த வகை உணவுகள், டோபமைன் உருவாவதை தடுக்கிறது. டோபமைன் என்பது சந்தோஷம் மற்றும் நல்ல உடல் வளம் பெற உதவி செய்யும் இரசாயனம். அதுமட்டுமல்லாது, டோப மைன் அறிவுத்திறன், விழிப் புணர்வு, ஊக்கத்திறன் மற்றும் ஞாபகத்திறன் போன்றவற்றிற்கும் உதவுகிறது.
4.பொரித்த உணவு :
தற்போதுள்ள எல்லா பதப்படுத்தப்பட்ட உணவுகளிலும் ரசாயனங்கள், சாயப் பொருட்கள், சேர்க்கைப் பொருட்கள், செயற்கை சுவைகள் மற்றும் பதப்பொருட்கள் உள்ளன. பொரித்த உணவு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், மூளையில் உள்ள நரம்பு அணுக்களை அழிகின்றன. இருப்பினும் சில எண்ணெய்கள் மிகவும் ஆபத்தானவை. அவைகளில் சூரியகாந்தி எண்ணெய் தான் மிகவும் நச்சுத்தன்மை உடையதாகும்.
5.பதப்படுத்தப்பட்ட உணவு :
பொரித்த உணவுகள் போல பதப்படுத்தப்பட்ட உணவுகளும் மத்திய நரம்பு மண்டலத்தை தாக்கும். மேலும் அல்சைமர் எனப்படும் மூளை சிதைவு நோய் வரும் வாய்ப்புகளும் அதிகமாகும்.
6.அதிக உப்பு உள்ள உணவு :
அதிக உப்பு உள்ள உணவுகள் ரத்த அழுத்தத்தை பாதிக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். மேலும் அது நமது இதயத்திற்கும் கேடு விளைவிக்கும். அதிக உப்பு உள்ள உணவுகள் அறிவுத்திறன் மற்றும் சிந்திக்கும் திறனை பெரிதும் பாதிக்கும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
வேண்டுமெனில் அது அறிவாற்றலை பாதிக்கும் என்றும் சொல்லலாம். உப்பு மற்றும் நிக்கோட்டின் உள்ள பொருட்களை சாப்பிடுவது, ஒருவித போதையை உண்டாக்கும். அதனை கைவிடும் போது, அவற்றின் மேல் தீவிர நாட்டம் அடையத் தூண்டும்.
7.தானியங்கள் (முழு தானியங்களைத் தவிர்த்து) :
எல்லா வகையான தானியங்களும் உடல் நலத்தையும், மூளைச் செயல்பாட்டையும் பாதிக்கும். ஆனால், முழு தானியங்களில் உள்ள அதிக நார்ச்சத்து நாடி துடிப்பிற்கு மிகவும் நல்லது. மற்ற வகை தானியங்கள் அனைத்தும் நமக்கு விரைவிலேயே முதிர்வு ஏற்பட செய்யும் மற்றும் ஞாபக மறதி வரும் வாய்ப்புகளும் அதிகரிக்கும்.
அதனால், தானியங்களுக்குப் பதிலாக கார்போஹைட்ரேட் சேர்த்து சாப்பிட வேண்டும். நாம் பயன்படுத்தும் கார்போஹைட்ரேட், கூட்டு அமைப்பு கொண்ட கார்போ ஹைட்ரேட்டாக இருக்க வேண்டும். அதற்கு முழு தானிய பிரட்டை உண்ணுங்கள்.
8.பதப்படுத்தப்பட்ட புரோட்டீன் :
தசை வளர்ச்சிக்கும், உடல் சரிவர செயல்படவும் பெரிதும் உதவியாக இருப்பது புரதமே. மாமிசம் தான் உயர்தர புரோட்டீன் நிறைந்த உணவு. ஆனால், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளான ஹாட்டாக், சலாமி, சாசேஜ் போன்றவற்றை சாப்பிடக்கூடாது.
இயற்கையான புரோட்டீன்கள் நரம்பு மண்டலத்தை பாதுகாக்கிறது. ஆனால் பதப்படுத்தப்பட்ட புரோட்டீன் அதற்கு எதிர்மாறாக செயல்படும். ஆகவே இயற்கையான உயர்தர புரோட்டீன் நிறைந்த இயற்கை மீன்கள் (டூனா, சால்மன்), பால் பொருட்கள், வால்நட் மற்றும் விதைகளை சாப்பிடுங்கள்.
9.கொழுப்புச்சத்துள்ள உணவு :
கொழுப்புச்சத்துள்ள உணவுகள் உடலில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும். அதிலும் இதயம் தொடர்பான பிரச்சனைகளில் ஆரம்பித்து, அதிக கொலஸ்ட்ரால் மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சினைகள் ஏற்பட காரணமாக இருக்கும். அவை நமது மூளையையும் பெரிதும் பாதிப்பதனால் பக்கவாதம் வர காரணமாக இருக்கிறது. மேலும் இவ்வகை உணவுகளை நீண்ட காலம் சாப்பிட்டால், அது நமது மூளையை சுருங்கச் செய்யும். இதனை தொடர்ந்து, தமனிகள் பாதிக்கக்கூடும். இதனை தடுக்கவும், பக்கவாதம் வராமல் காக்கவும் கொழுப்புச்சத்துள்ள உணவுகளை குறைவாகவே சாப்பிட வேண்டும்.
10.செயற்கை இனிப்புக்கள் :
சிலர் ஒரே நாளில் எடை குறைப்பதற்காக சர்க்கரைக்கு பதில் செயற்கை இனிப்புகளை உபயோகிப்பதால் ஸ்லிம் ஆகி விடலாம் என்று நினைக்கிறார்கள். ஆம்! செயற்கை இனிப்புக்களில் மிக குறைவான கலோரிகள் தான் இருக்கின்றன.
ஆனால், அவை நன்மை தருவதை விட தீமையை தான் அதிகம் தருகின்றன. அதிலும் நீண்ட காலம் செயற்கை இனிப்புக்களை உபயோகித்தால், அது மூளையை பாதிக்கும். மேலும் அதிக அளவு செயற்கை இனிப்புக்களை உபயோகித்தால், அது அறிவுத்திறனையும் பாதிக்கும்.
11.நிக்கோட்டின் :
வயதான தோற்றம், மூச்சு காற்றில் துர்நாற்றம், நுரையீரல் புற்றுநோய் போன்ற பாதிப்புக்களை உண்டாக்குவதோடு மட்டும் நிக்கோட்டின் நின்று விடுவதில்லை. இது ரத்தத் தந்துகிகள் எனப்படும் சிறிய ரத்தக் குழாய்களுக்கு இறுக்கம் கொடுத்து, நரம்பியல் அலைப் பரப்பிகளின் உற்பத்தி மற்றும் செயல்பாடுகளை பாதிப்படைய செய்யும்.
குறிப்பாக ரத்தத் தந்துகிகள் தான் மூளை செயல்பாட்டிற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. ஆகவே நிக்கோட்டின் உள்ள உணவுப் பொருட்களை அறவே தவிர்ப்பது நல்லது.
1 comments:
ஆகவே ஒண்ணையும் சாப்பிடக்கூடாது. சரி. அப்படியே செஞ்சுடறேன்.
Post a Comment