.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, November 16, 2013

பீர் பாட்டில்களின் மேல் இந்து தெய்வங்களின் உருவங்கள் நீக்கம்!

பீர் பாட்டில்களில் இந்து கடவுளர்களான விநாயகர், லக்ஷ்மி ஆகியோரின் உருவங்களை லேபிள்களாகப் பதிந்து விற்பனை செய்து வந்த ஆஸ்திரேலிய நிறுவனத்துக்கு பலத்த எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, அந்த நிறுவனம் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டதுடன், லேபிள்களை அகற்றுவதாகவும் கூறியது.இதையடுத்து இந்த விஷயத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவித்த ஆஸ்திரேலிய நிவேதா பகுதி இந்து அமைப்பைச் சேர்ந்த ராஜன் ஸேத் இது சரியான, வரவேற்கத்தக்க நடவடிக்கை என்று கூறினார்.இதற்காக, தங்களுக்கு உதவி புரிந்த, தங்கள் குரலுக்கு செவிசாய்த்து, ஆதரவுக் கரம் நீட்டிய அனைத்து ஹிந்துக்களுக்கும் தங்கள் நன்றியைத் தெரிவிப்பதாக அவர் வெள்ளிக்கிழமை இன்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

                                                       nov 9 - vanigam god beer


சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் மதுபான நிறுவனம் ஒன்று தங்களது பீர் பாட்டில்களின் மேல் இந்துக் கடவுள்களாகிய பிள்ளையார், லக்ஷ்மி போன்ற தெய்வங்களின் உருவங்களை அச்சடித்திருந்தது. இதனைக் கேள்விப்பட்ட ஆஸ்திரேலியாவாழ் இந்து மதத்தினர் கடும் அதிர்ச்சியடைந்தனர். இத்தகைய தெய்வ உருவங்களை மதுபாட்டில்களின் மேல் வெளியிடுவது மிகவும் பொருத்தமற்ற செயலாகும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

தற்போது வர்த்தகம் என்பது, மத நம்பிக்கைகளிலிருந்து வேறுபட்டது என்பதை அவர்கள் உணரவேண்டும் என்று கூறியுள்ள அவர், மத நம்பிக்கைகளை வியாபாரிகள் மதிக்க வேண்டும் என்றார்.இதை அடுத்து, நவ.24ம் தேதிக்குள் பீர் பாட்டில்களில் வேறு டிசைன்களை அளிப்பதாகவும், அதற்காக உலகெங்கிலும் இருந்து கிராபிக் டிசைனர்கள், ஓவியர்களிடம் டிசைன்களை வரவேற்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

0 comments:

 
back to top