ஜியோசி எனப்படும் கடல் நீரோட்டத்தை ஆராயும் ஐரோப்பிய செயற்கை கோள் ஒன்று செயல் இழக்க செய்யப்படுகிறது. இன்று அல்லது நாளை அது பூமியில் விழக்கூடும் என விஞானிகள் கருதுகின்றன.
கடந்த 2009ம் ஆண்டு மார்ச் மாதத்தில் கடல் நீரோட்ட ஈர்ப்பு பற்றி ஆயவு செய்ய இது விண்ணில் செலுத்தபப்ட்டது. ஆனால் அக்டோபர் 21ம் தேதி எரிபொருள் பிரச்சனையால் பராமரிப்பு இன்றி சக்தி இழந்தது. சுமார் 80 கிலோமீட்டர் உயரத்தில் இந்த விண்கலம் உடைந்து 160 கி.மீ உயரத்தில் இருந்து வெற்றுப்பாதையில் விழக்கூடும் என ஐரோப்பிய விண்வெளி ஏஜென்ஸி தெரிவிகிறது.
அதோடு இந்த விண்கல துண்டுகள் எந்த நேரத்தில் எந்த இடத்தில் விழும் என கணிக்கமுடியாது என்றும் ஐரோப்பிய விண்வெளி ஆராச்சியாளர் ஒருவர் தெரிவித்தார். மேலும் ஒரு மனிதன் விண்கலம் தாக்கி இறந்தான் என்பது இதற்கு முன் நடந்ததில்லை. மின்னல் தாகுவதை விட விண்கலம் தாக்குவது 65 ஆயிரம் மடங்கு குறைவு.
1997ம் ஆண்டு துல்சா, ஒக்லஹோமாவில் ஒரு பூங்காவில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த போது வில்லியம்ஸ் எனபவர் மீது ஒரு உலோக துண்டு விழுந்து தாக்கியது. அப்போது அது டெல்டா ராக்கெட் துண்டு என உறுதி செய்யப்பட்டதாக உள்ளூர் செய்தி தெரிவித்தது.
இந்த சம்பவத்தில் வில்லியம்ஸ் காயம் அடைந்தார். என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment