.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, December 3, 2013

காவல்துறையினரிடம் ஆவணம் இன்றி சிக்கினால் இனி ஒரு எஸ்எம்எஸ் போதும்!

காவல்துறையினரிடம் ஆவணம் இன்றி சிக்கும்போது எஸ்எம்எஸ் மூலம் இனி இன்சூரன்ஸ் பற்றிய முழு தகவலையும் பெறலாம்.


எல்லா வாகனங்களுக்கும் இன்சூரன்ஸ் மிக அவசியம். சில சமயங்களில் சர்வீஸ் விடும்போது, வண்டியை கழுவும்போது, ஜெராக்ஸ் எடுக்க மறந்துவிடும்போது வாகனங்களில் இன்சூரன்ஸ் பேப்பரை மீண்டும் எடுத்து வைக்க மறந்துவிடுகிறோம். இதுபோன்ற சமயங்களில் சாலைகளில் போக்குவரத்து காவல்துறையினரிடம் சிக்கினால், தர்மசங்கடமான நிலை ஏற்படும்.


இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காக இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையம் (ஐஆர்டிஏ) அதிரடி திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதுகுறித்து அதன் வாகனங்கள் காப்பீடு பிரிவு உறுப்பினர் ராம்பிரசாத் கூறியதாவது:-


வாகனத்துக்கு காப்பீடு செய்துள்ளவர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய ஆரம்பித்துள்ளோம். இதன் மூலம், வாகன எண்ணுடன் எங்களின் குறிப்பிட்ட எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பினால், அதன் காப்பீடு பற்றிய விவரம் முழுமையாக அனுப்பி வைக்கப்படும். இது சட்டப்பூர்வமானது என்பதால், காவல்துறையினரிடம் அதை காண்பிக்க முடியும்.


மேலும், விபத்து சமயங்களில் சம்பந்தப்பட்ட வண்டியின் எண் மட்டும் தெரிந்திருந்தால் போதும், அதன் மூலம் அதன் உரிமையாளர் பெயர், விவரம் ஆகியவற்றை இதே எஸ்எம்எஸ் மூலம் தெரியவரும்.


காவல்துறையினருக்கும் இத்திட்டம் மிக உதவியாக இருக்கும். விரைவில் இத்திட்டம் அமலுக்கு வர உள்ளது என்றார்.

0 comments:

 
back to top