.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, December 4, 2013

குடும்பத்தில் பிரச்சினைகளை சமாளிக்க Tips!

பிரச்சினை இல்லாமல் மனிதனும் இல்லை பிரச்சினை இல்லாதவன் மனிதனே இல்லை` என்று கூறுவார்கள். அந்தளவிற்கு எங்கும் எவ்விடத்திலும் பிரச்சினை தான். வெளிப்பிரச்சினைகளை பேசித்தீர்த்துக் கொள்ளலாம்.

அதுவே அளவுக்கதிகமாகும் போது பிரச்சினைக்குரிய நபரையோ பிரச்சினையையோ தவிர்த்து விடலாம். ஆனால் பிரச்சினை குடும்பத்தில் ஏற்படும் போது தான் தொடங்குகிறது தலைவலி காதலித்துத் திருமணம் முடித்தவர்களாகட்டும் பெற்றோர்களால் நிச்சயித்து திருமணம் முடித்தவர்களாகட்டும் பிரச்சினை இல்லாமல் வாழ்நாள் முழுவதும் வாழ்வார்களேயானால் அது கின்னஸ்ஸில் பதிய வேண்டிய சாதனை தான்.

"இல்லவே இல்லை நாங்கள் இதுநாள்வரைக்கும் எந்த சண்டையும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றோம்` எனக் கூறும் சில தம்பதியினரும் உள்ளனர். நான் மறுப்பதற்கில்லை. ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடன் வாழ்பவர்களாக இருப்பார்கள். ஒருவர் கோபப்படும் போது மற்றவர் அமைதியாக இருப்பதனாலேயே குடும்பச் சமனிலை பேணப்படுகிறது.

இதற்குப் புரிந்துணர்வு மிக முக்கியமானதாகும். "ஒருவரின் சுதந்திரம் மற்றவரின் மூக்கு நுனிவரை` எனக் கூறுவார்கள். தனிநபரின் சுதந்திரத்திற்கு எவ்வகையிலும் பங்கம் வரும்போது கோபமும் கூட வருகின்றது. இருபாலாருக்கும் கோபம் ஏற்பட்டாலும் ஒப்பீட்டளவில் ஆண்கள் அதிகம் கோபப்படுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. இதுவே நமது சமூகத்தில் குடும்பத்தில் நிகழும் போது கணவன் அதிகம் கோபப்படும் சந்தர்ப்பத்தில் மனைவி அனுசரித்துப் போக வேண்டிய கட்டாயத்தில் தான் இருக்கின்றாள்.

இவ்விடயத்தில் பெண்ணியத்தைப் பற்றியும் பெண் அடிமைத்தனத்தை பற்றியும் பேசிக்கொண்டு இருப்பார்களேயானால் வாழ்க்கையைத் தொலைத்து விட்டு நடுவீதியில் தான் நிற்க வேண்டும். எனவே நடைமுறைக்கு ஒத்து வரக்கூடிய வகையில் சில நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் குடும்பச் சச்சரவுகளை வீதிவரை கொண்டு வராது வீட்டிலேயே தீர்த்துக் கொள்ளலாம். கணவனின் தேவையற்ற கோபத்தைத் தவிர்ப்பதற்கான சில வழிகளைக் கூறுகின்றேன் கவனமாகக் கேளுங்கள். அந்தக் காலத்தில் கணவன் வேலைமுடிந்து வரும்போது இன்முகத்துடன் வரவேற்று உபசரியுங்கள் என்று கூறினார்கள். இந்தக் காலத்தில் கணவனெல்லவா உபசரிக்க வேண்டியுள்ளது. எனவே பழைய புராணத்தை இப்பொழுதும் பாடிக்கொண்டிருக்க முடியாது. கணவன் மனைவி இருவமே வேலைக்குச் செல்பவர்களாக தற்போது காணப்படுகின்றனர்.
       
அவ்வாறு இல்லாவிடினும் தற்போதைய நிலைமைகளில் குடும்பத்தை கொண்டு நடாத்துவது மிகக்கடினம். இவ்வாறு இருவருமே தொழில் செய்பவர்களாக இருக்கும் பட்சத்தில் கூடியவரை மனைவி கணவனுக்கு முன் வேலை முடிந்த வந்துவிடுவது நல்லது. காரணம் கணவன் வேலையால் வரும்போது உங்களைக் காணும் பட்சத்தில் மிகுந்து மனமகிழ்ச்சி அடைவார். அதுவும் நீங்கள் அவர்களது மனதுக்கு ஆறுதலாக இரண்டு வார்த்தைகளை கதைத்துக் கொண்டே அவரது சேட், ஷநிக்களை கழற்றிவிடும் போது சொல்லவும் வேண்டுமா அவர்களது சந்தோசத்தை அதேபோல் கணவன் தனது வேலைப்பளுவைப் பற்றி உங்களுடன் கலந்துரையாடும் போது அவர்களது சுமைகளைப்பகிர்ந்து கொள்ளாமல் நீங்கள் அதிகப்பிரசங்கித்தனமாக நீங்களும் வேலை பார்க்கிறீர்கள் என்கின்ற தலைக்கனத்தில் "எனக்கும் வேலை தான்“ நான் அதையெல்லாம் முடித்து வந்த வீட்டு வேலைகளைப் பார்க்கலயா?` என்று கூறாதீர் கள். இது அவர்களின் சினத்தை இன்னும் அதிகப்படுத்தம்.

அதுமட்டுமல்லாது நீங்கள் சிலசமயங்களில் அவர்களைவிட அதிக சம்பளம் உழைக்கக்கூடும். ஒரு போதும் அந்தத் திமிரில் கதைத்து விடாதீர்கள் உங்கள் வாழ்க்கையே இருண்டு விடும். வேலை முடிந்து வரும் கணவனிடம் உங்கள் குறைகளை அடுக்காதீர்கள். உதாரணத்திற்கு நீங்கள் மதியம் சமையலில் ஈடுபடும் போது உப்பு முடிந்திருப்பதை அவதானிப்பீர்கள். அதைக் கணவன் வீட்டுக்கு வந்ததம் "ஒரு கிழமையா உப்பு முடியப்போகுதெண்டு சொல்லிக் கொண்டிருக்கிறன். அதைக் கொஞ்சமாவது காதில் விழுத்தினால் தானே` என்று பொரிந்து தள்ளாதீர்கள்.

உங்களுடன் படித்த அல்லது வேலை பார்க்கும் ஆண் நண்பர்களுடன் பழகும் போது கணவருக்கு தெரியும்படியாக அவருக்குக்கூட அறிமுகப் படுத்திவிட்டு பழகுங்கள். இதைவிடுத்து உங்கள் கணவருக்கு பிற ஆடவருடன் நான் பழகுவது பிடிக்குமோ என நீங்களாகவே நினைத்துப் பயந்து அவர்களுடன் ஒழித்துக் கதைப்பதால் எப்போதாவது கணவருக்கு நீங்கள் பழகுவது தெரிய வந்தால் தேவையில்லாத சந்தேகங்களுக்கு வித்திடும். எனவே வெளிப்படையாக இருங்கள். அதை உங்கள் கணவர் புரிந்து கொள்ளாவிடில் அது அவரது பலவீனம் அல்லது உங்கள் தலைவிதி உங்களுடன் இருக்கும் உங்கள் தாய் தந்தையரைப்பற்றியோ விசேடமாக உங்கள் மாமா மாமியைப் பற்றியோ தேவையில்லாமல் முறையிடாதீர்கள்.

கூடியவரை அவர்களை அனுசரித்துப்போங்கள். அதிகளவான குடும்பங்களில் பிரச்சினை இவர்கள் மூலம் தான் ஆரம்பிக்கின்றது. உங்கள் கணவனிடம் குறைகள் காணுமிடத்து குறிப்பாக அவர் நடத்தையில் சந்தேகம் வரும்போது "அவர் அப்படிச் செய்யக்கூடியவர் தானா?` என்று உங்களுக்குள்ளேயே சுயமதிப்பீடு செய்து முடிவெடுங்கள் ஒரு தீர்மானத்திற்கு வரமுடியாத சந்தர்ப்பத்தில் மட்டும் அவருடன் அதுபற்றி நேரடியாகக் கதையுங்கள். தேவையில்லாமல் உங்கள் நண்பர்களிடமோ உறவினர்களிடமோ இது பற்றி கதைக்காதீர்கள்.

மிக முக்கியமான விடயம் என்னவெனில் உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் இடையிலான தாம்பத்திய உறவு தான். அதிகமான குடும்பங்களில் அடிக்கடி கணவன் மனைவிக்கிடையில் தேவையற்ற சச்சரவுகள் எழும். அதற்கு மூல காரணம் படுக்கையறையில் ஏற்பட்ட திருப்தியளிக்காமையாகத் தான் இருக்கும்.. பொதுவாக ஆண்களின் செக்ஸ் ஆசைகளைப்பற்றி ஓரளவாவது எழுத்து ஊடகங்கள் மூலம் அறிந்து வைத்திருப்பது நல்லது. அதற்கேற்றால் போல் செயற்படுங்கள். அதிகமாக ஆண்கள் சிறு சிறு செக்ஸ் விளையாட்டுக்களில் தான் அதிகமாக ஆர்வம் காட்டுவார்கள். நீங்கள் சமைக்கும் போதோ அல்லது துணிதுவைக்கும் போதோ அல்லது குளிக்கும் போதோ வந்த குழந்தைப்பிள்ளைகளைப் போல் சீண்டுவார்கள். நீங்கள் அருவருக்காதீர்கள். அல்லது அறவே நாட்டம் இல்லாதது போல் காட்டிக் கொள்ளாதீர்கள். நீங்கள் வேறு விடயங்களுக்கு மறுப்பது வேறு இவ்விடயத்தில் மறுப்பது வேறுவிதமாக அமைந்து விடும். இது ஆசையாக உங்களை அணுகும் கணவரை பல மடங்கு தாக்கும். அவர்கள் மனமுடைந்து விடுவார்கள். படுக்கையறைதான் செக்ஸ் இற்குரிய இடமென்ற கருதாதீர்கள். வீட்டின் மற்றய இடங்கள் தான் அதிகளவான இன்பத்தை உண்டு பண்ணும். ஆக மொத்தத்தில் உங்கள் கணவரைப் புரிந்து நடவுங்கள் இல்லறம் சிறக்கும். .

0 comments:

 
back to top