அறை எண் 305ல் கடவுள் மற்றும் கண்ணா லட்டு தின்ன ஆசையா படங்களுக்குப் பிறகு சந்தானம் முக்கிய வேடத்தில் நடித்துவரும் திரைப்படம் வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.
கடந்த 2010ல் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி மாபெரும்வெற்றியடைந்த மர்யாத ராமண்ணா என்ற தெலுங்குத் திரைப்படத்தின் ரீமேக்கான இப்ப்படத்தினை பி.வி.பி.சினிமாவுடன் இணைந்து தயாரித்துவருகிறார். இப்படத்தினை நகைச்சுவை நடிகரும், முத்திரைதிரைப்படத்தின் இயக்குனருமான ஸ்ரீநாத் இயக்கிவருகிறார்.
கடந்த செப்டம்பர் மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கின. மும்பை மாடலான ஆஷ்னா சவேரி இப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளார்.
புதுமுக இயக்குனர்களின் மிக முக்கியப் படங்களுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துவருகிறார். சந்தானம் ஹீரோவாக நடித்துவரும் இப்படம் வருகிற தமிழ்ப் புத்தாண்டு ரிலீசாக இருக்கலாம் என்று கிசுகிசுக்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் சூப்பர் ஸ்டாரின் கோச்சடையானும் வெளியாகம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



12:12 AM
Unknown

Posted in:
0 comments:
Post a Comment