.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, May 15, 2013

ஆப்பிள் ஐபோன் 6-க்காக தயாராகும் ஐஓஎஸ் 7!






      ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 5 மற்றும் ஐஓஎஸ் 6 ஆகியவை பழைய கதையாகிவிட்டது. இந்த 2013ஆம் ஆண்டின் ஜூன் மாதம் முதல் ஆப்பிள் ஐபோனின் அடுத்த பதிப்பானது வெளியிடப்படுமெனத்தெரிகிறது.


     ஆப்பிளின் அடுத்த பதிப்பு "ஐபோன் 6" என பெரும்பாலானோர்களால் சொல்லப்படுகிறது. இதற்காக ஐஓஎஸ் இயங்குதளத்தின் அடுத்த பதிப்பான  ஐஓஎஸ் 7 தயாராகி வருவதாகவும் அதற்கான சோதனைகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

   
நெக்ஸ்ட் வெப் என்ற இணையதளம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஐபோன் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் இயங்குதளமான ஐஓஎஸ் -7க்கான சோதனைகள் நடைபெறுகின்றன. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறியுள்ளது.


    இந்த இயங்குதளத்தை வடிவமைக்கும் குழுவிலுள்ள ஒரு பணியாளரும் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்ஐபோன் 6க்காக இந்த புதிய இயங்குதளம் உருவாக்கப்படுவதாகவும் அந்த பணியாளர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் இந்த புதிய போன் இன்னும் சில மாதங்களில் வெளியாகுமென்றும் தெரிவித்துள்ளார்.




வதந்திகளின் அடிப்படையில் ஐபோன் 6க்கான நுட்பக்கூறுகள்:
  • சூப்பர் HD தரமுள்ள கேமரா,

  • சிறப்பான பேட்டரி,

  • IGZO ரெட்டினா திரை,

  • 128 ஜிபி நினைவகம்,

  • 6 முதல் 8 வண்ணங்கள்,

  • A7 குவாட்-கோர் ப்ராசெசர்

எதிர்கால தொழில் நுட்பம்( 2020) -Future Technology Watch your day in 2020



Future Technology Watch your day in 2020






         குரங்கில் இருந்து மனிதன் பிறந்ததாக மூர்ப்பின் கோட்பாடு தெளிவுபடுத்துகின்றது. அந்த வகையில் அன்று தோன்றிய மனிதன் படிப்படியாக பல பரிமாணங்கள் பெற்று இன்று இயற்கையுடன் விஞ்ஞான ரீதியாக மோதும் அளவுக்கு மாற்றமடைந்துள்ளான்.

   
     இன்றைய உலகில் தொழில்நுட்பம் வளர்ந்தவிட்ட நிலையில் 2020ல் தொழில்நுட்பம் எவ்வாறு மாற்றம் கண்டிருக்கும் என்று நீங்கள் கற்பனை செய்து பார்த்ததுண்டா?


    இந்த வீடியோவை பாருங்கள் 2020ல் இது சாத்தியமாகும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா?


ஆப்பிள் ஐபோன் 5S & ஐபோன் 6 - புதிய வசதிகளுடன் விரைவில் அறிமுகம்



ஆப்பிள் ஐபோன் 5S & ஐபோன் 6 - புதிய வசதிகளுடன் விரைவில் அறிமுகம்


         



      ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் பற்றிய கிசுகிசுக்கள் தினந்தோறும் வெளியான வண்ணமே உள்ளன. இன்று மற்றுமொரு ஐபோன் பற்றிய வதந்தி புதிதாய் தலைகாட்டியுள்ளது.


     அதாவது ஐபோன் 5S மற்றும் ஐபோன் 6 ஆகிய இரண்டு ஆப்பிள் போன்களும் இவ்வருடமே வெளியாகப்போகிதாம்.  இந்த வதந்தியை சீனாவைச்சேர்ந்த லாவ்யோபா.காம் என்ற இணையதளம் தான் வெளியிட்டுள்ளது.


     அதன்படி, ஆப்பிள் நிறுவனம் இவ்வருடமே 2 புதிய போன்களை வெளியிடப்போவதாகவும், அதில் ஒன்று மே மாதத்திற்குள்ளும், மற்றொன்றை டிசம்பர் மாதத்திற்குள்ளும் வெளியிடுமென கூறப்பட்டுள்ளது.





     இவ்விரு ஐபோன்களும் நல்ல தொழில்நுட்பத்துடனும், அதிசிறந்த நுட்பக்கூறுகளுடனும் வெளியாகுமாம்.

    இதுவாவது உண்மையாகுமா அல்லது வதந்தியாகவே போகுமா என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Tuesday, May 14, 2013

உங்கள் சொந்த கையெழுத்துகளை எழுத்துருக்களாக மாற்ற முடியும்! How to use your own fonts in your computer 



    விதவிதமான எழுத்துருக்களைப் பயன்படுத்தி போட்டோஷாப் (Photoshop), வலைத்தளங்கள் (Websites)...  சொற்செயலிகள் (Word Processor) ஆகியவற்றில் பயன்படுத்தியிருப்போம். பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம்.

 





    இவற்றையெல்லாம் மிஞ்சும் வகையில் உங்கள் கைப்பட எழுதிய கையெழுத்துகளையே உங்கள் கணினியில் எழுத்துருவாக நிறுவிப் பயன்படுத்த முடியும்


     ஆச்சர்யமாக இருக்கிறதாஇது உண்மையும் கூட..  உங்கள் கையெழுத்துகளை உங்கள் கணினியில் பயன்படுத்தக்கூடிய வகையில் எழுத்துருவாக மாற்றித் தருகிறது ஒரு இணையதளம்.   இதற்கு தளத்தில் சொல்லப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றினாலே போதும்


   உங்களுடைய உண்மையான கையெழுத்துகளைக் கொண்டு கணினியிலும் எழுதலாம்


செய்முறை


1.  முதலில் இந்த இணையதளம் செல்லுங்கள். அங்கு Print your Template என்பதை கிளிக் செய்யுங்கள்.. 


2.   தோன்றும் பக்கத்தில் PDF paper size is A4; for all other countries: என்ற தலைப்பின் கீழ் இணைப்பைக் கிளிக் செய்துகொண்டு ஒரு கோப்பை print  செய்துகொள்ளுங்கள்


3.   பிறகு அதில் உங்கள் கைப்பட எழுத்துக்களை எழுதுங்கள். இதற்கு உங்கள் Ball Point பேனாவை உபயோகிப்பது நலம். அல்லது Skech போன்றவைகளை உபயோகிக்கலாம். இந்த படிவத்தில் உள்ள எழுத்துக்களை அனைத்தையும் நிரப்புங்கள்


4.   எப்படி நிரப்புவது என்பதை கீழுள்ள படத்தை கிளிக் செய்து பார்த்துக்கொள்ளலாம்.






பச்சை நிறத்தில் டிக் செய்துள்ளது சரியான முறை.   சிவப்பு நிறத்தில் உள்ளது தவறான முறை.   படத்தை நன்றாக கவனித்துப் பார்த்தால் புரியும்.


5.   உங்கள் எழுத்துக்களை படிவத்தின் கட்டத்தில் இருபக்கமும் நான்கு வரிகள் இருக்கும்இந்த நான்கு கோடுகளுக்குள் உங்கள் எழுத்துகள் அமைய வேண்டும். எழுத்துக்களை எழுதுவதில் கவனத்துடன் செயல்படுங்கள்


6. அனைத்து எழுத்துக்களையும் நிரப்பி முடித்துவிட்டு அந்தப் படிவத்தை ஒரு முறை Scan செய்துவிடுங்கள்.  Scan செய்த படமானது  .gif, .jpg, .jpeg, .png, .pdf, .tif, and .tiff  போன்ற ஏதாவது ஒரு கோப்புமுறைகளில் இருக்க வேண்டும். இது கட்டாயம்





7.   சேமித்த கோப்பை தரவேற்ற பக்கப்பட்டையில் உள்ள (sidebar)Upload Template  என்பதை அழுத்தவும். தோன்றும் பக்கத்தில் Font Name  என்பதில் உங்களுடைய எழுத்துருவிற்கு பெயர் கொடுங்கள். பிறகு  Choose File  என்பதைக் கிளிக் செய்து நீங்கள்  Scan  செய்த படிவப் படத்தை (Scanned Image)  தரவேற்றம் செய்துவிடவும்.




   இதற்கு கிட்ட தட்ட ஒரு நிமிட நேரம் எடுத்துக்கொள்ளும். உங்கள் இணைய இணைப்பின் வேகத்தைப் பொறுத்து கூடுதலாக ஓரிரு நிமிடங்கள் ஆகலாம்...


  அப்லோட் செய்துவிட்டு next button - அழுத்துங்கள்.. இப்போது உங்கள் கையெழுத்துகளின் மாதிரியை பார்க்கலாம்..





   அந்த பக்கத்தில் உள்ள Dowonload font என்பதை அழுத்தி உங்கள் கையெழுத்துகளைக் கொண்ட எழுத்துருக் கோப்பைப் பெற்றுக்கொள்ளலாம். இதற்கு உங்களிடம் கூப்பன் கோட் கேட்கும்.. இந்த கூப்பன் கோட்டைப் பெற நீங்கள் 10$ பேபால் முறையில் அவர்களுக்கு செலுத்த வேண்டும். ஏறக்குறைய நம்முடைய பண மதிப்பில் 500 ரூபாய். பிறகு கூப்பன் கோட்டை பெற்றுக்கொண்டு அதில் உள்ளிடவும். இப்போது உங்களுக்குத் தேவையான எழுத்துருவை தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.


எழுத்துருவை நிறுவும் முறை (Font Installation):


    தரவிறக்கிய உங்கள் எழுத்துருவை கணினியில் Font போல்டரில் நிறுவவும்இதற்கு உங்கள் கணினியில்  Font  என தட்டச்சிட்டு தேடுங்கள்..  அல்லது நீங்கள் விண்டோஸ் 7 பயன்படுத்தினால்,  Start==>control Panel==>appearance and Personalisation==>Font  என்பதை கிளிக் செய்யவும்.


   விண்டோஸ் XP பயன்படுத்தினால் அதில் Start==>settings==>control Panel==>Fonts என்பதைத் திறந்துகொள்ளுங்கள். பிறகு அதில் உங்கள் எழுத்துருவை காப்பி பேஸ்ட் செய்யவும். அல்லது  Drag and Drop  முறையில் எழுத்துருக் கோப்பை  Font Folder-ல் இழுத்துவிடவும். பிறகு கணினியை ஒரு முறை மறுதொடக்கம் (Restart) செய்துகொள்ளுங்கள்..


   மீண்டும் கணினியை இயக்கி, ஒரு சொற்செயலி  ms-word  அல்லது  wordpad  போன்ற ஏதேனும் ஒன்றில் நீங்கள் தட்டச்சிடுங்கள். அந்த தட்டச்சிட்ட எழுத்துகளை தேர்வுசெய்து உங்கள் சொந்த எழுத்துருவை தேர்ந்துடுத்துப் பாருங்கள்.. நீங்கள் கைப்பட எழுதிய எழுத்துருக்கள் கணினியில் இருக்கும்.. !!! 
 
back to top