.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, May 28, 2013

வரப் போகுது சோலார் பெயின்ட் : சுவரில் அடித்தால் வீட்டுக்கு மின்சாரம் கிடைக்கும்!!!








                          உலகின் பலபகுதிகளில் இதுவரை இல்லாத அளவு மின் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில் சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல்களை திரவ வடிவில் உருவாக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என்றும் தரையிலும் சுவரிலும் இந்த சோலார் பேனல் பெயின்டை அடித்தாலே வீட்டுக்கு வீடு, தரைக்கு தரை, சுவருக்கு சுவர் மின் உற்பத்தி நடக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள். 




                         தற்போது உலகம் முழுவதும் சோலார் மின் உற்பத்தி திட்டங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அனல், நீர்மின் திட்டங்களில் மின்உற்பத்தி குறையும் பகுதிகளில் சோலார் மின் உற்பத்தியில் அரசுகள் கவனம் செலுத்தி வருகின்றன. 




                    அதே சமயம் மக்களும் அரசுகளும் இதில் சற்று தயக்கம் காட்டுவதற்கு காரணம்.. சோலார் பேனல்கள் அமைப்பதற்கு ஆகும் அதிகப்படியான செலவு.ஆனால் வருங்காலத்தில் சோலார் பேனலுக்கு அதிகம் செலவிட அவசியம் இல்லை என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.






 



                    இதுபற்றி அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் உள்ள பஃபல்லோ பல்கலைக்கழக எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் துறை பேராசிரியரும் ஆராய்ச்சியாளருமான கியாவ்கியாங் கான் கூறும் போது,”: ஒளி ஆற்றலை மின்சாரமாக மாற்றும் திறன் பெற்ற சோலார் செல்களின் தொகுப்புதான் சோலார் பேனல் எனப்படுகிறது.



                          பொதுவாக பாலி கிரிஸ்டலைன் சிலிகானை கொண்டுதான் இந்த பேனல் உருவாக்கப்படுகிறது. மெலிதான பிலிம் போல பேனலை தயாரிப்பதென்றால் அமார்பஸ் சிலிகான் அல்லது காட்மியம் டெல்யூரைடு பயன்படுத்தப்படுகிறது. இந்த இரண்டு வகையுமே அதிக செலவு ஏற்படுத்தக் கூடியவை. 



                        அதே சமயம் குறைந்த செலவிலான சோலார் பேனல்களை உருவாக்கும் முயற்சி உலகம் முழுக்க நடக்கிறது. அந்த வகையில் பிளாஸ்மோனிக் தன்மை கொண்ட ஆர்கானிக் வகை பொருட்களை சோலார் பேனலாக பயன்படுத்தினால் அதிக மின் உற்பத்தி செய்ய முடியும். செலவும் குறைவு என கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இது திரவ வடிவில் இருப்பதால் பயன்படுத்துவதும் எளிது









                      திரவ வடிவில் இருக்கும் சோலார் பேனலை சுவர், தரை என எந்த பகுதியிலும் பெயின்ட் போல எளிதில் பூச முடியும். வெளிச்சம் கிடைக்கும் எல்லா இடத்திலும் இந்த பெயின்ட் அடித்தால் மின் உற்பத்தியும் அதிகளவில் நடக்கும். 



                     இது மட்டுமின்றி கார்பனை அடிப்படையாக கொண்ட சிறு மூலக்கூறுகள்,  பாலிமர்கள் ஆகியவற்றை பயன்படுத்தி பிலிம் வகை சோலார் பேனல் உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளோம். இவற்றையும் குறைந்த செலவில் தயாரிக்க முடியும்.”என்று கியாவ்கியாங் கான் கூறினார்.




<><><><O><><><><O><><><><O<><><><>




 Wet Solar Power (New Affordable Solar Paint Research):-



                      The concept of a liquid, paint-on solar cell is old news these days, but a research team from the University at Buffalo in New York has come up with an interesting new angle. The team is working on a paintable solar material enhanced with nanoparticles of metal, in order to achieve a cost competitve level of efficiency. Does that mean solar paint could be as cheap as ordinary paint some day?





கூடுதல் தகவல்களுக்கு இங்கே வரவும்.





5 G தகவல் பாதை - புது தகவல்!






                   இன்றைய 4ஜி தகவல் பரிமாற்ற வேகத்தினைக் காட்டிலும் பல நூறு மடங்கு வேகமாகச் செல்லும் அலை வரிசைக் கற்றையினையும், அதற்கான ரிசீவரையும் தான் வடிவமைத்துள்ளதாக சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 




                       இந்த தொழில் நுட்பத்தை வர்த்தக ரீதியாகப் பொது மக்களுக்கு வழங்குவதற்கான ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், வரும் 2020 ஆம் ஆண்டில் இதனை வழங்க முடியும் எனவும் சாம்சங் தெரிவித்துள்ளது. 









                     


                       இந்த அலைக்கற்றை கட்டமைப்பு மில்லிமீட்டர் அலைவரிசையைக் கையாளும் திறனைக் கொண்டுள்ளதாகவும், தற்போது 4ஜி அலைவரிசையில், வெகு தூரத்திற்கு தகவல் பரிமாற்றத்தில் ஏற்படும் சிக்கல்களை இது தீர்த்துவிடும் என்று கூறுகிறது. 




                      இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில், இது 28 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கி, நொடிக்கு 1.056 கிகா பிட்ஸ் தகவல்களைக் கடத்தும் திறன் கொண்டதாகத் தற்போது அமைந்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.





                    எனவே, தற்போதுள்ள 4ஜி வேகத்தினைக் காட்டிலும் பல நூறு மடங்கு வேகத்தில் தகவல்களை 5ஜி அலைவரிசைக் கட்டமைப்பில் அனுப்ப முடியும். 

  


                 இந்தியா உட்பட, உலகின் பல நாடுகளில் இன்னும் 4ஜி அலைவரிசையே வர்த்தக ரீதியாக மக்களிடம் அறிமுகமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

ஒரு கம்ப்யூட்டரின் விலை ரூ. 3.5 கோடி - ஆப்பிள்!!!








                ஆப்பிள் நிறுவனம் தயாரித்த ஒரு கம்ப்யூட்டர், 3.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டிருக்கிறது.



                  1976-ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் முதன்முதலாக தயாரித்த 200 கம்ப்யூட்டர்களில் இதுவும் ஒன்று என்பதுதான் இந்த அதிக விலைக்கு காரணம். 



                          எனினும், இந்த 200 கம்ப்யூட்டர்களில் வேலை செய்யும் நிலையில் உள்ளவை 6 மட்டுமே. அதில் ஒன்றுதான் மூ்ன்றரை கோடி ரூபாய்க்கு விலை போயுள்ளது.










                         ஜெர்மனியைச சேர்ந்த ப்ரெகர் (Breker) என்ற நிறுவனம் நடத்திய ஏலத்தில் ஆசிய கண்டத்தை சேர்ந்த அடையாளத்தை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாத ஒருவர் இந்த கம்ப்யூட்டரை விலைக்கு வாங்கியுள்ளார்.




                     ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தை ஸ்டீவ் ஜாப்சுடன் இணைந்து தொடங்கிய வாஸ்னியாக் (Wozniak) இதில் கையெழுத்திட்டுள்ளார் என்பது இதன் கூடுதல் சிறப்பு. 









                   இதுபோன்ற பழமையான ஒரு ஆப்பிள் கம்ப்யூட்டர் கடந்தாண்டு 3 கோடி ரூபாய்க்கு விலை போனது.

Monday, May 27, 2013

15 GB இலவசம் - Google அதிரடி அறிவிப்பு!!!








                 தன் ஜிமெயில் தளத்தில், அதுவரை யாரும் தராத வகையில், அதிகக் கொள்ளளவில், இலவசமாக ஹார்ட் டிஸ்க் இடம் தந்து கூகுள் பிரபலமானது. தற்போது கூகுள் இலவசமாக இதுவரை தந்து வந்த டிஸ்க் இடத்தின் அளவை 15 ஜிபியாக உயர்த்தியுள்ளது.



                   கூகுள் சந்தாதாரர்கள் அனைவரும், இனி ஜிமெயில் அக்கவுண்ட்டில் 10 ஜிபி இடமும், கூகுள் ட்ரைவ், கூகுள் ப்ளஸ் மற்றும் போட்டோக்கள் பதிந்து வைக்க, மேலும் 5 ஜிபி இடமும் பெறலாம். இந்த மூன்று சேவைக்குமாக மொத்தமாக 15 ஜிபி இடம் வழங்கப்படுகிறது. 



                  ஒரு பிரிவில் கூடுதலாகப் பயன்பாடு இருந்து, மற்றதில் குறைவாக இருந்தால், குறைவாக உள்ள பிரிவின் இடம், அதிகமாகப் பயன்படுத்தப்படும் பிரிவிற்குப் பயன்படுத்தப் படலாம். 



                  எடுத்துக் காட்டாக,    கூகுள் ட்ரைவில் அதிகமான பைல்களை வைத்து, அதில் உள்ள 5 ஜிபி இடம் அதற்குப் போதுமானதாக இல்லை எனில், ஜிமெயில் பிரிவில் இடம் இருந்தால், அதனை எடுத்துக் கொண்டு, அதில் பைல்கள் சேவ் செய்யப்படும். இவ்வாறே, கூகுள் ப்ளஸ் போட்டோ சேவையில் இடம் தேவை என்றாலும், மற்ற இரு பிரிவுகளில் இடம் இருப்பின் இடம் எடுத்துக் கொள்ளலாம்.






                


                  15 ஜிபிக்கும் மேலாக இடம் தேவைப்படுபவர்கள் என்ன செய்திட வேண்டும்? 5 டாலர் வாங்கிக் கொண்டு, 100 ஜிபி இடம் ஒரு மாதம் பயன்படுத்த கூகுள் அனுமதிக்கிறது. அப்படியானால், கட்டணம் செலுத்தினால், அதிக பட்ச இடமாகக் கூகுள் எவ்வளவு தருகிறது என்று அறிய ஆவலா? மாதத்திற்கு 800 டாலர் செலுத்தி, 16 டெரா பைட் இடத்தினை கூகுளிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். 



                   சென்ற ஆண்டில், கூகுள் அதன் கூகுள் ட்ரைவ் சேவையினைத் தொடங்கிய காலம் முதல், க்ளவுட் சேவைப் பிரிவில் இயங்கும் மற்ற பிரிவினருக்குப் போட்டியாக, இடம் வழங்குவதில் முதல் இடத்தைக் கொண்டிருந்தது. 




                        இதனால், மற்ற சேவை நிறுவனங்களும், அதே போல் தர வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானார்கள். மைக்ரோசாப்ட் ஸ்கை ட்ரைவ் மற்றும் ஆப்பிள் ஐ-க்ளவ்ட் இந்த வகையில் போட்டியைச் சந்தித்தன. ஆனால், சிறிய நிறுவனங்களான ட்ராப் பாக்ஸ், பாக்ஸ், சுகர்சிங்க் மற்றும் யு சென்ட் இட் (DropBox, Box, SugarSync and YouSendIt) ஆகியவை போட்டியைச் சமாளிக்க முடியாமல் திணறுகின்றன. 




                  ட்ராப் பாக்ஸ் 2ஜிபி இடம் இலவசமாகத் தருகிறது. ஏறத்தாழ 10 டாலருக்கு, ஒரு மாதம் பயன்படுத்த 50 ஜிபி இடம் தருகிறது. மைக்ரோசாப்ட் ட்ரைவ் 7 ஜிபி இடம் இலவசமாகத் தருகிறது. இவை அடுத்து என்ன செய்யப் போகின்றன என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.


 
back to top