.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, August 22, 2013

ஹைக்கூ கவிதைகள்...

தெருவிளக்கு:

மழைவிட்ட நேரம்
தேங்கிய நீரில் முகம் பார்த்தது
தெருவிளக்கு..

அளவீடு:
நீந்தி நீந்தி சோர்ந்து விட்டது
தொட்டியை அளவெடுக்கிறது
மீன்தொட்டியில் தங்கமீன்!

தேசிய கீதம்:
அரசியல்வாதிகளை
நாற்காலியை விட்டு
எழச் செய்து விடுகிறது
தேசிய கீதம்!

மாற்றம்:
வசந்தம்
வேலையின்றிக் கிடக்கிறது
பனைவிசிறி...

உழைப்பு:
விடிய விடிய உழைத்தும்
வியர்வை இல்லை
கடிகார முட்கள்.

நட்சத்திரம்:
யார்சூட மலர்ந்திருக்கின்றன
விண்வெளித் தோட்டத்தில்
நட்சத்திரப் பூக்கள்...

ஏக்கம்:
பால் குடித்த பிள்ளையாரை
ஏக்கமாய் பார்க்கும்
பசித்த சிறுமி.

பனித்துளி:
பச்சை நாற்றுகளின்
பனித்துளி கண்ணாடிகளில்
வியர்வைபிம்பங்கள்...

மணிக்கூண்டு
கல்லூரி மணிக்கூண்டு
பழைய மாணவன்
விசாரிக்கும் மணியோசை

பிரபலங்களின் பின்புலம்:


உலக அளவில் புகழ்பெற்று அவர்கள் இறந்தும், இறவாப் புகழுடன் வரலாற்றில் இடம்பிடித்துள்ள எத்தனையோ பெரிய பெரிய பிரபலங்களின் பின்புலம்(பேக்ரவுண்டு) மிகவும் எளிமையாகவும், வறுமையாகவும் இருந்துள்ளது. இதற்கு எத்தனையோ எடுத்துக் காட்டுகள் உள்ளன.அதில் சில, 

வில்லியம் ஷேக்ஸ்பியர் எனும் உலக இலக்கிய மேதையின் அப்பா குதிரை லாயத்தினை பராமரித்து வருபவராக இருந்துள்ளார்.

தாமஸ் ஆல்வா எடிசனின் தந்தையோ படகு செய்து வாழ்க்கை நடத்திய ஏழையாக இருந்துள்ளார்.

பெஞ்சமின் பிராங்ளின் தந்தை மெழுகுவர்த்திகளை வாங்கி விற்பனை செய்யும் வியாபாரியாக இருந்துள்ளார்.


பெரும் ஆட்சியாளராக இருந்த ஹிட்லரின் தந்தை சாதாரண கட்டடத்தொழிலாளி.

ஆபிரகாம் லிங்கத்தின் அப்பாவோ சாதாரண கூலித் தொழிலாளியாக இருந்துள்ளார்.


அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பில் கிளிண்டனின் அப்பா சாதாரண வியாபாரிதான்.

ஆங்கில அகராசியின் ஆசிரியரான சாமுவேல் ஜான்சனின் தந்தை மிகுந்த வறுமையில் வாழ்ந்து வந்த புத்தக வியாபா‌ரியாவார்.

மொழிகளைத் தாண்டி உலக மக்களையே சிரிப்பில் ஆழ்த்திய சார்லி சாப்ளின் தந்தை வீட்டு வேலைக்காரராக இருந்துள்ளார்.

எனவே நாம் இருக்கும் இடம் வேண்டுமானால் கீழே இருக்கலாம். ஆனால் இருக்கப் போகும் இடம் மிக உயர்ந்ததாக இருக்க நாம் தான் முயல வேண்டும். பெற்றவர்களின் வழிகாட்டுதல் எத்தனை பேருக்குக் கிடைக்கும்?  மேற்கண்டவர்களுக்கெல்லாம் அவர்களது அப்பாக்களின் வழிகாட்டுதல் இருந்திருக்குமா என்ன? அவர்களாகவே அவர்களுக்கென ஒரு பாதையை தேர்ந்தெடுத்து அதில் முன்னேற்றத்தையும் தனித்துவத்தையும் வரலாற்றில் இடம் பிடித்துள்ளனர்.

" உழைப்பிற்கான முதற்படி, வெற்றிக்கான ஏணிப்படி"

உங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா....?


அதற்கு முன் கீழே உள்ள தகவல்களைப் பற்றிச் சிந்தியுங்கள்!

எல்லா பெட்ரோல் பம்புகளும் தங்கள் சேமிப்புத் தொட்டிகளை நிலத்துக்கு அடியில் பதித்து வைத்திருக்கின்றன. நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் போதே எரிபொருள் அடர்த்தியுடன் இருக்கும். வெப்பநிலை அதிகரிக்கும்போது, பெட்ரோல் விரிவடையும். எனவே, மதியம், மாலையில் நீங்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினால், அது மிகச்சரியாக ஒரு லிட்டர் இருக்காது. எனவே, நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் அதிகாலை நேரங்களில் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்புங்கள்.பெட்ரோல் வணிகத்தில் வெப்ப அளவும், அடர்த்தியும் மிக முக்கியமானவை. பெட்ரோல் ஒரு டிகிரி அதிக வெப்பநிலையில் இருந்தால் அது மிகப் பெரிய மாற்றம். ஆனால் பெட்ரோல் பங்கில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் பார்க்கப்படுவதில்லை. அதேபோல உங்கள் வாகனத்தின் பெட்ரோல் தொட்டியை எப்பொழுதும் முழுமையாக நிரப்பாதீர்கள். அதனால் உங்களுக்கு நஷ்டமே ஏற்படும். பாதி மட்டுமே நிரப்புங்கள். அதிக எரிபொருள் இருந்தால், அந்தத் தொட்டியில் காற்று குறைவாகவே இருக்கும்.

நாம் நினைப்பதைவிட வேகமாக பெட்ரோல் ஆவியாகக் கூடியது. பங்கின் பெட்ரோல் சேமிப்புத் தொட்டிகளில் மிதக்கும் கூரைகள் இருக்கும். இதன் காரணமாக உள்ளே பெட்ரோலுக்கும் காற்றுமண்டலத்துக்கும் இடையே இடைவெளி இருக்காது. எனவே, ஆவியாதல் குறையும். வாகன பெட்ரோல் தொட்டியில் பாதி நிரப்பினால், பெட்ரோல் ஆவியாவதை ஓரளவு குறைக்க முடியும். அதேபோல நீங்கள் பெட்ரோல் நிரப்பப் போகும் போது தான், அந்த பங்கில் லாரியில் இருந்து பெட்ரோல் இறக்கப்படுகிறது என்றால், அப்போது வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள். கிடங்கின் அடியில் தேங்கியிருந்த கசடுகள் அப்போது கலங்கி இருக்கும். இது எஞ்சினை பாதிக்கும்.
 

Wednesday, August 21, 2013

வியத்தகு அறிவியல் செய்திகள்!

வியத்தகு அறிவியல் செய்திகள்

நன்கு வளர்ச்சியடைந்த ஒட்டகச்சிவிங்கியின் நாக்கு, 17 அங்குல நீளம் இருக்கும்.

மின்னல் தாக்கிய விலங்குகளை மற்ற விலங்குகள் உண்ணாது


யானையின் தும்பிக்கையில் எலும்புகள் இல்லை. ஆனால் 40 ஆயிரம் தசைகள் உள்ளன. இதனால் தான், மிகப் பெரிய பொருட்களைக் கூட யானையால் தூக்கி எறிய முடிகிறது.

ஆஸ்திரேலியாவில் வாழும் ஒருவகை மண்புழு, 10 அடி நீளம் வரை வளரும்.

மரங்கொத்திப் பறவை ஒரு வினாடிக்கு 20 முறை மரத்தைக் கொத்தும்.

முதல் உலகப்போரின் போது, தென்ஆப்பிரிக்க ராணுவத்தில் ஜாக்கி என்ற பபூன் குரங்கு உளவாளியாக செயல்பட்டது.

பனாமா கால்வாய் கட்டுமானப் பணிகளின் போது சுமார் 25 ஆயிரம் தொழிலாளர்கள் இறந்தனர். அவர்களில் 20 ஆயிரம் பேருக்கு மலேரியா மற்றும் மஞ்சள் காய்ச்சல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

நாணயங்களில் புத்தரின் உருவத்தைப் பொறித்த முதல் மன்னர், கனிஷ்கர்.

1949ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி, இந்திய அரசியல் சட்டம் அங்கீகரிக்கப்பட்டது.

இந்தியாவுக்கு முதன் முதலில் புகையிலையை அறிமுகம் செய்தவர்கள், போர்த்துக்கீசியர்கள்

இந்தியாவில் அஞ்சல் வழி கல்வித் திட்டத்தைத் துவக்கிய முதல் பல்கலைக் கழகம், தில்லி பல்கலைக் கழகம்.

காந்தியை 'மகாத்மா' என முதன்முதலாக அழைத்து பெருமைப்படுத்தியவர், ரவீந்தரநாத் தாகூர்.

18 வயது நிரம்பியபோது, இங்கிலாந்து ராணி பிரிட்டிஷ் ராணுவத்தில் மெக்கானிக்காக பணியாற்றினார்.

பண்டைய எகிப்தில் அறுவை சிகிச்சை செய்யும் போது நோயாளிகள் இறந்தால் மருத்துவரின் கைகள் வெட்டப்படும்.

பண்டைய ரோம் அரசாட்சிக்குட்பட்ட பகுதிகளில், கூர்மையான மூக்குடன் பிறக்கும் ஆண், தலைமைப் பதவியில் அமர்த்தப்படுவார்.

அனைத்தும் போலார் கரடிகளும் இடது கை பழக்கம் கொண்டவை.

ஐஸ்லாந்து நாட்டுல் ரயில் போக்குவரத்து கிடையாது.

தீபாவளி கொண்டாட்டங்களைப் போலவே, பிரேசில் நாட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகையை பட்டாசு வெடித்து கொண்டாடுகின்றனர்.

பசுக்களின் பாதுக்காப்புக்கு சட்டம் கொண்டுள்ள ஒரே நாடு, இந்தியா.

கைரேகையைப் வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறையைக் கண்டறிந்தவர் எட்வர்ட் ஹென்றி.

எவரெஸ்ட் சிகரத்தை இரண்டு முறை அடைந்த முதல் இந்தியர் நாவாங் கோம்பு.

பேனாவைக் கண்டுப்பிடித்தவர் லூயிஸ் ஜே. வாட்டர்மேன்.

எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண்மணி பச்சேந்திரி பால்.

சைகை மொழியைத் கண்டுபிடித்தவர் ஆல்பே சார்லஸ் மைக்கேல் (பிரான்ஸ்).

மனிதர்களின் புருவத்தில் சராசரியாக 550 முடிகள் இருக்கும்.
 
 
back to top