.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, September 13, 2013

என்னால் கமல் வளர்ந்தானா, அவனால் நான் வளர்ந்தேனா - பாலச்சந்தர் பரபரப்பு பேட்டி!

38 வருடத்தி்ற்கு முன்பு வெளிவந்த ‘நினைத்தாலே இனிக்கும்’ படம் தற்போது டிஜிட்டல் முறைப்படி நவீன தொழில்நுட்பத்துடன் வெளியிடப்போகிறார்கள் ராஜ் டி.வி. குடும்பத்தினர். அதுகுறித்து இயக்குனர் கே.பாலச்சந்தர் பேசியதாவது:இது அற்புதமான விழா. சீன் சீனா நினைத்துப் பார்க்கும்போது இந்த படத்திற்கு ‘நினைத்தாலே இனிக்கும் ’ என்று எப்படி பெயர்வைத்தேன் என்று எனக்கே தெரியவில்லை. எழுத்தாளர் சுஜாதாவிடம் ஒரு பாயின்ட் சொல்லி ஒரு இசைக்குழுவினர் பற்றிய கதை என்று முடிவுசெய்து, டிஸ்கஸ் செய்தோம். 32 நாட்கள் சிங்கப்பூரில் ஷுட் செய்தோம். அவ்வளவு கஷ்டப்பட்டோம். ஆனால் படம் பார்த்தபோது  பட்ட கஷ்டம் மறைந்துபோயிற்று. 38 வருடம் கழித்து இந்தபடம் இப்போது மீண்டும் வெளியிடப்போகிறார்கள் என்றபோது மிகவும் சந்தோஷமாக உள்ளது.நான் கமலிடம் அவனுக்கும் எனக்குமான உறவுபற்றி ஒன்றே ஒன்று மட்டும் தெரிந்துகொள்‌ள விரும்புகிறேன். ‘அவனால் நான்...

உடல் நாற்றம்... தவிர்க்க வழிகள்

நம் உடலில் சுரக்கும் வியர்வையில் புரதம் உண்டு. அத்துடன் பாக்டீரியா சேரும்போது அந்தப் புரதங்கள் உடைக்கப்பட்டு Propionic என்ற அமிலமாக மாறுகிறது. உடல் நாற்றத்துக்கு அதுதான் காரணம். அதீதமான வியர்வை மற்றும் அதன் காரணமாக உண்டாகும் நாற்றத்துக்கு Acid bromidrosis மற்றும் osmidrosis என்று பெயர். பெண்களுக்கு 14 - 16 வயதிலும், ஆண்களுக்கு 15 - 17 வயதிலும் இந்த வியர்வை நாற்றப் பிரச்சனை தீவிரமாக இருக்கும். நமது உடலில் கிட்டத்தட்ட 30 - 40 லட்சம் வியர்வைச் சுரப்பிகள் உள்ளன. ‘எக்ரைன்’ (eccrine) என்கிற வியர்வைச் சுரப்பிகள் நம் உடலில் எல்லா இடங்களிலும் சருமத்தின் அடியில் இருக்கும். வெளிப்புறத் தட்பவெப்பநிலை அதிகரிக்கும் போது, அதிலிருந்து உடலைக் காப்பாற்றிக் குளிர்ச்சியாக்கும்...

தவளையும் ..கொக்குகளும்.........குட்டிக்கதை

மீன்கள் நிறைந்த குளமொன்றில் அவற்றுடன் ஒரு தவளையும் வாழ்ந்து வந்தது...மீன்களை கொத்தி உணவாக்கிக் கொள்ள பல கொக்குகள் அந்தக் குளத்தைத் தேடி வருவதுண்டு...அவற்றில் இரு கொக்குகள் தவளைக்கு நண்பனாயின.அவை வந்தவுடன் தவளையை நலம் விசாரித்தப் பின்னரே தங்களுக்கு இரையான மீனைத் தேட ஆரம்பிக்கும்.கோடைகாலம் வந்தது.குளம் வற்றியது...மீதமிருந்த மீன்களும் மடிந்தன...தவளை மட்டும் செய்வதறியாது திகைத்தது.அப்போது அதன் நண்பர்களான கொக்குகள் .. தவளையைத் வேறு தண்ணீர் உள்ள இடத்தில் விடுவதாகக் கூறின.ஆனால் தவளை என்னால் உங்களுடன் சேர்ந்து பறக்க முடியாதே என்று கூறியது.அப்போது ஒரு கொக்கு ..ஒரு பெரிய குச்சியைக் கொண்டு வந்து ..அதன் நடுவில் தவளையைக் கவ்விக் கொள்ளச்...

மரமும் ..கிளியும்.........குட்டிக்கதை

பல பறவைகள் ஒரு மரத்தில் கூடு கட்டி..அதில் பழுக்கும் பழங்களை உண்டு மகிழ்ந்து வந்தன.ஒரு சமயம்..மழையில்லாமல்,மரம் வாட ஆரம்பித்தது..அதன் இலைகள் உதிர்ந்தன..பூக்கவில்லை..பழுக்கவில்லை அம்மரங்கள்.அம்மரத்தை நம்பி..அது காய்க்கும் பழங்களை நம்பி வாழ்ந்த பறவைகள் வேறு இடம் தேடி ஓட ஆரம்பித்தன.ஒரு கிளி மட்டும் ..அந்த மரத்தை விட்டுப் போகாமல்...மரத்தினடமே இருந்தது...பட்டினியால் வாடியது..தினமும் கடவுளை வேண்டியது.ஒரு நாள் கடவுள் அந்த கிளி முன் தோன்றி.. 'தினமும் என்னை வேண்டுகிறாயே...உனக்கு என்ன வேண்டும் என்றார்.'இறைவா..இந்த மரம் மீண்டும் பூத்து ..காய்க்க வேண்டும் என்றது கிளி..'இந்த மரத்தைப் பற்றி யோசிக்காது...மற்றப் பறவைகள் போல் நீயும் ஓடியிருக்கலாமே என்றார்...
Page 1 of 77712345Next

 
back to top