
கொத்துமல்லி கரிசல்மண், செம்மண் நிலத்தில் நன்கு வளரும். இது இந்தியா முழுதும் காணப்படும். இது 50 சி.எம்.உயரம் வரை வளரக்கூடியது. சிறிய இலைகளும் சிறிய அடுக்கான வெள்ளை மலர்களைக் கொண்டிருக்கும். பூக்கள் முற்றி காய்கள் பச்சையாக இருக்கும். பின் காய்கள் காய்ந்தவுடன் மரக்கலராக மாறும். இந்த காய்கள் உருண்டையாக இருக்கும். இந்த விதைகளை தனியா என்று சொல்வார்கள்.வாசனைக்காக சேர்க்கிறோம் என்று நம்மில் பலரும் நினைக்கலாம், நம் முன்னோர்கள் இதன் மருத்துவ குணம் அறிந்தே சமையலில் தவறாது சேர்த்து வந்திருக்கிறார்கள். எல்லா உணவையும் மணக்கச் செய்யும் மகிமை கொத்தமல்லிக்கு உண்டு. இதனுடைய விதை, இலை ரெண்டுமே மருத்துவக்குணம் கொண்டது. இதன் விதை, காரம், கசப்பு, துவர்ப்பு, இனிப்புன்னு...