.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, September 21, 2013

ஆண்ட்ராய்டு 4.4 KitKat அக்டோபர் மாதம் வெளியீடு!


நெஸ்ட்ளே நிறுவனம் தனது பேஸ்புக் பக்கத்தில் ஆன்டிராய்ட் 4.4 கிட் காட்  என்ற புதிய வெர்ஷன் ஒஎஸ்களை வெளியிட்டது. ஆன்டிராயட் 4.4 கிட் காட்  அக்டோபரில் வெளிவரும் என்று நெஸ்ட்ளே நிறுவனம் அறிவித்துள்ளது. ஆன்டிராய்ட் நிறுவனத்தை கூகுள் வாங்கிய பிறகு பல புதிய வெர்ஷன் ஒஎஸ்களை வெளியிட்டது.  




அண்மையில் ஆன்டிராய்ட் நிறுவனம் 4.3 ஜெல்லிபீன் ஓஎஸ்யை வெளியிட்டது. ஆன்டிராய்டின் அடுத்த வெர்ஷன் ஓஎஸ் ஆன்டிராய்ட் 4.4 கிட் காட் என்று கூகுள் நிறுவனம்  அறிவித்திருந்தது. நெஸ்ட்ளே(nestle) நிறுவனத்துடன் கூகுள் இணைந்து ஆன்டிராய்ட் 4.4 கிட் காட் மொபைல் ஓஎஸ்யை வெளியிட உள்ளது என்பது தெரிந்ததே. கூகுளின் அடுத்த நெக்சஸ் ஸ்மார்ட்போன்கள் ஆன்டிராய்ட் 4.4 கிட் காட் ஓஎஸ் உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 




Android 4.4 KitKat  வெண்ணிலா User Interface, புதிய அனிமேஷன்கள், Visual tweaks, புதிய அறிவிப்பு விட்ஜெட்கள் ஆகியவை மறு வடிவமைக்கப்பட்டு வரும் மற்றும் முன்பிருந்த அண்ட்ராய்டு நீல நிறத்தை மாற்றி பல்வேறு வண்ண விருப்பங்களில் வரும் என்று கூகுள் நிறுவனம் கூறுகின்றது. 


ஓநாயும் ஆடும் (நீதிக்கதை)!






ஒரு காட்டில் ஒரு ஓநாயும்...ஒரு வெள்ளாடும் இருந்தது,

கொழுத்த அந்த ஆட்டின் மீது ஓநாய்க்கு எப்போதும் ஒரு கண்...அதை அடித்து சாப்பிடவேண்டும் என்று.

அதற்காக பலமுறை ஓநாய் அந்த ஆட்டை சண்டைக்கு இழுத்தது.

ஓநாயின் குணம் அறிந்த ஆடு..ஓநாயிடம் இருந்து தன் புத்திசாலித்தனத்தால் தப்பிவந்தது.

ஒரு சமயம்..ஒரு நதியின் நடுவில் குறுகலான ஒரு பாலத்தில் ஆடு சென்றது .அப்பாலம் ஒரு நபர் சென்றால்..ஒருவர்

எதிரே வர முடியாத அளவு குறுகலானது.

பாலத்தில் ஆடு வருவதைக்கண்டு,பெரும்பகுதியை ஆடு கடந்ததும்,ஓநாய் அந்த முனையிலிருந்து ஆட்டை நோக்கி வந்தது..

இப்போது ஆடும்.ஓநாயும் எதிரெதிரே வந்துவிட்டன.

ஆடு ஓநாயிடம் ..'நான் கிட்டத்தட்ட பாலத்தைக் கடந்துவிட்டேன்...சற்று நீங்கள் பின் சென்று எனக்கு இடம் கொடுத்தால்..நான்

சென்றுவிடுவேன் ..'என்றது.

இதுதான் சரியான தருணம் என எண்ணி ஓநாய் ஆட்டை வீண் சண்டைக்கு இழுத்தது ''நான் முட்டாள்களுக்கு இடம் தர மாட்டேன்'

நீயே எனக்கு இடம் கொடுத்துப் பின்னால் போ' என்றது.

ஓநாயின் நோக்கம் அறிந்த ஆடு ..'நான் முட்டாள்களுக்கு முதல் இடம் தருவேன்' என தான் பின்னால் சென்று..ஓநாய் பாலத்தை கடக்கச் செய்தது.ஓநாயும் தன் செயல் இம்முறையும் பலிக்கவில்லையே என சென்றுவிட்டது.

ஆடு...தன் புத்திசாலித்தனத்தால்..ஓநாயை முட்டாள் என மறைமுகமாக சொன்னதுடன்..கெட்டவர்களுடன் வீண்வாதம் கூடாது என்று உணர்ந்ததால்

உயிர் பிழைத்தது.

ஜீவார்மித கரைசலில் ஜொலிக்குது "பப்பாளி, திராட்சை'




ஜீவார்மித கரைசல்... அக்னி அஸ்திரம்... என இயற்கை உரமிருக்க... செயற்கைக்கு செல்ல வேண்டிய தேவையில்லை என்கிறார், திண்டுக்கல் காந்திகிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜானகிராமன். காந்திகிராமம் செட்டியபட்டியில் மலையடிவாரத்தை ஒட்டி செழித்திருக்கிறது, இவரது தோட்டம். மதுரையில் ஜவுளி பிசினஸ் செய்தாலும், தினமும் தோட்டத்தைப் பார்க்க தவறுவதில்லை. 21 ஏக்கர் பரந்து விரிந்த பூமியில் பப்பாளி, திராட்சை, சப்போட்டா, மா, கொய்யா ரகங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.
தோட்டத்திலேயே கிடைமாடுகளுக்கு நிரந்தர இடம் ஒதுக்கி, அவற்றின் சாணத்தை சேகரிக்கிறேன். மாடுகளுக்காக சிறிய குளம் அமைத்துள்ளேன். மலைப்பகுதியில் மேய்ச்சல் முடிந்து, இரவில் இங்கே இளைப்பாறும். மாட்டுச்சாணம், கோமியம், உளுந்து பயறு, நாட்டு சர்க்கரையுடன் கரைசலை ஊற்றப் போகும் இடத்தின் மண்ணையும் கலந்து 48 மணி நேரம் ஊறவைப்பேன். இதுதான் ஜீவார்மித கரைசல். மண்ணையும், என்னையும் வாழவைக்கிறது.


புளித்த தயிரை தண்ணீரில் கரைத்து தெளித்தால், செடிகளுக்கு நல்ல கிரியாஊக்கியாக செயல்படுகிறது. பூச்சி தாக்குதல் இருந்தால் அக்னி அஸ்திரம் இருக்கவே இருக்கிறது. இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் பொருட்களை அரைத்து தண்ணீரில் கரைத்து வடிகட்டி செடிகளுக்கு தெளிப்பேன். திராட்சை கொடிகளுக்கு கீழே, கடலை சாகுபடி செய்துள்ளேன். அதேபோல, தக்கைப்பூண்டு, கொழிஞ்சி, பசுந்தாள் உரங்களை பயிரிட்டு, அவற்றை அப்படியே பறித்து போட்டால், உரமாகிறது.
திராட்சையில் பழச் சீசனில் இலைகள் உதிரும். அவற்றை அப்படியே மண்ணில் மட்கச் செய்து உரமாக்கி விடுவேன். திராட்சை செடிக்கு பசுந்தாளும், பசுந்தாளுக்கு திராட்சை இலைகளும் நல்ல உரம் தான். வாழையில் சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க உள்ளேன். எல்லாமே நாட்டு ரகம் தான். 


மலையில் மழைபெய்தால் அங்கிருந்து வரும் நீர், என் தோட்டத்திற்கு தான் முதலில் பாய்கிறது. சுத்தமான தண்ணீராக இருப்பதால், தோட்டத்திற்கு வளம் சேர்க்கிறது. என் தோட்டத்தின் மண்ணெல்லாம் மெத்தை போன்று மிருதுவாக இருக்கும். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இயற்கை விவசாயத்தை மட்டுமே நம்பியிருப்பதால், மண்ணும் மிருதுவாகி விட்டது. தனியாக மண்புழு உரம் இடுவதில்லை. தோட்டத்து மண்ணைத் தோன்றினால் பொது பொதுவென்று மண்புழுக்கள் உதிரும். மண் நன்றாக இருந்தால் தானே, புழுக்கள் உயிரோடு இருக்கும். மண்ணும் வளமாக, உயிரோடு இருப்பதால் திராட்சையின் தரம் நன்றாக இருக்கிறது. இதுவே, ஏற்றுமதிக்கான வாய்ப்பையும் பெற்றுத் தந்தது என்கிறார், ஜானகிராமன்.

இவரிடம் பேச: 91500 09998.

Click Here

‘யா யா’ - விமர்சனம்!



சிவா & சந்தானம் ஜோடி சேர்ந்திருக்கிற படம். வழக்கமாகவே சிவா படத்தில் மருந்துக்குக்கூட கதையோ, லாஜிக்கோ, சென்டிமென்ட் விஷயங்களோ எதுவும் இருக்காது. அதைப் போல இந்த படத்திலும் மேலே சொன்ன எதுவும் இல்லை.


சந்தானம் படங்களில் கதையை விட சந்தானம் காமெடி என்ற பெயரில் பேசுகிற வசனங்கள்தான் காதை ரணமாக்கும். இதிலும் சந்தானம் பேச்சுக்கு குறைவில்லை.


சிவாவுக்கு ஜோடி தன்ஷிகா. சந்தானம் ஜோடி காதல் சந்தியா, கூடவே இளவரசு, ரேகா, சித்ராலட்சுமணன் நடித்திருக்கிறார்கள். டாக்டர் சீனிவாசன் தனி ஆவர்த்தனம் பண்ணுகிறார். அவருக்கு ஜோடி தேவதர்ஷினி.
எல்லாம் சரி கதைன்னு எதையாவது சொல்ல முடியாதா… அப்படீன்னு நீங்க கேக்குறது எனக்கும் கேக்குது…

Ya Ya Movie New Stills... glintcinemas.com

 


சிவாவுக்கு வேலை வெட்டி எதுவும் இல்லை. அப்படியே வேலைக்கு போனாலும் அரசாங்க வேலைக்குத்தான் போவேன்னு அடம் புடிக்கும் கேரக்டர். சிவா அப்பா இளவரசு கட்சியில வட்டசெயலாளர் அதை பயன்படுத்தி சிவாவுக்கு வேலை வாங்கித் தர முயற்சிக்கிறார். அதுக்காக பெண் கவுன்சிலரை பார்க்கப்போகும் சிவா மீது அந்த கவுன்சிலருக்கு காதல் பிறக்கிறது.


அப்படி வேலைக்கு போகும் வழியில் பஸ்சில் தன்ஷிகாவை பார்க்கிற சிவாவுக்கு அவள் மீது காதல் ஏற்படுகிறது. காதலுக்காக பல தகிடுதத்தங்கள் செய்கிறார். 


தன்னை விட்டு விட்டு தன்ஷிகாவை காதலிக்கும் சிவாவிடம் இருந்து தன்ஷிகாவை பிரிக்க பெண் கவுன்சிலர் திட்டமிடுகிறார். இதற்காக சிவாவின் நண்பன் சந்தானத்தை பணம் கொடுத்து கவுன்சிலர் விலைக்கு வாங்குகிறார். பணத்தை வாங்கிக் கொண்டு நண்பன் சிவாவின் காதலை பிரிக்க சதி செய்கிறார் சந்தானம்.


ஒரு கட்டத்தில் சந்தானம் எல்லா உண்மைகளையும் சிவாவிடம் சொல்லிவிட அது பெண் கவுன்சிலருக்கு தெரிவருகிறது. தன்ஷிகாவை கடத்த திட்டமிடுகிறார். அதேபோல, தன்ஷிகாவால் பாதிக்கப்பட்ட சீனிவாசனும் தன்ஷிகாவை கடத்த திட்டமிடுகிறார்.


இதற்கிடையில், காதல் சந்தியாவுக்கும் சந்தானத்துக்கும் திடீரென கல்யாண ஏற்பாடு நடக்கிறது. கல்யாண மண்டபத்தில் பெண்ணை கடத்த வரும் சீனிவாசனும், பெண் கவுன்சிலரும் தன்ஷிகாவை பார்க்கிறார்கள்.
தன்ஷிகா கடத்தப்பட்டாரா? சிவாவின் காதல் கைகூடியதா? சந்தானம் கல்யாணம் நடந்ததா? பவர்ஸ்டார் சீனிவாசன் என்ன ஆனார்? இதற்கெல்லாம் விடை சொல்கிறது கிளைமாக்ஸ்.


அப்பாடா…. இந்த படத்தோட இயக்குனர் கூட இவ்ளோ தூரம் யோசிச்சி கதை எழுதியிருக்க மாட்டார்னு நெனைக்கிறேன்… அந்தளவுக்கு யா யா கதையை சொல்லிட்டேன்…


இனிமே தமிழ் சினிமான்னா கதையிருக்காது… ஒரே ரூமுக்குள்ளயே படம் புடிச்சிக்குவாங்க… காமெடின்னு இஷ்டத்துக்கு எதையாவது பேசிகிட்டே இருப்பாங்க… கண்ண மூடினா பாட்டு பாடுவாங்க… பவர்ஸ்டார் சீனிவாசனுக்கெல்லாம் ஜோடி போட்டு டூய்ட் ஆட வைப்பாங்க… ஆக்ஷன் பிளாக் வைப்பாங்க…


இயக்குனர் ராஜேஷிடம் உதவியாளராக இருந்து இயக்குனராக மாறியிருக்கிற ராஜசேகரன் இந்த படம் மூலமா இயக்குனராகியிருக்கிறார். விஜய் எபினேசர் இசையமைத்திருக்கிறார். பல இடங்களில் பழைய பாடல்களையும், ஏற்கனவே ஹிட் ஆன பாடல்களையும் போட்டு பேலன்ஸ் பண்ணியிருக்காரு. எம்எஸ் முருகராஜ் தயாரிப்பில் வெளிவந்திருக்கிற ‘யா யா’ படத்தோட பேர் போலவே யாருக்கும் புரியாது…

 
back to top