.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, October 9, 2013

ஆண்மையும், மாரடைப்பும்...












ரு ஆணுக்கு ஆண்மையை கொடுக்கும் ஹார்மோன் டெஸ்ட்ரோஜன். அவனுக்கு உடல் வலிமையையும் அதுதான் கொடுக்கிறது. மிகுந்த உடல் வலிமை, நீண்ட காலம் வரை இனப்பெருக்கம் செய்யும் திறன் ஆகியவை ஆண்களுக்கு கிடைத்த பலம். பெண்களுக்கு அவை இல்லை.


ஆனால் குறைந்த ஆயுள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு ஆகியவை ஆண்களின் 2 பெரிய பலவீனங்கள். டெஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் ஆணுக்கு உடல் வலிமையை கொடுக்கும் அதே நேரம் இருதயத்துக்கு வந்து செல்லும் அனைத்து ரத்தக்குழாய்களிலும் அடைப்பை ஏற்படுத்தும் ஒரு பொருளை உருவாக்கி விடுகிறது.


எச்.டி.எல். என்ற அதிக திறனுடைய லிப்போ புரதம், கொழுப்பு பொருட்களை கட்டுப்படுத்தி ரத்தக்குழாய்களில் உள்ள அடைப்புகளை சரி செய்து கல்லீரலையும் நல்ல நிலையில் வைத்துக்கொள்ள பெரிதும் உதவுகிறது.
மனித ரத்தத்தில் இந்த லிப்போ புரதத்தை உண்டாக்க உதவும் ஒரு தூண்டு சக்தி டெஸ்ட்ரோஜனுக்கு இல்லை. மாறாக இந்த தூண்டும் திறன் பெண்களுக்கு பெண்மையைத்தரும் ஈஸ்ட்ரோஜனுக்கு உண்டு. இதனால்தான் மாரடைப்பு என்ற பேரிழப்பு ஆண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது. அதிக ரத்த அழுத்தமும், கொழுப்பினால் ஏற்படும் மாரடைப்பும் பெண்களுக்கு மிகவும் குறைவு.


உடல் வலிமை என்பதும் எதிர்ப்பு சக்தி என்பதும் வேறுபட்டவை. வலிமை என்பது ஆண்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி என்பது பெண்களுக்கும் இயற்கையாகவே அமைந்த வரப்பிரசாதம்.


தற்போது உடல் உழைப்பு குறைந்துவிட்ட காரணத்தினால் கொழுப்பு சக்தி அதிகமாக உடலில் சேர்ந்து மாரடைப்பு வருவதற்காக வாய்ப்பை அதிகரிக்கிறது.


மாரடைப்பு வரும் வாய்ப்பு இயற்கையாகவே ஆண்களுக்கு அதிகம் இருப்பதால்தான், நாள்தோறும் 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். அத்துடன் காலை உணவை எந்த காரணம் கொண்டும் தவிர்க்கக்கூடாது. இது மாரடைப்பில் இருந்து ஓரளவு நம்மைக் காப்பாற்றும்.

‘நய்யாண்டி’ படத்தில் இருந்து ‘டூப்’ நடிகை நடித்த 3 காட்சிகள் நீக்கம்!















‘நய்யாண்டி’ படத்தில், டூப் நடிகை நடித்த 3 காட்சிகள் நீக்கப்பட்டதைத்தொடர்ந்து அந்த படம் வெள்ளிக்கிழமை திரைக்கு வருவதற்கு சம்மதம் தெரிவித்ததாக நடிகை நஸ்ரியா கூறினார்.


புகார்
தனுஷ்–நஸ்ரியா நடித்து, ஏ.சற்குணம் டைரக்டு செய்த ‘நய்யாண்டி’ படத்தை கதிரேசன் தயாரித்து இருக்கிறார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல் காட்சியில், படுகவர்ச்சியான சில சீன்கள் வைக்கப்பட்டு இருந்ததால், அதில் நடிப்பதற்கு மறுத்ததாகவும், அந்த காட்சிகளில் ஒரு ‘டூப்’ நடிகையை நடிக்க வைத்து, படத்தில் இணைத்து இருப்பதாகவும் டைரக்டர் சற்குணம் மீது தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நஸ்ரியா புகார் செய்தார்.

 
தான் நடிக்காத காட்சிகளை நடித்தது போல் காட்டுவது மிகப்பெரிய மோசடி என்று அந்த புகாரில் அவர் குறிப்பிட்டு இருந்தார். அந்த காட்சிகளை படத்தில் இருந்து நீக்காவிட்டால், வழக்கு தொடரப்போவதாகவும் அவர் கூறினார். இது தொடர்பாக அவர், போலீஸ் கமிஷனர் ஜார்ஜை சந்தித்து புகார் மனு கொடுத்தார்.


டூப் நடிகை


புகார் மனுவில், ஆட்சேபனைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால், ‘நய்யாண்டி’ படத்தை திரையிட அனுமதிக்கக்கூடாது என்றும், என் ரசிகர்களும், குடும்பத்தினரும் படுகவர்ச்சியான காட்சிகள் இடம் பெறுவதை விரும்பவில்லை என்றும் நஸ்ரியா குறிப்பிட்டு இருந்தார். பின்னர் அவர் ஒரு மலையாள படப்பிடிப்புக்காக கேரளா புறப்பட்டு சென்றார்.


‘நய்யாண்டி’ படம், நஸ்ரியாவின் வக்கீல்களுக்காக நேற்று காலை சென்னை போர் ப்ரேம் தியேட்டரில் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. வக்கீல்களுடன் நஸ்ரியாவின் தந்தை நசீம் அமர்ந்து படம் பார்த்தார். அப்போது, மூன்று காட்சிகளுக்கு அவர் ஆட்சேபம் தெரிவித்தார். அந்த காட்சிகளில் நஸ்ரியா நடிக்கவில்லை என்று அவர் கூறினார்.


3 காட்சிகள் நீக்கம்


முதல் இரவு அறையில் படுத்தபடி, தனுஷ் கால்களுடன் நஸ்ரியாவின் கால்கள் பின்னிப் பிணைவது போல் ஒரு காட்சி, நஸ்ரியாவின் முதுகில் வியர்வை துளிகள் படர்ந்திருப்பது போல் ஒரு காட்சி, தனுஷ் மடியில் நஸ்ரியா தலை வைத்து படுத்திருப்பது போல் ஒரு காட்சி இந்த மூன்று காட்சிகளிலும் நஸ்ரியா நடிக்கவில்லை என்றும், ‘டூப்’ நடிகையை பயன்படுத்தி அந்த காட்சிகள் படமாக்கப்பட்டிருப்பதால்,  அந்த மூன்று காட்சிகளையும் நீக்க வேண்டும் என்றும் நசீம் குறிப்பிட்டார். அந்த காட்சிகளை நீக்குவதற்கு தயாரிப்பாளர் கதிரேசன் சம்மதித்தார்.


அதைத்தொடர்ந்து வக்கீல்களும், நஸ்ரியாவின் தந்தை நசீமும் எடிட்டிங் அறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்கள் முன்னிலையில், அந்த காட்சிகள் நீக்கப்பட்டன.


போலீஸ் புகாரில் கூறியிருந்த 3 காட்சிகளும் நீக்கப்பட்டதால், ‘நய்யாண்டி’ படம் வெள்ளிக்கிழமை திரைக்கு வருவதற்கு சம்மதம் தெரிவித்ததாக நஸ்ரியா கூறினார்.

ரஜினிகாந்தின் கோச்சடையான் படத்தில் நடிக்கும் தீபிகா படுகோனேவுக்கு டப்பிங் குரல்!

 ரஜினிகாந்த் கதாநாயகனாகவும், பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கதாநாயகியாகவும் நடித்து தயாராகி வரும் படம் 'கோச்சடையான்'.




ரஜினிகாந்தின் இளையமகளான சவுந்தர்யா இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படம் சென்னை, ஹாங்காங், லண்டன் என மூன்று இடங்களில் கிராபிக்ஸ் காட்சிகளால் மெருகேற்றப்பட்டு வருகிறது.  இப்படத்தில் அப்பா, மகன் என இரண்டு வேடங்கள் ரஜினி காந்த் நடித்து வருகிறார்.



ரஜினிகாந்தின் பிறந்த நாளான டிசம்பர் 12 -ல் இப்படத்தை வெளியிடத் திட்டமிடபட்டு உள்ளது. இப்படத்தில் நடித்து உள்ள தீபிகா படுகோனேவுக்கு இந்தபடத்தில் டப்பிங் குரல் கொடுக்கபட்டு உள்ளது. தீபிகா படுகோனே பெங்களூரை சேர்ந்தவர் அவருக்கு கன்னடம் சரளமாக வரும் ஆனால் தமிழ் சரியாக வராது அதனால் இப்படத்தில் தீபிகாவுக்கு சவீதா ரெட்டி டப்பிங் குரல் கொடுக்கிறார்.


கடந்த காலங்களில் சவிதா  ஜெனிலியா தேஷ்முக் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் போன்ற ஹிந்தி திரைப்பட நடிகைகளுகு டப்பிங் கொடுத்து உள்ளார். சவீதா முதன் முதலில்  ஜீன்ஸ் படத்தில் ஐஸ்வர்யாராய்க்கு குரல் கொடுத்தார். "


இது குறித்து இயக்குனரும் ரஜினிகாந்தின் மகளுமான சவுந்தர்யா  அஸ்வின் கூறியதாவது:- தீபிகாவிற்க்ய் தமிழ் டப்பிங் செய்ய சவிதா  சரியான தேர்வு.அவரது குரல் ஒரு மிக விரிவான தொனியில் உள்ளது. அவர் தனது திறமையை வெளிப்படுத்துவார்.தீபிகா கதாபாத்திரம் கருணை மற்றும் சீரிய பண்பு உடையவராக காட்டபடுகிறது.இதற்கு சவிதா ஒரு சரியான தேர்வு இவ்வாறு அவர் கூறினார்.

மல்டி கலரில் அறிமுகமாகிறது வாக்காளர் அடையாள அட்டை!




 புதுவையில் புதிதாக சேர்க்கப்படும் வாக்காளர்களுக்கு மல்டி கலரில் அச்சிடப்பட்ட அடையாள அட்டையை தேர்தல் ஆணையம் வழங்க உள்ளது. 


புதுவை கூடுதல் தேர்தல் தலைமை அதிகாரி பங்கஜ்குமார் ஜா நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி புதுவையில் நாளை(10ம் தேதி) முதல் அடுத்த மாதம் 1ம் தேதி வரை வாக்காளரை சேர்த்தல், நீக்குதல் பணி நடக்கிறது. புதுவை, காரைக்கால், மாகே, ஏனாம் உள்பட 30 தொகுதிகளில் நடக்கிறது. மாநிலம் முழுக்க உள்ள 875 வார்டுகளிலும் தேர்தல் அதிகாரி நியமிக்கப்பட்டு பணியை மேற்கொள்வார்.


புதிய வாக்காளர்களுக்கு பிளாஸ்டிக் கார்டில் மல்டி கலரில் அச்சிடப்பட்ட வாக்காளர் அட்டை வழங்க தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. அனைத்து மாநிலத்திலும் இந்த பணி நடந்து வரும் நிலையில் புதுவையில் இதற்காக பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. அடுத்தாண்டு ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும்போது புதிய அட்டை வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.



எக்ஸ்ட்ரா தகவல்



தேர்தலில் கள்ள ஓட்டு போடுவதை தடுக்க வாக்காளரின் போட்டோவுடன் கூடிய அடையாளம் அட்டை வழங்கும் திட்டத்தை தேர்தல் ஆணையம் 1993ல் தொடங்கியது.

 
back to top