.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, October 16, 2013

கர்ப்பமாக இருக்கும் போது சாப்பிடத் தோன்றும் உணவுகள்!

545_full

கர்ப்பமாக இருக்கும் போது ஒருசில உணவுகளின் மீது நாட்டம் அதிகரிக்கும். அதில் அனைவருக்கும் தெரிந்தது, மாங்காய், சாம்பல் போன்றவை தான். ஆனால் அதுமட்டுமின்றி, இன்னும் நிறைய உணவுப் பொருட்களின் மீது கர்ப்பிணிகளுக்கு ஆசையானது அதிகரிக்கும். மேலும் அக்காலத்தில் எல்லாம் கர்ப்பமாக இருக்கும் போது பெண்கள் ஆசைப்படும் உணவுப்பொருட்களை எல்லாம் சாப்பிட வாங்கிக் கொடுத்தால், குழந்தை நன்கு ஆரோக்கியமாக பிறக்கும் என்று சொல்வார்கள்.

ஏனெனில் அவ்வாறு கர்ப்பிணிகளுக்கு சாப்பிட வேண்டுமென்று தோன்றும் உணவுப்பொருட்கள் அனைத்தும் மிகவும் ஆரோக்கியத்தைத் தரக்கூடியவை. ஆனால் அந்த உணவுப்பொருட்களை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், வயிற்றில் வளரும் சிசுவிற்கு ஆபத்து ஏற்படும்.

மாங்காய்

மாங்காயிலும் புளிப்புச் சுவை இருப்பதால் தான், கர்ப்பிணிகளுக்கு முதலில் மாங்காய் சாப்பிட வேண்டுமென்று தோன்றுகிறது.

சோடா

காலையில் சோர்வு, மயக்கம் போன்றவற்றை அதிகம் உணர்ந்தால், அப்போது கார்போனேட்டட் பானங்களை குடித்தால் சரியாகிவிடும். ஏனெனில் கார்போனேட்டட் பானங்கள் வயிற்று பிரட்டலை சரிசெய்து விடுவதால், இதனை அளவாக குடிப்பது நல்லது. அதிலும் ஸ்ப்ரைட் போன்றவற்றை குடிப்பது தான் சிறந்தது. குறிப்பாக காப்ஃபைன் கலந்த சோடாவான கோலா, தம்ஸ் அப் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

காபி

சில பெண்களுக்கு காபி குடிக்க வேண்டுமென்று ஆசைப்படுவார்கள். ஏனெனில் காபியில் உள்ள காப்ஃபைன் தலைவலி, மன இறுக்கம் போன்றவற்றை குறைப்பதால், இதனை அளவாக குடித்து வருவது நல்லது.

ஐஸ் க்ரீம்

ஐஸ் க்ரீம் கூட சாக்லெட் போன்று உடலை குளிர்ச்சியடைய செய்வதோடு, சுவையுடன் இருப்பதால், கர்ப்பிணிகளுக்கு இதை சாப்பிட வேண்டுமென்று தோன்றுகிறது.

எலுமிச்சை

எலுமிச்சையின் மீது கர்ப்பிணிகளுக்கு நாட்டம் எழ, அதில் உள்ள புளிப்புச் சுவை தான். ஏற்கனவே சொன்னது போல், புளிப்புச்சுவையானது குமட்டலை தடுக்கக்கூடிய சக்தி கொண்டவை.

உருளைக்கிழங்கு சிப்ஸ்

சிலருக்கு உருளைக்கிழங்கு சிப்ஸ் மீது விருப்பம் அதிகம் இருக்கும். ஏனெனில் இதில் சோடியம் அதிகம் இருப்பதால், இதனை சாப்பிட வேண்டுமென்ற எண்ணம் எழும். அதே சமயம் இதில் கலோரிகள் மற்றும் கொழுப்புக்கள் அதிகம் இருப்பதால், இதனை தவிர்த்து பாப்-கார்ன் சாப்பிடுவது நல்லது.

ஊறுகாய்

கர்ப்பமாக இருக்கும் போது ஊறுகாயை பார்த்தால் என்ன நினைத்தாலே, ஆசை அதிகரிக்கும். இவ்வாறு ஊறுகாயின் மீது நாட்டம் எழுவதற்கு காரணம், அதில் உள்ள புளிப்புச் சுவை தான். ஏனெனில் இந்த புளிப்புச் சுவை குமட்டலை தடுக்கும். அதுமட்டுமின்றி, உடலில் சோடியம் குறைவாக இருந்தாலும், ஊறுகாயின் மீது நாட்டம் அதிரிக்கும்.

காரமான உணவுகள்

சிலருக்கு காரமான உணவுகளின் மீது விருப்பம் அதிகம் இருக்கும். ஏனெனில் காரமான உணவுகள் வியர்வையை அதிகரித்து, உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும் என்பதால் தான். ஆகவே அடுத்த முறை உணவு உட்கொள்ளும் போது, சற்று காரத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். அதற்காக அளவுக்கு அதிகமாக சேர்த்துக் கொள்ளாதீர்கள். அது குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

ஐஸ் கட்டிகள்

கர்ப்பிணிகளுக்கு ஐஸ் கட்டியை சாப்பிட வேண்டுமென்ற ஆசை அதிகம் எழும். ஏனெனில் ஐஸ் கட்டியானது உடலில் ஏற்படும் பிடிப்புக்களை சரிசெய்வதால், கர்ப்பிணிகளுக்கு இதை சாப்பிட ஆவல் எழுகிறது. குறிப்பாக அதிகப்படியான குளிர்ச்சியானது வளரும் சிசுவிற்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதால், அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

சாக்லெட்

சில கர்ப்பிணிகளுக்கு சாக்லெட் சாப்பிட பிடிக்கும். பொதுவாக கர்ப்பத்தின் போது சாக்லெட் சாப்பிடுவது நல்லது. இத்தகைய உணர்வு ஏற்படுவதற்கு முக்கிய காரணம், சாக்லெட் மனதை அமைதிப்படுத்தி, சந்தோஷமாக இருக்க உதவி புரிவதால் தான். மேலும் அக்காலத்தில் இனிப்புக்களை அதிகம் சாப்பிட தோன்றினால், வயிற்றில் பெண் குழந்தை உள்ளது என்று அர்த்தம் என்று சொல்வார்கள்.

பச்சை நிற ஆப்பிளின் அழகு நன்மைகள்!


dark_circles_under_eyes
பச்சை ஆப்பிள் ஒரு சிறந்த அழகு மேம்படுத்தியாக உள்ளது. சரும பராமரிப்பு மற்றும் முடி பராமரிப்பு போன்ற நிறைய நன்மைகள் பச்சை ஆப்பிள்களுடன் தொடர்புள்ளது.

முடி உதிர்தல்

பச்சை ஆப்பிள்கள் முடிகளை வலுப்படுத்தி, முடியின் வளர்ச்சியை அதிகரித்து மற்றும் முடி உதிர்தலைத் தடுக்க உதவுவதால், இதனை தினமும் தவறாமல் உட்கொள்ளுங்கள்.

பொடுகை நீக்கும்

பச்சை ஆப்பிள்களின் இலைகள் மற்றும் தோல்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு பேஸ்ட்டை பொடுகு நீக்க பயன்படுத்தும் போது, அதிசயக்கத்தக்க விளைவுகளை கொடுக்கிறது. அதிலும் இந்த பேஸ்ட்டை ஷாம்புவை பயன்படுத்துவது போன்றே பயன்படுத்த வேண்டும். மேலும் பச்சை ஆப்பிள் பழத்தின் சாற்றை உச்சந்தலையில், தொடர்ந்து மசாஜ் செய்தாலும், அதே விளைவுகளைக் கொடுக்கிறது.

கருவளையம்

குறிப்பாக பச்சை ஆப்பிள் கண்ணைச் சுற்றி ஏற்படும் கருவளையங்களை நீக்கி, கண்களுக்கு புத்துணர்ச்சி அளிக்க உதவுகிறது.

முகப்பரு

பச்சை ஆப்பிள்கள் முகப்பருவிற்கு எதிரான சிகிச்சையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அதிலும் பச்சை ஆப்பிள்களை வழக்கமாக உண்பதால், பருக்கள் வெடிப்பதை கட்டுப்படுத்துவதோடு, பருக்கள் வருவதைத் தடுக்க உதவுகிறது.

சரும நோய்களை தடுக்கிறது

பச்சை ஆப்பிளானது அத்தியாவசிய வைட்டமின்களின் பற்றாக்குறையால் ஏற்படும் பல்வேறு சரும நோய்களைத் தடுக்க உதவுகிறது.

வெள்ளையான சருமம்

பச்சை ஆப்பிளில் உள்ள அதிகமான வைட்டமின்கள், சருமத்தை பராமரிக்க உதவுகிறது. மேலும் இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால், இது சருமத்தின் நிறத்தை வெண்மையாக்குகிறது.

சரும சுருக்கத்தை தடுக்கிறது

பச்சை ஆப்பிள்களை தினமும் உட்கொள்வதால், அது சருமத்தை ஆழமாக ஈரப்பதமூட்டப்பட்டு மற்றும் சருமத்தின் ஒட்டுமொத்த திசு அமைப்பை மேம்படுத்தி, சுருக்கங்கள் ஏற்படுவதை நீக்க உதவி செய்கிறது.

முதுமையைத் தடுக்கும்

பச்சை ஆப்பிள்கள் மூப்படைதலுக்கு எதிரான ஒரு சிறந்த மூலப்பொருளாக உள்ளது. இந்த ஆப்பிளில் எதிர் ஆக்ஸிகரணிகள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துக் காணப்படுவதால், தோலின் நெகிழ்வு திறன் மற்றும் நீண்ட நாட்கள் இளமையாக இருக்க செய்கிறது.

மணி பிளாண்ட் பற்றிய சில தகவல்கள்!


x16-moneypolant.jpg.pagespeed.ic.3pCvsjFYLr

 அதிர்ஷ்டம் தரும் செடியாக கருதப்படும் மணி பிளாண்ட் சொத்து, சுகம், ஆரோக்கியம் மற்றும் சந்தோஷத்தை பெருகச் செய்யும் என்று நம்பப்படுகிறது. மணி பிளாண்ட்டை மலபார் செஸ்ட்நட் அல்லது சபா நட என்றும் அழைப்பார்கள்.


மணி பிளாண்ட்டை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் பல உள்ளது. மணி பிளாண்ட்டை வீட்டில் வளர்க்க பல காரணங்கள் உள்ளது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், ஃபெங் சூயி சாஸ்திரப்படி அதிர்ஷ்டம் ஏற்படுத்தி கொடுக்கும் செடியாக கருதப்படுகிறது மணி பிளாண்ட். இது பண வளத்தை பெருகச் செய்து நல்வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும். இருப்பினும் வீட்டிற்கு அழகு சேர்க்கும் வகையில் இதனை வீட்டிற்கு உள்ளேயும் வளர்க்கலாம். வீட்டில் மணி பிளாண்ட் இருந்தால் அதனைப் பற்றி கூறப்போகும் தகவல்கள் உங்களுக்கு ஆச்சரியங்களை ஏற்படுத்தும்.

1. வனப்பகுதியில் வளரும் மணி பிளாண்ட் 50-60 அடி உயர மரமாக வளரக் கூடும். இருப்பினும் ஒரு சின்ன தொட்டியில் வளர்க்கும் போது 10-15 அடி உயரத்தை தான் அதனால் எட்ட முடியும். மணி பிளாண்ட்டை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களில் இது முக்கியமான ஒன்றாகும்.

2. மணி பிளாண்ட்டின் ஒவ்வொரு கிளைகளிலும், 12 இன்ச் நீளம் வரை வளரக் கூடிய 5 இலைகள் இருக்கும். அவைகள் பளிச்சென்ற பச்சை நிறத்தில் பளபளவென இருக்கும்.

3. மணி பிளாண்ட்டில் உள்ள க்ரீமி வெண்ணிற பூக்கள் வீரியமிக்க வாசனையை பரப்புவதால், அவை தேனீக்கள், வௌவால்கள் மற்றும் பட்டாம் பூச்சிகளை ஈர்க்கும்.

4. இன்னொரு ஆச்சரியமான தகவல் – மணி பிளாண்ட்டில் விதைகள் இருப்பது. நமக்கு தெரிந்த வரை மணி பிளாண்ட்டை சுற்றி எந்த விதைகளையும் பார்த்திருக்க மாட்டோம். ஆனால் செடியின் விதைப்பையில் விதைகள் இருக்கும். இந்த விதைகள் மெதுவாக பெரிதாகி, பின் வெடித்து கீழே விழும்.

5. மணி பிளாண்ட் கிளைகளில் காணப்படும் 5 இலைகள் ஐந்து சின்னங்களை குறிக்கும். ஃபெங் சூய் சாஸ்திரப்படி, ஒரு கிளையில் காணப்படும் ஐந்து இலைகள் ஐந்து பொருட்களை குறிக்கிறது: உலோகம், கட்டை, நீர், நெருப்பு மற்றும் பூமி. இந்த ஐந்து சின்னங்கள் செடி வைத்திருப்பவருக்கு நல்ல வளத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.

6. மணி பிளாண்ட்டின் நற்பதமான இலையை உட்கொள்ள பயன்படுத்தலாம் என்பதும் ஒரு ஆச்சரியமான விஷயமே. அதன் கொழுந்து இலைகள் மற்றும் பூக்களை காய்கறியாக சமைக்கலாம் அல்லது வேறு பொருட்கள் சமைக்கும் போது இதனை சேர்த்து கொள்ளவும் செய்யலாம்.

7. மணி பிளாண்ட்டின் விதைகளையும் கூட உண்ணலாம். மணி பிளாண்ட்டின் விதைகள் கடலை பருப்பு சுவையை போல் இருக்குமாம். இந்த விதைகளை ரோஸ்ட் செய்து, நொறுக்குத் தீனியாகவும் சிலர் சாப்பிடுவார்கள்.

சுனாமியைக் கண்டறிவதற்கு கடலுக்கடியில் இன்டர்நெட்: விஞ்ஞானிகள் முயற்சி!


  சுனாமியைக் கண்டறிவதற்கு கடலுக்கடியில் இன்டர்நெட்: விஞ்ஞானிகள் முயற்சி

 வானளாவிப் பரந்து விரிந்திருக்கும் இணையதளத் தொடர்புகளின் சேவை எல்லையை ஆழ்கடலின் அடியிலும் பயனளிக்கும் வகையில் விரிவுபடுத்த அமெரிக்க விஞ்ஞானிகள் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்.

சுனாமி அறிவிப்பு, மாசுபாடுகள் கண்டறிதல் மற்றும் நிகழ்வுகள் கண்காணிப்பு போன்றவற்றைக் கண்டறிவதற்கும் ஆழ்கடல் இணையதள இணைப்புகளை ஏற்படுத்தும் சோதனை முயற்சியில் அவர்கள் வெற்றி பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலம் சார்ந்த வயர்லெஸ் நெட்வொர்க்குகள், செயற்கைக்கோள் மற்றும் ஆண்டெனா வழியாக வரும் தரவுப் பரிமாற்றத்திற்கு ரேடியோ அலைகளைச் சார்ந்திருந்தன.

ஆனால், தண்ணீருக்கடியில் இவற்றின் செயல்பாடு சக்தி வாய்ந்ததாக இருக்காது என்பதால் பொதுவாக ஒலி அலை சார்ந்த தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. தற்போது இணையதளப் பயன்பாடுகள் மூலம் ஏற்படுத்தப்படும் வயர்லெஸ் நெட்வொர்க்குகள் கடலுக்கடியில் இருந்து தரவுகளைச் சேகரிக்க முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் திறமையாகச் செயல்படும் என்று இத்திட்டத்தின் முன்னணி ஆராய்ச்சியாளரும், பஃபெல்லோ பல்கலைக்கழகத்தின் மின்பொறியியல் இணை பேராசிரியருமான டொம்மாசோ மெலோடியா தெரிவிக்கின்றார்.

சுனாமி போன்ற பேரழிவு ஏற்படும் காலங்களில் ஒரு ஸ்மார்ட்போன் அல்லது கணினியில் யாருக்கும் கிடைக்கும் இந்தத் தகவலை வைத்து மக்களைக் காப்பாற்ற முடியும் என்று இவர் கூறுகின்றார்.

பல அமைப்புகள் உலகளவில் இந்த முறையைப் பயன்படுத்தினாலும் கட்டமைப்பு மாறுபாடு காரணத்தினால் அவற்றுள் செய்திகளைப் பகிர்ந்தளித்தல் என்பது இயலாத ஒன்றாக உள்ளது.

ஆனால், நீருக்கடியில் பயன்படுத்தப்படும் இந்த புதிய மேம்படுத்தப்பட்ட தொடர்புகளில் தகவல் பரிமாற்றங்கள் எளிதாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். சோதனை முயற்சியில் வெற்றி பெற்றுள்ள இந்தப் புதிய தொழில்முறை பேரழிவுக் காலங்களில் கடலோர மக்களை முன்கூட்டியே எச்சரித்துப் பாதுகாக்க உதவும் என்று விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
back to top