
பாலாற்றின் கரையில் அமைந்துள்ளது காஞ்சிபுரம், காஞ்சிக்குத் சென்றால் காலாட்டிக் கொண்டே சாப்பிடலாம் என்பார்கள் பாரம்பரிய பட்டு நெசவுக்குப் பெயர் பெற்ற பட்டுத் தொழிலின் தலைநகரம். இந்தியாவின் ஏழு புனிதத் தலங்களில் ஒன்று. பல்லவர்களின் தலைநகர் என்ற பெருமைக்குரியது. சோழ விஜயநகர முகலாயப் பேரரசர்கள் ஆண்ட பூமி. அறிஞர் அண்ணா பிறந்த ஊர். தமிழ்ப் பண்பாட்டையும் வரலாற்றையும் மொழியையும் கற்பிக்கும் தமிழ்க் கல்லூரி இங்குண்டு. சென்னை வரை நீள்கிறது இம்மாவட்டம்.இங்கு பல கோயில்கள் உள்ளன. அவற்றுள், காமாட்சியம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், வரதராஜபெருமாள் கோயில், கைலாசநாதர் கோயில் ஆகியவை முக்கியமானவை. இவ்வாலயங்கள், சாக்தர், சைவர் மற்றும் வைணவர்கள் என பலவேறு சமயப்...