.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, October 25, 2013

அண்ணனுக்காக உடல் எடையை குறைக்கும் தம்பி!


ஜெயம் ரவி, தனது அண்ணன் ராஜா இயக்கும் படத்துக்காக உடல் எடையை குறைக்க உள்ளார்.

தற்போது ஜெயம் ரவி பூலோகம், நிமிர்ந்து நில் ஆகிய இரண்டு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் அவர் 'பூலோகம்' படத்தில் குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார். இதற்காக அவர், தனது உடல் எடையை அதிகரித்து ஜிம் பாய் தோற்றத்துக்கு மாறினார். இதே தோற்றத்துடன் அவர் 'நிமிர்ந்து நில்' படத்திலும் நடித்து வருகிறார்.

இவ்விரு படங்களுக்குப் பிறகு ஜெயம் ரவி அவருடைய அண்ணன் ராஜா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இன்னும் பெயரிப்படாத இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் ஆக்ஷனுக்கு நிகராக ரொமான்டிக் காட்சிகளும் இருப்பதால் ஜெயரம் ரவியிடம் எடையை குறைக்குமாறு ராஜா சொல்லியிருக்கிறாராம்.

மேலும் ஜெயம் ரவி தனது பழைய படங்களில் எப்படி இருந்தாரோ அப்படியே இருக்க வேண்டும் எனவும் விரும்புகிறாராம். இதையடுத்து ஜெயம் ரவி தனது உடல் எடையை 12 கிலோ வரை குறைக்க இருக்கிறார்.

அஜீத் படப்பிடிப்பிற்கு எதிர்ப்பு!

'வீரம்' படப்பிடிப்பின் போது தெலுங்கு திரைப்பட ஸ்டண்ட் கலைஞர்கள் போர்க்கொடி தூக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

சிவா இயக்கத்தில் அஜீத்-தமன்னா நடித்து வரும் வரும் வீரம். இப்படத்திற்கான படப்பிடிப்பு ஐதராபாத்தில் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு, படத்தின் சண்டைக்காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. இதன் சண்டைக்காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா வடிவமைக்கிறார். 

இந்த சூழ்நிலையில் படப்பிடிப்பு தளத்திற்கு வந்த தெலுங்கு ஸ்டண்ட் யூனியனைச் சேர்ந்தவர்கள் தங்களது சங்கத்தை சேர்ந்த்வர்களுக்கும் படத்தில் வேலை கொடுக்கவேண்டும் என போர்க்கொடி தூக்கினார்கள். ஆந்திராவில் வேறு மொழி பட படப்பிடிப்பு நடத்தும் போது, தெலுங்கு திரைப்பட ஸ்டண்ட் கலைஞர்கள் குறிப்பிட்ட சதவீதம் பேரை பயன்படுத்த வேண்டும். 

இதை செய்யாததால் 'வீரம்' பட படப்பிடிப்பிற்கு எதிராக அவர்கள் கோஷம் போட்டனர். இதனால் படப்பிடிப்பு தடைபட்டு, பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இரண்டு ஸ்டண்ட் யூனியனையும் சேர்ந்தவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. 

நிலைமையை கவனித்த சிறுத்தை சிவா ஸ்டண்ட் காட்சிகளை ஒதுக்கிவைத்துவிட்டு அஜீத், தமன்னா சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க ஆரம்பித்துவிட்டாராம்.

‘விஸ்வரூபம்’ வெறும் குழந்தை : டெக்னீஷியன் கருத்து

'Viswaroopam' only child: technician Feedback‘விஸ்வரூபம்‘ 2ம் பாகம் முன் முதல்பாகம் வெறும் குழந்தைதான் என்று அதில் பணியாற்றும் டெக்னீஷியன் கூறினார். ‘விஸ்வரூபம் 2ம் பாகம்‘ இயக்கி நடித்து வருகிறார் கமல். ஆண்ட்ரியா, பூஜாகுமார் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் டிரைலரை 2வது கட்டமாக வெளியிட்டுள்ளார் கமல். ஆக்ஷன் பகுதிகள் நிறைந்த படமாக இப்படம் உருவாகி வருகிறது.


திரையுலகை சேர்ந்த சிலர் டிரைலரை பார்த்து பாராட்டினர். விஷுவல் எபக்ட்ஸ் சூபர்வைசர் மதுசூதனன் தனது இணைய தள டுவிட்டர் பக்கத்தில், ‘விஸ்வரூபம் 2ம் பாக  டிரைலர் என்னை பெரிதும் கவர்ந்தது. இந்த டிரைலரை பார்க்கும்போது ஏற்கனவே வெளியான விஸ்வரூபம் முதல் பாகம் இந்த 2ம்பாகத்தின் முன் வெறும் குழந்தைதான். இப்படத்தின் விஷுவல் எபக்ட் பணிகள் ரசிகர்களை ஆச்சரியத்துக்குள்ளாக்கும்‘ என குறிப்பிட்டுள்ளார். அதேபோல் டிரைலரை பார்த்த உதயநிதி ஸ்டாலின்,‘விஸ்வரூபம் 2ம் பாக டிரைலர் பார்த்து ஆச்சரியம் அடைந்தேன். உலகநாயகன் கமல் மட்டும்தான் இதுபோன்ற படத்தை செய்ய முடியும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

நாயகன் வேடம் வேண்டாம்!


‘ரகளபுரம்‘ படத்தில் கருணாசுடன் சேர்ந்து மற்றொரு ஹீரோவாக நடித்திருப்பவர் பரத் ரெட்டி. அவர் கூறும்போது, ‘தமிழில் கமல் நடித்த வேட்டையாடு விளையாடு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தேன். இந்த படத்தை பார்த்துதான் ‘ரகளபுரம்‘ படத்தில் கருணாஸ் எனக்கு போலீஸ் அதிகாரியாக நடிக்க வாய்ப்பு தந்தார்.

 Do not play the hero

அடுத்து சுந்தரபாண்டியன் இயக்கும் ‘இது கதிர்வேலன் காதல்‘, ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் தயாரிக்கும் படம், ‘சேட்டை‘ இயக்குனர் கண்ணன் இயக்கும் படங்களில் நடிக்கிறேன். ஐதராபாத்தில் இதய அறுவை சிகிச்சை டாக்டராக பணிபுரிந்தாலும் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்த விஷயம். ஹீரோ ஆக வேண்டும் என்ற ஆசை எனக்கில்லை. குணசித்திரம் உள்ளிட்ட வேடங்களே போதும். நடிப்புக்காக டாக்டர் பணியை விடமாட்டேன்’ என்றார்.

 
back to top