‘விஸ்வரூபம்‘ 2ம் பாகம் முன் முதல்பாகம் வெறும் குழந்தைதான் என்று அதில் பணியாற்றும் டெக்னீஷியன் கூறினார். ‘விஸ்வரூபம் 2ம் பாகம்‘ இயக்கி நடித்து வருகிறார் கமல். ஆண்ட்ரியா, பூஜாகுமார் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் டிரைலரை 2வது கட்டமாக வெளியிட்டுள்ளார் கமல். ஆக்ஷன் பகுதிகள் நிறைந்த படமாக இப்படம் உருவாகி வருகிறது.திரையுலகை சேர்ந்த சிலர் டிரைலரை பார்த்து பாராட்டினர். விஷுவல் எபக்ட்ஸ் சூபர்வைசர் மதுசூதனன் தனது இணைய தள டுவிட்டர் பக்கத்தில், ‘விஸ்வரூபம் 2ம் பாக டிரைலர் என்னை பெரிதும் கவர்ந்தது. இந்த டிரைலரை பார்க்கும்போது ஏற்கனவே வெளியான விஸ்வரூபம் முதல் பாகம் இந்த 2ம்பாகத்தின் முன் வெறும் குழந்தைதான். இப்படத்தின் விஷுவல் எபக்ட் பணிகள் ரசிகர்களை ஆச்சரியத்துக்குள்ளாக்கும்‘ என குறிப்பிட்டுள்ளார். அதேபோல் டிரைலரை பார்த்த உதயநிதி ஸ்டாலின்,‘விஸ்வரூபம் 2ம் பாக டிரைலர் பார்த்து ஆச்சரியம் அடைந்தேன். உலகநாயகன் கமல் மட்டும்தான் இதுபோன்ற படத்தை செய்ய முடியும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.



6:08 PM
Unknown
Posted in:
0 comments:
Post a Comment