.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, November 10, 2013

ஐரோப்பிய விண்கலம் நாளை பூமியில் விழக்கூடும்: விஞ்ஞானிகள் தகவல்!

 

ஜியோசி எனப்படும் கடல் நீரோட்டத்தை ஆராயும் ஐரோப்பிய செயற்கை கோள் ஒன்று செயல் இழக்க செய்யப்படுகிறது. இன்று அல்லது நாளை அது பூமியில் விழக்கூடும் என விஞானிகள் கருதுகின்றன.

கடந்த 2009ம் ஆண்டு மார்ச் மாதத்தில் கடல் நீரோட்ட ஈர்ப்பு பற்றி ஆயவு செய்ய இது விண்ணில் செலுத்தபப்ட்டது. ஆனால் அக்டோபர் 21ம் தேதி எரிபொருள் பிரச்சனையால் பராமரிப்பு இன்றி சக்தி இழந்தது. சுமார் 80 கிலோமீட்டர் உயரத்தில் இந்த விண்கலம் உடைந்து  160 கி.மீ உயரத்தில் இருந்து வெற்றுப்பாதையில் விழக்கூடும் என ஐரோப்பிய விண்வெளி ஏஜென்ஸி தெரிவிகிறது.

அதோடு இந்த விண்கல துண்டுகள் எந்த நேரத்தில் எந்த இடத்தில் விழும் என கணிக்கமுடியாது என்றும் ஐரோப்பிய விண்வெளி ஆராச்சியாளர் ஒருவர் தெரிவித்தார். மேலும் ஒரு மனிதன் விண்கலம் தாக்கி இறந்தான் என்பது இதற்கு முன் நடந்ததில்லை.  மின்னல் தாகுவதை விட விண்கலம் தாக்குவது 65 ஆயிரம் மடங்கு குறைவு.

1997ம் ஆண்டு துல்சா, ஒக்லஹோமாவில் ஒரு பூங்காவில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த போது வில்லியம்ஸ் எனபவர் மீது ஒரு உலோக துண்டு விழுந்து தாக்கியது. அப்போது அது டெல்டா ராக்கெட் துண்டு என உறுதி செய்யப்பட்டதாக உள்ளூர் செய்தி தெரிவித்தது.

இந்த சம்பவத்தில் வில்லியம்ஸ் காயம் அடைந்தார். என்பது குறிப்பிடத்தக்கது.

“வைக்கோல் குக்கர்” எட்டாம் வகுப்பு மாணவர் ரிஷி சித்து சாதனை!

 vaikool

வைக்கோல் மூலம் வீட்டில் சமையல் எரிபொருளை மிச்சப்படுத்தலாம்” என்கிறார் கோபிச்செட்டிபாளையம், ஸ்ரீ நேஷனல் பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவர் ரிஷி சித்து.

”எனக்கு அறிவியல் மீது ஆர்வம் அதிகம். அறிவியல் சம்பந்தமான புத்தகங்களை நிறையப் படிப்பேன். ‘அடிக்கடி பெட்ரோல், சிலிண்டர் விலையை ஏத்திடுறாங்க. குடும்பத்தை நடத்துறது பெரிய சவாலா இருக்கு’னு அப்பாவும் அம்மாவும்  பேசிக்குவாங்க. இதுக்கு நாம் ஏதாவது செய்யலாமேனு நினைச்சேன். அப்போ உருவானதுதான் இந்த வைக்கோல் குக்கர்” என்ற ரிஷி சித்து, அதன் செய்முறையை விளக்கினார்.

”சாதம் சமைக்க, பாத்திரத்தில் தண்ணியைக் கொதிக்கவெச்சு, அதில் அரிசியைப் போடுவோம். அது முழுமையா வேகும் வரை காஸ் அடுப்பு எரியும். அப்படி இல்லாமல், ஒரு கொதிவந்ததும் அந்தப் பாத்திரத்தை எடுத்து, வைக்கோல் நிரப்பப்பட்ட அட்டைப் பெட்டியில நடுவில் வைக்கணும். பிறகு, வைக்கோலை அடைச்சு செய்த ஒரு தலையணையால் மூடிடணும். வைக்கோல் என்பது திறன் குறைந்த ஒரு வெப்பக் கடத்தி. அதனால், அது வெப்பம் வெளியே போகாமல் பாதுகாக்கும். அந்த வெப்பத்தில் உள்ளே இருக்கும் அரிசி, நாம குக்கரில் சமைக்கும் நேரத்தில் வெந்துவிடும். இதனால், எரிபொருள் மிச்சம்’ என்றார் ரிஷி.

சாதம் மட்டுமல்ல; பருப்பு, சுண்டல் மற்றும் அனைத்து விதமான காய்கறிகளையும் இப்படி வைக்கோல் குக்கர் மூலம் வேகவைக்கலாம்.

”இதனால், நேரம் மற்றும் எரிபொருள் மிச்சப்படும்;  ஆரோக்கியமானதும்கூட. முழுக்க முழுக்க இயற்கை சார்ந்தது. குக்கரில் சமைக்கிறப்போ, கஞ்சி வெளியே போக வாய்ப்பு இல்லாததால் அரிசியோட கலந்துடுது… இது சர்க்கரை நோய்க்குக் காரணமாயிடுது. ஆனா, இந்த முறையில் நாம் கஞ்சியைத் தனியே வடிச்சுக்கலாம். சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் கட்டுப்படுத்தும்” என்கிறார்.

ரிஷி சித்துவின் இந்தக் கண்டுபிடிப்பு, டெல்லியில் நடைபெறும் பாலஸ்ரீ விருதுக்கு தமிழ்நாட்டில் இருந்து அனுப்பப்பட்ட 15 சிறந்த கண்டுபிடிப்புகளில்  ஒன்றாகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளது.

”விருது கிடைப்பதைவிட, இதைப் பார்த்து நூறு பேர் பயன்படுத்தினாலும் கணிசமான அளவு எரிபொருள் மிச்சப்படுமே. நாட்டுக்கு செய்யும் நல்ல விஷயமா அதை நினைக்கிறேன்” என்று ‘பெரிய மனுஷ’த் தோரணையில் பொதுநல அக்கறையுடன் சொல்கிறார் ரிஷி சித்து.

வாழ்த்துகள் சித்து!

Apple iPhone 6. நவீன வசதிகளுடன் வெளியாகவுள்ளது!

ஆப்பிள் கம்ப்யூட்டர்  உலகின் மிகப்பெரிய கணினி மற்றும்    தகவல் தொடர்பு     சாதனங்களைத் தயாரித்து     வெளியிடும்      நிறுவனம்.

ஆப்பிள் கம்ப்யூட்டர்கள் ஆனாலும் சரி,  அதனுடன் தொடர்புடைய மொபைல்கள் போன்ற தகவல்கள் தொடர்பு சாதனங்கள் ஆனாலும் சரி… அதற்கென தனியான iOS ல் இயங்கு கூடிய இயங்குதளங்களைப் பெற்றிருக்கிறது.


ஆப்பிள் கம்ப்யூட்டர் மற்றும் மொபைல்களின் பாதுகாப்பும் மிக மிக நேர்த்தியாக கட்டமைக்கப்பட்டவை. வேறு யாராலும் அதன் கட்டமைப்பைச் சேதப்படுத்தி எளிதில் வைரஸ் தாக்குதல்களை மேற்கொள்ள முடியாது. அந்த வகையில் வெளியிடப்பட்ட ஒரு அருமையான ஆப்பிள் ஸ்மார்ட்போன் Apple iphone 5s.

 Apple iPhone 5s Smartphone specifications:

•4Inch Retina Display
• Nano SIM
• A6 Quad Core Processor
• 1GB RAM
• 8MP Camera
• Facetime HD Camera
• Bluetooth 4.0
• New Lightning Dock
•SIRI

இப்போனில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்களால் விற்பனை சக்கைப் போடு போட்டுக்கொண்டிருக்கிறது. தற்பொழுது உள்ள நிலைமையில் ஆப்பிள் போன் 5s கிட்டதட்ட விற்பனையாகிவிட்டது. இனி புதியதாக தயாரித்து விற்பனைக்கு வெளியிட்டால்தான் என்ற நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் ஆப்பிள் தனது புதிய ஸ்மார்ட் போனை வெளியிட உள்ளது. ஆப்பிள் ஐபோன 6 என பெயரிடப்பட்டுள்ள இப்போனில் ஆப்பிள் 5S Smartphone விட பல மடங்கு நவீன வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் உலவுகின்றன.

 அப்படி என்னதான் அதில் இடம்பெற்றுள்ளன என்பதைப் பார்ப்போம்.

•மிகப்பெரிய திரையுடன் கூடிய Retina Display உடன் வெளிவர உள்ளது.

•திரையின் அளவு 4.8 அங்குலம்.

•வயர்லஸ் சார்ஜிங் வசதி…

•சாம்சங் நிறுவனம், எல்.ஜி நிறுவனம் வெளியிட்டுள்ள வளைந்த Flexible Screen போன்றதொரு தோற்றத்தையும் ஆப்பிள் ஐபோன் 6 ம் பெற்றிருக்கும் என நம்ப்பபடுகிறது.

இப்போன் அடுத்த ஆண்டு ஜூலை 2014 க்குள் வெளியிடப்படும் என ஆப்பிள் நிறுவனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

5ஜி வலையமைப்புக்கு 600 மில்லியன் முதலீடு!


அடுத்த தலைமுறை வலையமைப்பான 5 ஜி (5th Generation) தொடர்பான ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கென 600 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவுள்ளதாக ஹுவாயி அறிவித்துள்ளது.

தற்போது சில நாடுகளில் மட்டுமே 4ஜி அதாவது 4 ஆம் தலைமுறை வலையமைப்பு பாவனையில் உள்ளது. சில நாடுகளில் பரீட்சாத்தமாக வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் 5ஜி தொழிநுட்ப ஆராய்ச்சிக்கென 600 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிடவுள்ளதாக அறிவித்துள்ளது. 5ஜி வலையமைப்பானது எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு பாவனைக்கு வருமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை தென்கொரிய நிறுவனமான செம்சுங் மின்னல் வேக 5ஜி கம்பியில்லா தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக பரீட்சித்துள்ளதாக அண்மையில் அறிவித்திருந்தது.

இதன்மூலம் இரண்டு கிலோமீற்றர் தொலைவினுள் , செக்கனுக்குள் 1 ஜிகா பைட் தரவுப் பரிமாற்ற வேகம் சாத்தியப்பட்டுள்ளதாகவும் 2020 ஆம் ஆண்டளவில் இத்தொழில்நுட்பம் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படுமெனவும் செம்சுங் தெரிவித்திருந்தது.

இத்தொழில்நுட்பத்தின் மூலம் முப்பரிமாண திரைப்படங்கள், கேம்கள், அல்ட்ரா எச்.டிரியல் டைம் ஸ்ட்ரீமிங் ஆகியவற்றை எவ்வித தங்கு தடையுமின்றி மேற்கொள்ள முடியுமென செம்சுங் சுட்டிக்காட்டியிருந்தது.
 
back to top