.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, November 27, 2013

பெண்கள் வாயாடிகள் ஆவது நல்லது!

பெண்களுக்கு ஒரு விசேஷ குணம் உண்டு. ஏதேனும் சக தோழியைக் கண்டால் உற்சாகமான உரையாடலை சட்டென ஆரம்பித்து விடுகிறார்கள். கடைவீதி, அலுவலகம், ஆலயம் ஏன் சுட்டெரிக்கும் தார் ரோடு என்றால் கூட இந்த உரையாடல் தடைபடுவதில்லை.

நலமா எனத் தொடங்கும் உரையாடல் குழந்தைகள், வீடு, வேலை, மாமியார், நண்பர்கள் என கிளை விட்டுப் பரந்து விரிந்து பொழுது போவதை அறியாமல் பேசிக்கொண்டே இருப்பார்கள்.

பெண்களின் உரையாடல் பெரும்பாலும் வறட்டு உரையாடலாய் இருப்பதில்லை. சிரிப்பும், கேலியும், கிண்டலும், உற்சாகமும் என உலகத்தின் மிக முக்கியமான பணி உரையாடல் என்பது போல அவர்கள் அதில் ஒன்றி விடுவார்கள்.

ஆண்கள் பலருக்கும் இந்த கலை வாய்ப்பதில்லை. “நலமா ?” என ஆரம்பிக்கும் உரையாடல் “நல்லா இருக்கேன்” என்ற பதிலைக் கேட்டபின் எப்படித் தொடர்வது என தெரியாமல் நொண்டியடிக்கும்.

அதனால் எழுகின்ற பொறாமையோ என்னவோ “ இந்தப் பெண்களே இப்படித்தான், யாரையாவது பார்த்தால் போதும் மணிக்கணக்காய் பேச ஆரம்பித்து விடுவார்கள்” என ஆண்கள் அடிக்கடி அலுத்துக் கொள்கிறார்கள்.

இப்படி மனம் விட்டு உரையாடுவதும், நண்பர்களுடன் பேசி மகிழ்வதும் பெண்களின் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது எனும் புதிய ஆராய்ச்சி ஒன்றை மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வெளியிட்டு கதை பேசும் பெண்களின் மனதில் இன்னும் கொஞ்சம் இன்பத்துப் பால் வார்த்திருக்கிறார்கள்.

மனித உடலிலுள்ள புரோகெஸ்ட்ரோன் எனும் ஹார்மோன் மன அழுத்தத்தையும், கவலை, பதட்டம் போன்றவற்றையும் குறைக்கக்கூடிய தன்மை உடையது. மனம் விட்டுப் பேசி சிரித்து உரையாடும் பெண்களின் உடலில் இந்த ஹார்மோன் அதிக அளவில் இருப்பதாகவும், இதுவே பெண்களின் மன மகிழ்ச்சிக்கு உத்தரவாதம் தருவதாகவும் அவர்கள் மருத்துவ விளக்கமும் அளிக்கின்றனர்.

இத்தகைய உரையாடல்கள் வெறுமனே பொழுது போக்காக மட்டும் அமைந்து விடாமல் பெண்களுடைய நட்பு இறுக்கத்துக்கும், உதவும் மனப்பான்மைக்கும் கூட துணை செய்கிறதாம்.

ஆனால் இப்போதெல்லாம் பெரும்பாலும் தொலைக்காட்சித் தொடர்களில் மாலை நேரம் முழுவதும் செலவிடும் பெண்களுக்கு உரையாடலுக்காய் செலவழிக்கும் நேரம் குறைந்து கொண்டே வருகிறது என்பது கண் கூடு. அத்தகைய சற்றும் பயன் தராத தொலைக்காட்சித் தொடர்களை விலக்கி விட்டு ஆரோக்கியமான உரையாடலுக்குப் பெண்கள் திரும்ப இந்த ஆராய்ச்சி அழைப்பு விடுக்கிறது.

ஆர்யாவுக்கு ஜோடியான ஸ்ருதி!


'முன் தினம் பார்த்தேனே', 'தடையறத் தாக்க' படங்களை இயக்கிய மகிழ்திருமேனி தற்போது புதிய படத்தை இயக்குகிறார். இதில் ஆர்யாவும், ஸ்ருதிஹாசனும் நடிக்கிறார்கள். படத்துக்கு 'வாடி வாசல்' என டைட்டில் வைத்திருக்கிறார்.

'வாடிவாசல்' என்பது ஜல்லிக்கட்டின் போது காளைகளை ஒவ்வொன்றாக அவிழ்த்து விடும் இடமாகும். அதிரடி ஆக்ஷன் மற்றும் பொழுதுபோக்கு படமான இப்படம் நடுத்தர குடும்பத்தினரின் வாழ்க்கையை பிரதிபலிப்பதாக இருக்குமாம்.

 ‘நான் அவன் இல்லை’, ‘அஞ்சாதே’, ‘மாப்பிள்ளை’, ‘போடா போடி’ ஆகிய படங்களை தயாரித்த ஹித்தேஷ் ஜபக் இப்படத்தைத் தயாரிக்கிறார்.'வாடி வாசல்' படப்பிடிப்பு  விரைவில் கோவாவில் தொடங்க இருக்கிறது.

அன்புக்கு நான் அடிமை - கவிதை!


அன்புக்கு அடிமையாகாத ஜீவன்கள்

 உலகில் எதுவுமே...இல்லை...!

மிருகத்தை மனிதன்

 மிருகமாக பார்க்கிறான்....

மனிதனை மிருகங்கள்...

பல நேரம்...

அன்பாகவே பார்க்கின்றது...!

எந்த உயிரினமும்...

தன்னிடம் அன்பு காட்டும் வரை..

அன்பையையே ..

அதுவும் வெளிப்படுத்துகிறது...!

 

சாம்சங்கின் சூப்பர் டெக்னிக்: விழி பிதுங்கிய ஆப்பிள்!


 அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்துக்கு எதிரான காப்புரிமை வழக்கில், சாம்சங் நிறுவனத்துக்கு 100 கோடி டொலர் அபராதம் விதிக்கப்பட்டது.

சாம்சங் நிறுவனம் தனது ஆன்ட்ராய்டு போன்களில், ஆப்பிள் போனின் தொழில்நுட்பத்தை காப்பியடித்து விற்பனை செய்து வருவதாக ஆப்பிள் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

பதிலுக்கு ஆப்பிள் நிறுவனம்தான் தங்கள் தொழில்நுட்பத்தை திருடி பயன்படுத்தி வருவதாக சாம்சங் நிறுவனம் வாதாடியது.

கலிபோர்னியாவின் சான் ஜோஸ் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், சாம்சங் நிறுவனம் காப்புரிமை விதிமுறைகளை மீறி விட்டதாகவும் அதனால் ஆப்பிள் நிறுவனத்துக்கு 100 கோடி டொலர்(6,200 கோடி) அபராதமாக அளிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதனையடுத்து கடந்த புதன்கிழமை கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்துக்கு 30 லொறிகள் வந்துள்ளது.

இதனை பார்த்த செக்யூரிட்டி முகவரி மாறிவந்துள்ளதாக வாதாடியுள்ளார்.

அதற்கு சரியான முகவரி தான் என்று கூறி இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக்குக்கு ஒரு போன் வந்துள்ளது.

சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ குவான் கியூன் பேசினார், உங்களுக்கு தர வேண்டிய நஷ்ட ஈட்டைத்தான் அனுப்பியிருக்கிறோம், பெற்றுக் கொள்ளுங்கள் எனக் கூறியிருக்கிறார்.

அத்தனை லொறிகளிலும் சில்லரை காசுகள் குவிந்திருந்தது, அனைத்தும் 5 சென்ட் நாணயங்கள்.

மொத்தம் 2 ஆயிரம் கோடி காசுகள். ஆப்பிள் நிறுவனத்தின் குடோன்களில் 30 டிப்பர் லாரிகளில் இருந்தும் நாணயங்கள் கொட்டப்பட்டுள்ளன.

இதை எப்படி எண்ணுவது, எங்கே பாதுகாப்பாக வைப்பது எனத் தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார்கள் ஆப்பிள் நிறுவன அதிகாரிகள்.

 
back to top