'முன் தினம் பார்த்தேனே', 'தடையறத் தாக்க' படங்களை இயக்கிய மகிழ்திருமேனி தற்போது புதிய படத்தை இயக்குகிறார். இதில் ஆர்யாவும், ஸ்ருதிஹாசனும் நடிக்கிறார்கள். படத்துக்கு 'வாடி வாசல்' என டைட்டில் வைத்திருக்கிறார்.
'வாடிவாசல்' என்பது ஜல்லிக்கட்டின் போது காளைகளை ஒவ்வொன்றாக அவிழ்த்து விடும் இடமாகும். அதிரடி ஆக்ஷன் மற்றும் பொழுதுபோக்கு படமான இப்படம் நடுத்தர குடும்பத்தினரின் வாழ்க்கையை பிரதிபலிப்பதாக இருக்குமாம்.
‘நான் அவன் இல்லை’, ‘அஞ்சாதே’, ‘மாப்பிள்ளை’, ‘போடா போடி’ ஆகிய படங்களை தயாரித்த ஹித்தேஷ் ஜபக் இப்படத்தைத் தயாரிக்கிறார்.'வாடி வாசல்' படப்பிடிப்பு விரைவில் கோவாவில் தொடங்க இருக்கிறது.



8:17 PM
Unknown

Posted in:
0 comments:
Post a Comment