.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, December 22, 2013

பசுக்கள் கோமாரி நோயால்


இதுவரையில் சுமார் 8000 பசுக்கள் கோமாரி நோயால் செத்துமடிந்துவிட்டன. கவலைப்பட யாரும் இல்லை தமிழ்நாட்டில். சுலபமான மருந்து ஒன்று உள்ளது...

ஜீரகம், வெந்தயம்,மிளகு மூன்றும் இரண்டிரண்டு ஸ்பூன் எடுத்து ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைத்து பின் மஞ்சள் 2 ஸ்பூன் , பூண்டு 4 பல்லு, நாட்டு சர்க்கரை 100 கிராம், தேங்காய் பூ 1 மூடி அத்தனையையும் அரைத்து சட்டினியாக்கி ஒரு வேளை க்கு ஊட்டிவிடவும். இப்படி 3 நாள் 3 வேளை செய்யின் பசு தெளியும்.

மேலும் ஒரு லிட்டர் நல்லண்ணையில் பூண்டு, மஞ்சள், வேப்பிலை,துளசி,மருதாணி, குப்பைமேனி இவைகளை சேர் ததுக் காய்ச்சி ஆரவைத்து நான்கு கால்களிலும் தடவவும். நன்றி.

நல்ல பாஸ்வேர்டை உருவாக்க எளிய வழி


நல்ல பாஸ்வேர்டை உருவாக்க எளிய வழி


 பாஸ்வேர்டை மறந்து விடுங்கள். இனி பாஸ்பிரேசை பயன்படுத்துங்கள், இதுவே பாதுகாப்பான பாஸ்வேர்டை உருவாக்குவதற்கான எளிய வழி என்கின்றனர் நிபுணர்கள். அது என்ன பாஸ்பேர்ஸ்? பாஸ்வேர்டு என்றால் கடவுச்சொல்! பாஸ்பிரேஸ் என்றால் கடவுவாக்கியம். அதாவது ஒரு வாக்கியத்தில் இருந்து பாஸ்வேர்டை உருவாக்குவது .

உதாரணத்திற்கு நான் இந்த பள்ளியில் இந்த ஆண்டு படித்தேன், என்ற வாக்கியத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த வாக்கியத்தில் ஒவ்வொரு வார்த்தைகளிலும் உள்ள முதல் எழுத்துக்களை மட்டும் எடுத்து வரிசையாக எழுதுங்கள். அதன் நடுவே மானே தேனே பொன்மானே போடுவது போல சில எழுத்துக்களை பெரிய எழுத்தாக எழுதுங்கள். எண்கள் வருவது போல பார்த்துக்கொள்ளுங்கள்:. இப்போது கிட்டத்தட்ட 15-16 எழுத்துக்களைல் பாஸ்வேர்டு தயாராகிவிடும். இந்த எழுத்து வரிசையை யாராலும் அத்தனை எளிதில் ஊகித்துவிடவும் முடியாது. அதன் காரணமாகவே தாக்காளர்களாலும் நடுவே இதனை கண்டறிந்து உடைக்க முடியாது.

இந்த எழுத்து வரிசையை பார்க்கும் போது முதலில் உங்களுக்கே தலை சுற்றும். இத்தனை கடினமானதை எப்படி நினைவில் கொள்வது என மலைப்பாக இருக்கும். ஆனால் நீங்கள் இதை உருவாக்க பயன்படுத்திய அடிப்படை வாக்கியத்தை நினைவில் வைத்திருந்தால் போதுமானது, அதிலிருந்து பாஸ்வேர்டை உருவாக்க பயன்படுத்திய யுக்தியை கொண்டே அதை மீண்டும் எழுதிவிடலாம்.. இதற்கான குறிப்புகளை மட்டும் நினைவில் கொண்டால் போதுமானது.

பாஸ்வேர்டை உருவாக்க பெரும்பாலலும் எல்லோரும் பொதுவான வழிமுறைகல்ளையே கையால்கின்ற்னர். இவற்றை கொண்டே தாக்காளர்கள் பாஸ்வேர்டை யூகித்து விடுகின்றனர். ஆனால் வாக்கியங்கள் கொண்டு பாஸ்வேர்டை உருவாக்கும் போது மற்றவர்கள் அதை யூகிப்பது கடினம். அடிப்படை வார்த்தை தெரிந்தால் கூட அதில் செய்த மாற்றங்களை அப்படியே செய்வது கடிமானது.

எனவே தான் பாஸ்பேரேசை பயனப்டுத்துங்கள் என்கின்றனர்.

இண்டெர்நெட்டில் அந்த கால டி.வி நிகழ்ச்சிகள்.


இண்டெர்நெட்டில் அந்த கால டி.வி நிகழ்ச்சிகள்.


கீழே உள்ள‌ இணையதளம் உங்களை வியப்பில் ஆழ்த்தக்கூடும். அப்படியே பிளேஷ்பேக் நினைவுகளில் மூழ்க வைத்துவிடும். இந்த தளம் 1980 களுக்கு பின்னோக்கி அழைத்துச்சென்று அந்த கால தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்து ரசிக்க வைக்கிறது. அதுவும் எப்படி அந்த காலத்தில் தொலைக்காட்சி பார்த்த அனுபவத்தை பெரும் வகையில். ‘

இப்போது பிளாட் டிவிகளையும் பிளஸ்மா டிவிகளையும் கொஞ்சம் மறந்து , டயனோரா, சாலிடேர் காலத்துக்கு செல்லுங்கள் பார்க்கலாம். ( இளம் தலைமுறையினர் கூகுலில் தேடிப்பார்க்கவும் ,அல்லது தில்லுமுல்லு கால படங்களில் டிவியை பார்க்கவும்). ஒரு பெரிய மேஜையை அடைத்துக்கொள்ளும் அளவுக்கு அமைந்திருந்த அந்த நாள் தொலைக்காட்சி பெட்டியில் நிகழ்ச்சியை பார்ப்பது போலவே இணைய திறையில் நிகழ்ச்சிகள் இந்த தளத்தில் ஒளிபரப்பாகின்றன. முகப்பு பக்கத்தில் இருக்கும் அந்த கால டிவியில் நிகழ்ச்சிகள் தோன்றுகின்றன. அதன் பக்கத்தில் டிவி பட்டன்கள் இருக்கின்றன. ரிமோட்டை மறந்து விட்டு இந்த பட்டன்களை இயக்குவதன் மூலம் டிவியில் நிகழ்ச்சிகளை பார்க்கலாம்.

அருகிலேயே எந்த வகையான நிகழ்ச்சிகளை பார்க்கலாம் எனும் பட்டியல் இருக்கிறது.

கிழே ஆண்டை தேர்வு செய்து கொள்ளாம்.

பிளேஷ்பேக்கில் முழ்கி மகிழுங்கள்.

இணையதள முகவரி:http://my80stv.com/#RLpc-NSoR6g

ஆனால் இந்த தளத்தில் ஒரே குறை அமெரிக்கா சார்ந்த நிகழ்ச்சிகளையெ பார்க்கலாம். நம்மூருக்கும் இப்படி ஒரு தளம் அமைத்தால் தூர்தர்ஷன் நிகழ்ச்சிகளை பார்க்கலாம். அடிக்கடி தடங்களுக்கு வருந்துகிறோம் அறிவுப்பு தோன்றுவதையும் பார்க்கலாம். தூர்தர்ஷனை என்ன தான் சிலர் கிண்டல் செய்தாலும் இன்றைய அழுகாச்சி மெகா சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோ அட்டகாசங்களுக்கு டி.டி எவ்வளவோ மேல்.

சாப்ட்வேர் பாதுகாப்பு சேவை அன்செக்கி


சாப்ட்வேர் பாதுகாப்பு சேவை அன்செக்கி

 எப்போதேனும் உங்கள் இணைய முகப்பு பக்கம் உங்களுக்கு தெரியாமலே மாறியிருப்பதை கவனித்திருக்கிறீர்களா? அதே போல நீங்கள் பயன்படுத்தும் தேடியந்திரம் திடிரென தானாக மாறியிருக்கிறதா ? இவ்வளவு ஏன் உங்கள் பிரவுசரும் மாறியிருக்கலாம், கவனித்திருக்கிறீர்களா?

இந்த மாற்றங்களை நீங்கள் கவனித்து இவற்றுக்கான காரணம் புரியாமல் விழித்திருக்கலாம். அல்லது இந்த மாற்றங்களை கவனிக்கமாலே கூட இருந்திருக்கலாம். அநேகமாக நீங்கள் புதிதாக ஒரு சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்த பிறகு இந்த மாற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம். ஏனெனில் பல சாப்ட்வேர்கள் , அவற்றை இன்ஸ்டால் செய்யும் போது கூடவே தேவையில்லாத வேறு சில சாப்ட்வேர் துண்டுகள் அல்லது நீட்டிப்புகளையும் சேர்த்தே நிறுவுகின்றன. இந்த அழையா விருந்தாளிகள் தான் உங்கள் கம்ப்யூட்டரில் மாற்றங்களை செய்கின்றன. உங்களை அறியாமலே பின்னணியில் கூட இவை செயல்படலாம்.

பெரும்பாலான நேரங்களில் இன்ஸ்டால் செய்யப்படும் போதே , இவை தேவையா என கேட்கப்பட்டிருக்கலாம். அவற்றை நீங்கள் கவனிக்கமாலும் இருந்திருக்கலாம். எது எப்படியோ, புதிய சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்யும் போது அந்த சாப்ட்வேர் தவிர வேறு எந்த தேவையில்லாத சாப்ட்வேர் பயன்பாடுகளும் உங்கள் கம்ப்யூட்டரில் நிறுவப்படாமல் பாதுகாத்து கொள்ள விரும்பினால் அன்செக்கி சேவையை பயன்படுத்தி பார்க்கலாம்.
சாப்டேவேர்டன் நேரடியாக அல்லது மறைமுகமாக நிறுவப்படும் தேவையில்லாத பயன்பாடுகளை கண்டறிந்து அவற்றை தடுத்து நிறுத்துவதாக அன்செக்கி உறுதி அளிக்கிறது. அதே போல ஏதேனும் உபரி சாப்ட்வேர் நிறுவப்படுவதாக் இருந்தால் அது பற்றி எச்சரிக்கையும் செய்வதாக சொல்கிறது. ஆக புதிய சாப்ட்வேரை இன்ஸ்டால் செயவதாக இருந்தால் அதற்கு முன்னர் அன்செக்கியை நிறுவிக்கொள்ளலாம். ( அன்செக்கி வேறு எதையும் நிறுவாது என நம்புவோம்).

இப்படியாக அன்செக்கி சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்யும் போது பாதுகாப்பு அளிப்பதோடு , குறிப்பிட்ட சாப்ட்வேர்கள் அப்டேட் செய்யப்படும் போது தானாகவே அந்த மேம்பாடுகளையும் செயலுக்கு கொண்டு வருகிறது.
இணையதள முகவரி: http://unchecky.com/
 
back to top