இண்டெர்நெட்டில் அந்த கால டி.வி நிகழ்ச்சிகள்.
கீழே உள்ள இணையதளம் உங்களை வியப்பில் ஆழ்த்தக்கூடும். அப்படியே பிளேஷ்பேக் நினைவுகளில் மூழ்க வைத்துவிடும். இந்த தளம் 1980 களுக்கு பின்னோக்கி அழைத்துச்சென்று அந்த கால தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்து ரசிக்க வைக்கிறது. அதுவும் எப்படி அந்த காலத்தில் தொலைக்காட்சி பார்த்த அனுபவத்தை பெரும் வகையில். ‘
இப்போது பிளாட் டிவிகளையும் பிளஸ்மா டிவிகளையும் கொஞ்சம் மறந்து , டயனோரா, சாலிடேர் காலத்துக்கு செல்லுங்கள் பார்க்கலாம். ( இளம் தலைமுறையினர் கூகுலில் தேடிப்பார்க்கவும் ,அல்லது தில்லுமுல்லு கால படங்களில் டிவியை பார்க்கவும்). ஒரு பெரிய மேஜையை அடைத்துக்கொள்ளும் அளவுக்கு அமைந்திருந்த அந்த நாள் தொலைக்காட்சி பெட்டியில் நிகழ்ச்சியை பார்ப்பது போலவே இணைய திறையில் நிகழ்ச்சிகள் இந்த தளத்தில் ஒளிபரப்பாகின்றன. முகப்பு பக்கத்தில் இருக்கும் அந்த கால டிவியில் நிகழ்ச்சிகள் தோன்றுகின்றன. அதன் பக்கத்தில் டிவி பட்டன்கள் இருக்கின்றன. ரிமோட்டை மறந்து விட்டு இந்த பட்டன்களை இயக்குவதன் மூலம் டிவியில் நிகழ்ச்சிகளை பார்க்கலாம்.
அருகிலேயே எந்த வகையான நிகழ்ச்சிகளை பார்க்கலாம் எனும் பட்டியல் இருக்கிறது.
கிழே ஆண்டை தேர்வு செய்து கொள்ளாம்.
பிளேஷ்பேக்கில் முழ்கி மகிழுங்கள்.
இணையதள முகவரி:http://my80stv.com/#RLpc-NSoR6g
ஆனால் இந்த தளத்தில் ஒரே குறை அமெரிக்கா சார்ந்த நிகழ்ச்சிகளையெ பார்க்கலாம். நம்மூருக்கும் இப்படி ஒரு தளம் அமைத்தால் தூர்தர்ஷன் நிகழ்ச்சிகளை பார்க்கலாம். அடிக்கடி தடங்களுக்கு வருந்துகிறோம் அறிவுப்பு தோன்றுவதையும் பார்க்கலாம். தூர்தர்ஷனை என்ன தான் சிலர் கிண்டல் செய்தாலும் இன்றைய அழுகாச்சி மெகா சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோ அட்டகாசங்களுக்கு டி.டி எவ்வளவோ மேல்.
0 comments:
Post a Comment