.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, December 29, 2013

யூடியூப் வழங்கும் புதிய வசதி....? அற்புதம்!




தனிநபர் தொலைகாட்சி பற்றி எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இது வரை யோசிக்கவிட்டாலும் இனி யோசியுங்கள். ஏனெனில் தனிநபர் தொலைகாட்சி நடத்துவது மிகவும் சுலபமானது. அதை நீங்களும் கூட செய்யலாம். எப்படி என்று ஆர்வத்துடன் கேட்கிறீர்களா? பிரபல வீடியோ பகிர்வு சேவையான யூடியூப் இதற்கான வசதியை அறிமுகம் செய்துள்ளது.


இணைய உலகில் ஸ்டீரிமிங் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். பட்டனை தட்டியதும் குழாயில் இருந்து தண்ணீர் பாய்வது போல ஆடியோ அல்லது விடியோ கோப்புக்கள் கிளிக் செய்ததும் ஒளிபரப்பாகத்துவங்கி விடுவதை தான் ஸ்டீரிமிங் என்கின்றனர். ஸ்டீரிமிங் செய்யப்படும் போது கோப்புகளை டவுண்லோடு செய்யத்தேவையில்லை. ஒரு நிகழ்ச்சி நடக்கும் போதே ஸ்ட்டிர்மிங் செய்யப்பட்டால் அதை நேரடியாகவே பார்த்தோ கேட்டோ ரசிக்கலாம். இதற்கு லைவ் ஸ்டீரிமிங் என்று பெயர். தொலைகாட்சியில் நேரடி ஒளிபரப்புக்கு நிகரானது.


இப்போது யூடியூப்பிற்கு வருவோம். யூடியூப்பில் வீடியோக்களை பார்த்து ரசிப்பது போலவே நாமும் கூ ட அதில் சுலபமாக வீடியோக்களை பதிவேற்றலாம். விரும்பினால் யூடியூப்பில் ஒரு கணக்கு துவங்கி நமக்கான சேனலையும் அமைத்து கொள்ளலாம். இந்த சேனல் வசதியையே கூட நமக்கான தொலைக்காட்சி சேனல் என்று சொல்லலாம். பலர் வெற்றிகரமாக இப்படி யூடியூப்பில் சொந்த சேனை வைத்திருக்கின்றனர். வீடீயோ வலைப்பதிவாளர்களும் கூட இருக்கின்றனர்.


ஆனால் இந்த சேனலில் என்ன பிரச்சனை என்றால் நிகழ்ச்சிகளை நேரடியாக பார்க்க செய்ய முடியாது. ஏற்கனவே ஒளிப்பதிவு செய்த நிகழ்ச்சிகளை வீடியோ கோப்பாக பதிவேற்றி பார்க்க செய்யலாம்.
இதற்கு மாறாக நிகழ்ச்சிகளை நேரடியாக பார்க்க செய்ய முடிந்தால் எப்படி இருக்கும் எனும் ஏக்கத்தை பூர்த்தி செய்யும் வகையில் யூடியூப் சில மாதங்களுக்கு முன் நேரடி ஒளிபரப்பு வசதியை அறிமுகம் செய்தது. இதன் மூலம் நிகழ்ச்சிகளை அவை நடக்கும் போதே யூடியூப்பில் பார்க்க செய்வது சாத்தியம். முதலில் இந்த வசதி அதிக சந்தாதாரர்களை கொண்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பிறகு குறைந்தது ஆயிரம் சந்தாதாரர்களாவது இருக்க வேண்டும் என்று கூறப்பட்டது.


இப்போது யூடியூப்பில் சரி பார்க்கப்பட்ட கணக்கு உள்ள யாரும் இந்த வசதியை பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக, உங்களிடம் யூடியூப் கணக்கு இருந்தால் போதும் நீங்களும் கூட யூடியூப்பில் நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப துவங்கிவிடலாம். அது மட்டும் அல்ல கூகுல் ஹாங்கவுட்ஸ் சேவையையும் இதில் இணைக்க முடியும். எனவே ஹாங்கவுட்ஸ் பயன்படுத்துவர்கள் அதில் பகிர்ந்து கொள்ளும் வீடியோ தகவலை யூடியூப்பிலும் ஒருங்கிணைக்க முடியும். மேலும் இப்படி ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை எத்தனை பேர் பார்க்கின்றனர் என்பது போன்ற புள்ளி விவரங்களையும் யூடியூப்பே தருகின்றது.


வர்த்தக நிறுவனங்கள் மற்றும் இசைக்குழு போன்றவை இந்த நேரடி ஒளிபரப்பு வசதியை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்களோடு மேலும் துடிப்பான வழியில் தொடர்பு கொள்ளலாம் என்று சொல்லப்படுகிறது. ஏன் தனிநப்ர்களும் கூட இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.
திறமையும் ஆர்வாமும் இருந்தால் நீங்களே நிகழ்ச்சி தயாரித்து ஒளிபரப்பவும் செய்யலாம். அது பார்வையாளர்களை காவருமானால் உங்களுக்கான தனிநபர் தொலைகாட்சி தாயாராகிவிட்டது என பொருள். யார் கண்டது யூடியூப்பில் இத்தனை லட்சம் பேர் பார்த்த வீடியோ என்று தானே இப்போது பெசுகிறோம். இனி வரும் காலத்தில் இத்தனை லட்சம் பார்த்து ரசித்த நேரடி நிகழ்ச்சி என்று பேசப்படலாம்.

பற்றில்லாத பாஸ்வேர்டு செய்வோம்....?




இந்து மதத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கலாம், இல்லாமல் போகலாம். ஆனால் அதன் பற்றில்லாத தன்மை கொள்கை பாஸ்வேர்டு விஷயத்தில் பின்பற்றத்தக்கது. ஆய்வாளர்கள் அப்படி தான் சொல்கின்றனர். அதாவது பற்றில்லாத தன்மையுடன் பாஸ்வேர்டை உருவாக்க வேண்டும் என்கின்றனர்.

பாஸ்வேர்டில் என்ன பற்றும் பற்றில்லா தன்மையும் என்று கேட்கலாம். இதற்கு பதில் அறியும் முன் ஒரு நிமிடம் கண்களை மூடிக்கொண்டு புதிய பாஸ்வேர்டு ஒன்றை உருவாக்க பாருங்கள். நீங்கள் உருவாக்கிய பாஸ்வேர்டு எதுவாக இருதாலும் , அநேகமாக அது ஏதோ ஒரு விதத்தில் உங்களை சார்ந்ததாகவே இருக்கும். ஒன்று உங்கள் பெயர் அல்லது உங்கள் பிறந்த நாள் அல்லது உங்களுக்கு நெருக்கமானவர்களின் பெயர் … இப்படி உங்களை சார்ந்த விஷயங்கள் சார்ந்தே நீங்கள் பாஸ்வேர்டுக்கான எழுத்துக்களை தேர்வு செய்திருப்பீர்கள்.

இது இயல்பானது தான். தேர்வு செய்யப்பட்ட பாஸ்வேர்டு நினைவில் நிற்க பலரும் கையாளும் வழி இது. ஆனால் பாஸ்வேர்டு திருடர்களும் இவற்றை அறிந்திருப்பதா ல் , ஒருவரது தனிப்பட்ட விவரங்களை கொண்டு அவர்கள் பாஸ்வேர்டு என்னவாக இருக்கும் என யூகித்துவிட முடியும்.

இதை தடுக்க எளிய வழி இருக்கிறது. பாஸ்வேர்டுக்காக யோசிக்கும் போது உங்களை மறந்து விடுங்கள் ! உங்கள் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் நெருக்காமானவர்களின் விவரங்களை மனதில் கொள்ளாமல் யோசித்தீர்கள் என்றால் உருவாகும் பாஸ்வேர்டு உங்களோடு பற்றில்லாததாக இருக்கும். அப்போது அது களவாடப்பட முடியாததாகவும் இருக்கும்.

சும்மாயில்லை, தாக்காளர்கள் களவாடி வெளியிட்ட லட்சக்கணக்கான பாஸ்வேர்டுகளை ஆய்வு செய்து இந்த பற்றில்லாத வழியை கண்டுபிடித்துள்ளனர். பகிரங்கமான பயனாளிகளின் பாஸ்வேர்டுகளை பார்க்கும் போது அவற்றில் பளிச்சிடும் பொதுத்தன்மை அடிப்படையில் , பொதுவாக பாஸ்வேர்டு உருவாக்கத்தில் பெரும்பாலானோர் கடைபிடிக்கும் வழிகளை கண்டறிந்துள்ளனர்.

பெர் தோர்சியம் எனும் ஆய்வாளர் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளார். இதன் மூலம் அவர் முன்வைக்கும் பாஸ்வேர்டு பொது தன்மைகள் சில ; ஆண்கள் பாஸ்வேர்டு உருவாக்கத்தில் பரவலான வேறுபாட்டை நாடுகின்றனர். பெண்கள் நீளமான பாஸ்வேர்டை நாடுகின்றனர்.

சிவப்பு முடி கொண்ட பெண்கள் மிகச்சிறந்த பாஸ்வேர்டை உருவாக்குகின்றனர். தாடி வளர்த்த தலைகலைந்த ஆண்கள் மோசமான பாஸ்வேர்டுக்கு சொந்தக்காரர்களாக இருக்கின்றனர்.

எப்படி இருக்கிறது ஆய்வு !

தெரியுமா உங்களுக்கு?





1. குறுந்தகடு(சி.டி) செயல்படும் விதம்:

சிடிக்கள் என அழைக்கப்படும் காம்பாக்ட் டிஸ்க்குகள் அதில் பதிந்துள்ள தகவல்களை நடு மையத்திலிருந்து படிக்கத் தொடங்கி விளிம்பில் முடிக்கின்றன. இது மியூசிக் ரெகார்டுகளுக்கு எதிரான வழியாகும். மியூசிக் ரெகார்டுகள் விளிம்பிலிருந்து தொடங்கி நடுப்பாகம் செல்கின்றன.


 2. பாராசிடமால் மாத்திரையின் மறுபக்கம்:

மழை, குளிர் காலங்களில் குழந்தைகளுக்கு காய்ச்சலினால் உடலின் வெப்ப நிலை சராசரிக்கும் மிக அதிகமாகும் போது, "இழுப்பு' போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.காய்ச்சல் வெப்ப நிலையை உடனடியாகக் குறைக்க, பாராசிட்டமால் உதவுகிறது. ஆனால் 18 மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, அடிக்கடி பாராசிட்டமால் கொடுத்தால் ஆஸ்துமா, அலர்ஜி போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளது என, லண்டனில் நடந்த ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. 6 வயது குழந்தைகளுக்கு ஆஸ்துமா ஏற்பட்டதற்கான காரணங்களை ஆராயும் போது, அவர்களுக்கு ஒன்றரை வயதுக்குள் அதிகளவில் பாராசிட்டமால் கொடுத்திருந்தது தெரிய வந்துள்ளது. குழந்தைகள் நல மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையிலேயே, பாராசிட்டமாலைப் பயன் படுத்த வேண்டும். அவர்கள் நிர்ணயித்த அளவு மட்டுமே தர வேண்டும். பெற்றோர்கள் தன்னிச்சையாக பாராசிட்டமாலை குழந்தை களுக்கு தரக்கூடாது.



 3. கைபேசி தொலைந்தால் கண்டுபிடிக்க:

ஒரு மொபைல் வாங்கி இயக்கத் தொடங்கியவுடன் *#06# என்ற எண்ணை அழுத்தி அதன் தனி அடையாள எண்ணைத் (International Mobile Equipment Identity) தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மொபைல் போனுக்கான வாரண்டி இதனைச் சார்ந்ததாகும். மேலும் உங்கள் மொபைல் தொலைந்து போனால் இந்த எண்ணைக் கொண்டு தேடிக் கண்டுபிடிக்கலாம். 



4.குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகள்:


இந்தியாவில் ஓராண்டில் பிறக்கும் குழந்தைகளில் 2.5 கோடி பேர் ஏதாவது ஒரு குறையுடன் பிறக்கின்றனர். தமிழகத்தில் ஆண்டுக்கு 11.5 லட்சம் குழந்தைகள் எடைக்குறைவு உட்பட பல்வேறு குறைபாடுகளுடன் பிறக்கிறது. இந்தியாவில் 5 சதவிகிதம் பேர் டிஸ்லெக்சியா, ஆட்டிசம் போன்ற அரிய வகையிலான குறைகளுடன் பிறக்கின்றனர்.


5. 'ஆண்டி பயாடிக்’ மாத்திரை ஆபத்து!:

'ஆண்டி பயாடிக்’ மாத்திரைகளை அடிக்கடி சாப்பிடுவதால் ஜீரண உறுப்பு அரிக்கப்படுகிறது. இதனால் உடலில் உள்ள `பி காம்ப்ளக்ஸ்’ குறைகிறது. அதைத்தொடர்ந்து வாய் நாற்றம், தொண்டையில் அல்சர், நாக்கு வறண்டு இருத்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. தலைவலியிலும், காய்ச்சலிலும் பல வகைகள் இருக்கின்றன. இதில் ஏதேனும் ஒன்றால் பாதிக்கப்பட்டு, அது எந்த வகை என்று தெரியாமல் ஒரே மாத்திரையை தொடர்ந்து சாப்பிடுவது தவறு. இந்த பழக்கம் அதிகமானால் சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தாகிவிடலாம்.


6. அழிவின் விளிம்பில் தேசிய விலங்கு புலி:

இந்தியாவில் 1988 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை, தினமும் ஒரு புலி வீதம் எங்கோ ஒரு மூலையில் கொல்லப்பட்டது. இந்த வனவிலங்கு கழகம் ஒருமுறை கூட, கூடி சிந்திக்காததால் இதை தடுக்க முடியவில்லை. இவற்றின் தோல் சீனர்களின் வீடுகளை அலங்கரிக்கிறது. எலும்புகள் சீன மருந்துவத்தில் முக்கிய இடத்தை பெறுகின்றன. சீனர்கள் அதிகம் விலை கொடுப்பதால், இந்தியாவில் புலிகளை கொன்று ஏற்றுமதி செய்வது அதிகரித்தது. இப்படி புலிகளின் எண்ணிக்கை மிக குறைந்து போய் கொண்டிருப்பது, இந்திய அரசின் கவனத்திற்கு வந்தது. பின் போர் கால அடிப்படையில் புலிகளை காப்பதற்கான எல்லா நடவடிக்கைகளும் எடுத்து வருகிறது.

கம்ப்யூட்டர் மேதைக்கு அரச மன்னிப்பு....?



ஒரு வரலாற்று தவறு அரச மன்னிப்பு மூலம் சரி செய்யப்பட்டிருக்கிறது. கணிணி யுகத்தின் முன்னோடியும் , இரண்டாம் உலகபோரில் ஆயிரக்கணக்கானோரின் உயிர்களை காக்க தனது கணிணி திறமை மூலம் உதவியவருமான ஆலன் டியிரிங் மீதான களங்கம் துடைக்கப்பட்டிருக்கிறது. ஓரினச்சேர்க்கையாளர் என் தண்டிக்கப்பட்ட டியூரிங்கிற்கு பிரிட்டன் மகாரணியின் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆலன் டியூரிங் கண்ணி யுகத்தின் முன்னோடி. கணிதப்புலி. அந்த காலத்து தாக்காளர். அப்போதே கம்ப்யூட்டர்களை சிந்திக்க வைப்பது பற்றி யோசித்தவர். ஆரம்ப கால கப்யூட்டர்களுக்கான நிரல்களை உருவாக்கியவர். இன்று கம்ப்யூட்டர் , சூப்பர் கம்ப்யூட்டர் என்று எல்லாம் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்களுக்காக அவருக்கு உலகம் நன்றி கடன் பட்டிருக்கிறது. அது மட்டும் அல்லாமல் ஹிட்லரின் கை ஓங்கியிருந்த இரண்டாம் உலகப்போரின் போது அவரது பங்களிப்பே நேச நாடுகளுக்கு வெற்றியை தேடித்தந்ததோடு ஆயிரக்கணக்கானோரின் உயிர்களையும் காப்பாற்றியது. எனியாக் கம்யூட்டர் மூலம் ஹிட்லர் அனுப்பிய ரகசிய செய்திகளை டியூரிங் இடைமறித்து அவற்றின் சங்கேத குறியீடுகளை உடைத்து புரிய வைத்தார். இதற்காக அவர் பாம்ப் ( Bombe) எனும் பெயரில் கம்ப்யூட்டர் குறியீடுகளை புரிந்து கொள்வதற்கான கம்ப்யூட்டரை உருவாக்கினார்.

டியூரிங் அந்த காலத்திலேயே கம்ப்யூட்டர்களை சிந்திக்க வைத்து செய்றகை மூளையை உருவாக்கும் ஆய்வில் ஈடுபட்டிருந்தார். இயந்திர அறிவிற்காக அவர் உருவாக்கிய பரிசோதனை  டியூரிங் சோதனை என்று பிரபலமாக குறிப்பிடப்படுகிறது. கம்ப்யூட்டர் துறையின் ஈடு இணையில்லாத மேதை என்று கொண்டாடப்படும் டியூரிங் மீது ஒரு களங்கமும் இருந்தது. டியூரிங் ஓரினச்சேர்க்கை பழக்கம் கொண்டிருந்தவர். அவரது காலத்தில் அது குற்றமாக கருதப்பட்டதால் அவர் தண்டிகப்பட்டார். ரசாயணம் மூலம் ஆண்மை நீக்கம் செய்யப்பட்டார். 1952 ல் இந்த அவமானம் அவருக்கு நேர்ந்தது. இதைவிட மோசமாக அவர் மேற்கொண்டிருந்த ஆய்வில் ஈடுபட அனுமதிக்கப்படவில்லை. இதனால் மனம் உடைந்து 1954 ல் அவர் தற்கொலை செய்து கொண்டார்.

டியூரிங் மறைவுக்கு பிறகு கம்ப்யூட்டர் துறை எங்கேயோ வளர்ந்து வந்துவிட்டது. ஆனால் இந்த வளர்ச்சியில் அவரது பங்களிப்பு மகத்தானது . அவரது மேதமையை கொண்டாடி வருபவர்கள் அவர் மீதான களங்கம் துடைக்கப்பட வேண்டும் என்றும் குரல் கொடுத்து வந்தனர். 2009 ஆம் ஆண்டு டியூரிங் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக அவருக்கு மன்னிப்பு வழஙக்ப்பட வேண்டும் எனும் கோரிக்கை இணைய விண்ணப்பமாக முன் வைக்கப்பட்டது. இதற்கு பல்லாயிரக்கனக்கானோர் ஆதரவு தெரிவித்தனர். அப்போது பிரிட்டன் பிரதமராக இருந்த காடன் பிரவுன் , அர்சு சார்பில் மன்னிப்பு கேட்டுக்கொண்டு டியூரிங் தண்டிக்கப்பட்டது தவறு என்று தெரிவித்தார். 2011 ம் ஆண்டு டியூடிங்கிறகு மன்னிப்பு வழங்க கோரி மீண்டும் இணையா கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கும் ஆயிரக்கணக்கில் ஆதரவு குவிந்தது.

இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது டியூரிங்கிற்கு அரச மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.அந்நாட்டு நீதித்துறை அமைச்சர் கிறிஸ் கிரேலிங் வேண்டுகோளை ஏற்று முறைப்படி இதற்கான உத்தரவு பிறப்பிக்ப்பட்டுள்ளது. ஒரு மேதை மீதான சரித்திர களங்கம் துடைக்கப்பட்டுள்ளது.
 
back to top