.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, December 29, 2013

மௌன நாயகனாக நடிக்கும் தனுஷ்




ராஞ்ச்னாவின் வெற்றியைத் தொடர்ந்து தனது அடுத்த இந்திப் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.பால்கி இயக்கும் இப்படத்தில் தனுஷின் ஜோடி கமலின் இளைய மகள் அக்‌ஷராஹாசன்.மேலும், இப்படத்தில் தனுஷுடன் இந்தி சூப்பர்ஸ்டார் அமிதாப்பும் நடிக்கிறார்.

           காதல் கதைகளை உணர்ச்சிப் பூர்வமாக தரும் பால்கியின் இப்படமும் காதலை அடிப்படையாகக் கொண்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். ஒளிப்பதிவு பி.சி.ஸ்ரீராம் .மேலும் இப்படத்தில் வாய் பேச முடியாத இளைஞராக தனுஷ் நடிப்பதாகவும், மிகச் சிறந்த நடிகனாக வேண்டும் என கனவு காணும் தனுஷிற்கு நடிகர் அமிதாப் உதவுவதாகவும் கதையோட்டம் செல்வதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீக்கிரம் தூங்கும் குழந்தை ஸ்லிம்மாக இருக்கும்




பொதுவாக குழந்தைகளை இரவில் தூங்க வைப்பதுதான் பெற்றோரின் மிகக் கடினமான பணியாக இருக்கும். இப்போது அதற்கு இன்னும் ஒரு முக்கியக் காரணம் வந்துவிட்டது. அதாவது, இரவில் சீக்கிரம் தூங்கச் செல்லும் குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்படுவதில்லை என்கிறது ஒரு ஆய்வு முடிவு.

இரவு 7 மணிக்குள் உணவை முடித்துவிட்டு, சீக்கிரம் தூங்கச் செல்லும் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், ஸ்லிம்மாகவும் இருப்பார்கள். அதே சமயம் இரவில் அதிக நேரம் கண்விழித்திருந்து, காலையில் தாமதமாக எழுந்திருக்கும் குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

இது எவ்வாறு ஏற்படுகிறது என்றால், இரவில் அதிக நேரம் கண்விழித்திருந்தாலும், குழந்தைகள் ஓடியாடி விளையாடுவதில்லை. அதே சமயம், இரவு உணவு முடிந்த பிறகு அதிக நேரம் கண்விழித்திருக்கும் குழந்தை உறங்கும் முன்பு ஏற்படும் பசி காரணமாக ஏதேனும் ஒரு நொறுக்குத் தீணியை சாப்பிட வேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும் காலையில் தாமதமாக எழுவதால், பகல் பொழுதில் இவர்கள் முழித்திருக்கும் நேரம் குறைவதால் விளையாடும் நேரமும் குறைகிறது. இதனால் உடல் பருமன் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

அதாவது, சீக்கிரம் தூங்கச் சென்று, சீக்கிரமாக எழுந்திருக்கும் குழந்தைகளுக்கும், தாமதமாக தூங்கச் சென்று காலையில் தாமதமாக எழுந்திருக்கும் குழந்தைகளும் ஒரே அளவில்தான் தூங்குகிறார்கள் என்றாலும், தாமதமாகத் தூங்கச் செல்லும் குழந்தைகளின் உணவு முறை மற்றும் பழக்க வழக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் உடல் பருமனுக்குக் காரணமாக அமைகிறது.

மேலும், மிகக் குறைவான உறக்கம் உள்ள குழந்தைகளுக்கு ஏராளமான உடல் பிரச்சினைகள் ஏற்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது.

வீட்டுச் சூழல் தான் குழந்தைகளின் உறக்கத்திற்கு பெரும் பங்கு வகிக்கிறது. பெற்றோர் சரியான நேரத்தில் தூங்கி, அதிகாலையில் எழும் பழக்கத்தைக் கடைபிடித்தால் குழந்தைகளும் சரியான நேரத்தில் தூங்குவார்கள். எனவே குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கு உறக்கமும் இன்றியமையாதது என்பதை பெற்றோர் உணர வேண்டும்.

சூரியின் பெயரால் சூப்பர் ஸ்டாருக்கு அவதூறு...




டுவிட்டர் கருத்தால் சர்ச்சையில் சிக்கியுள்ளார் கொமடி நடிகர் சூரி.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது விக்ரம்பிரபு நடித்த ‘இவன் வேற மாதிரி’.இந்தப்படத்தை பார்த்த சூப்பர்ஸ்டார் ரஜினி ‘நல்ல பொழுதுபோக்கு படம். இந்தப் பட வெற்றிக்கு என் வாழ்த்துகள்” என்று மனம் விட்டு பாராட்டி ஒரு வாழ்த்துக் கடிதத்தையும் வெளியிட்டார். இது செய்தியாக பத்திரிக்கைகளின் விளம்பரத்திலும் இடம் பெற்றது.இந்தக்கடிதம் நடிகர் சூரிக்கு தேவையில்லாத பிரச்சனையை கிளப்பிவிட்டுள்ளது. இந்தப்படம் பற்றி டுவிட்டரில், “ஒரு பிரபலம், ஒரு படம் ஆஹா ஓஹோன்னு இருக்குதுன்ன்னு சொன்னாரு அப்படிங்கிற்துக்காக அந்தப்படங்களை பார்க்காதீங்க, சில பேரு மொக்கைப்படங்களுக்கு கூட நல்ல விமர்சனம் கொடுப்பாங்க” என குறிப்பிட்டிருக்கிறாராம்.ரஜினி ‘இவன் வேற மாதிரி’ படத்திற்காக கொடுத்த பாராட்டுக் கடிதத்தைப் பற்றித்தான் சூரி இப்படி எழுதியிருக்கிறார் என சில பேர் அவர்மேல் அம்பு தொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.ஆனால் விசாரித்ததில் சூரிக்கு டுவிட்டர், பேஸ்புக்கில் கணக்கே கிடையாது என்பதுடன் அதை ஆபரேட் செய்யவும் அவருக்கு தெரியாதாம். சூரியின் மேல் வெறுப்பு கொண்ட சிலர் தான் இதனை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதப்படிங்க முதலில்.....!




பி.எஸ்சி. ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்டு கேட்டரிங் டெக்னாலஜி பட்டப் படிப்பு 100% வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கிறது. இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் சுற்றுலாத் துறை வளர்ச்சி அடைந்து வருகிறது. மேலும் இந்திய உணவு வகைகளுக்கு சர்வதேச அளவில் வரவேற்பு அதிகம் இருப்பதால் வெளி நாடுகளில் வேலைவாய்ப்பு நிறையவே உண்டு. இத்

துறைக்கு ஆங்கில மொழித்திறன் அவசியம். கேட்டரிங் படிக்க விரும்புபவர்கள் அவசரப்பட்டு, 10-ம் வகுப்பு முடித்ததும் ஹோட்டல் டிப்ளமோ படிப்பதைவிட பிளஸ் 2 முடித்து, பி.எஸ்சி. ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்டு கேட்டரிங் டெக்னாலஜி படிப்பது சிறந்தது.

தவிர, பி.எஸ்சி. ஆஸ்பிட்டாலிட்டி, ஹோட்டல் அட்மினிஸ்ட்ரேஷன் என பல்வேறு பிரிவுகளை கொண்டுள்ளது. இதில் ஜெனரல் ஆபரேஷன் படிப்பதன் மூலம் நட்சத்திர ஹோட்டலை நிர்வகிக்கலாம். ஃப்ரன்ட் ஆபீஸ் படித்தால் வாடிக்கையாளர் சேவை பிரிவில் பணியாற்றலாம்.

 ஃபுட் பேவரேஜ் படிப்பதன் மூலம் உணவுத் தயாரிப்பு, தரக்கட்டுப்பாடு தொடங்கி விநியோகம் வரை நிர்வகிக்கலாம். ஹவுஸ் கீப்பிங் படிப்பவர்கள், ஹோட்டல் பராமரிப்புப் பணிகளை நிர்வகிக்கலாம். சேல்ஸ் அண்டு மார்க்கெட்டிங் படிப்பவர்கள், ஹோட்டல் வளர்ச்சிப் பணிகளை நிர்வகிக்கலாம்.

மணிப்பாலில் வெல்கம் குரூப் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் இன்ஸ்டிடியூட்டில் 4 ஆண்டு பட்டப் படிப்பு உள்ளது. இதற்கு நுழைவுத் தேர்வு உண்டு. தவிர, மாநிலத்தின் ஒவ்வொரு தலைநகரத்திலும் நேஷனல் கவுன்சில் ஃபார் ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்டு கேட்டரிங் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. சென்னை தரமணியில் இந் நிறுவனம் இயங்குகிறது. இங்கு சேர அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு உண்டு.

என்.சி.ஹெச்.என்.சி.டி - (ஜே.இ.இ.) இணை நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 5-ம் தேதி முதல் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு 2014, ஏப்ரல் 7-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஏப்ரல் 26-ம் தேதி தேர்வு நடக்கிறது. www. nchnct.org என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இந்த தேர்வு கணிதம், ரீசனிங் அண்டு லாஜிக்கல், பொது அறிவு ஆகிய பாடங்களில் தலா 30 மதிப்பெண்; ஆங்கிலம் - 60 மதிப்பெண், ஆக்டிடியூட் ஃபார் சர்வீஸ் செக்டார் - 50 மதிப்பெண் என மொத்தம் 200 மதிப்பெண் கொண்டது. பொதுப் பிரிவினருக்கு விண்ணப்பம் ரூ. 800; எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு விண்ணப்பம் ரூ. 400. சென்னையில் இத்தேர்வு நடக்கும்.
 
back to top