.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, January 4, 2014

ATMகளில் பணம் எடுக்க கட்டணம்: ரிசர்வ் வங்கி அனுமதி..!




ATMகளில் பணம் எடுக்க கட்டணம்: ரிசர்வ் வங்கி அனுமதி..!

ஏடிஎம்களில் ஒவ்வொரு முறை பணம் எடுக்கவும், வாடிக்கையாளர்களிடம் கட்டணம் பிடித்தம் செய்யும் வங்கிகளின் பரிசீலனைக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.


வங்கிகள் வசூலிக்கும் கட்டணம் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் இருந்தால் வங்கிகளின் பொருளாதார நிலை கருதி ஏற்றுக் கொள்ளப்படும் எனவும், அத்தகைய கட்டண வசூல் குறித்து ரிசர்வ் வங்கிக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்றும் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் கே.சி. சக்ரபர்த்தி தெரிவித்துள்ளார்.


தற்போது , வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏ.டி.எம்.,ல் ஒரு மாதத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளலாம்.


அதே சமயம் மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.,ல் மாதத்திற்கு 5 முறை வரை இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளவும், அதற்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கும் முறை நடைமுறையில் இருந்து வருகிறது.

 
இனி வரும் காலங்களில் ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

முடி உதிர்வதற்கான காரணங்கள் என்ன..?



உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான், தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும். உடல் ஆரோக்கியமின்மைக்குக் காரணம் சத்துக்குறைவு தான். சுவையானது என்று நாம் தேர்ந்தெடுத்து உண்ணும் உணவுகளில் போதிய ஊட்டச்சத்துகள் இல்லாததால், ஆரோக்கியம் குறைவதோடு முடி தொடர்பான பிரச்சினைகளும் தலைதூக்குகின்றன.

சமச்சீரற்ற முறையில் ஹார்மோன் சுரத்தல், ஒழுங்கற்ற மாதவிலக்கு, வைட்டமின் பற்றாக்குறை, பொடுகு, டைபாய்டு, மலேரியா, தைராய்டு, நீரிழிவு, கூந்தலில் அதிகமான ஈரப்பதம் ஆகியவை முடி உதிர்வதற்கான முக்கிய காரணங்கள். குறிப்பிட்ட கால்சியம், வைட்டமின், தாது உப்புகள் போன்றவற்றை எடுத்துக் கொண்டாலும் முடியானது உலர்ந்த தன்மையை அடையலாம்.

பிற நோய்த்தொற்றுகள் ஏற்பட்டாலும் முடி உலர்ந்து, கொட்டிப்போகும். எனவே தலைமுடி கொட்டுவதற்கு அடிப்படை பிரச்சினை என்ன? என்பதைக் கண்டறிந்து, அதன்படி சிகிச்சை பெற்றால் பலன் கிடைக்கும். அதிகமாக முடி கொட்டுபவர்கள் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறுவது நல்லது. ஏனெனில் நமது உடலில் சுரந்து கொண்டிருக்கும் ஹார்மோன்கள் சில சமயங்களில் சுரக்காது நின்றுபோனாலும் முடி கொட்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

புரதம் நிறைந்த பருப்பு, கீரை வகைகள், கேரட், பீட்ரூட், கறிவேப்பிலை, இரும்புச்சத்து நிறைந்த பனைவெல்லம், கேழ்வரகு, பால், எலும்பு சூப் போன்ற சமச்சீரான உணவுகளை சாப்பிட்டு வந்தாலே ஹார்மோன் சுரப்பிகளை சரிசெய்ய முடியும் எனவும் அவர்கள் கூறுகிறார்கள். மேலும், அடிக்கடி சீயக்காய் போட்டு கூந்தலை கடினமாக தேய்க்கக்கூடாது. மென்மையாகவே கையாள வேண்டும்.

• முடிஉதிர்வதைத் தவிர்க்க அழகு நிலையங்களில் மூலிகைகளால் செய்த ஹெர்பல் ஹேர் பேக், ஸ்பெஷல் ஸ்பா ட்ரீட்மெண்ட், டீப் கன்டிஷனர், சீரம் ட்ரீட்மெண்ட், வாசலின் ட்ரீட்மெண்ட் ஆகிய முறைகள் கையாளப்படுகிறது.

• வாரம் ஒருமுறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாதகாலம் செய்து வந்தால், எந்த காரணத்தால் முடி கொட்டினாலும் நின்றுவிடும். அதோடு, இக்கீரை நரை விழுவதையும் தடுக்கும். முடியும் கருகருவென வளரும்.

* இரவில் நெல்லிக்காய்களை தண்ணீரில் ஊறப்போட்டு, காலையில் அந்நீரில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். செம்பட்டை முடியும் நிறம் மாறும்.

* தலைமுடி நன்றாக வளர கற்றாழைச் சாறில் எண்ணெய் கலந்து தலையில் தேய்க்கலாம். இப்படி செய்து வந்தால் முடி உதிராது, அடர்த்தியாகவும் வளரும். தலையும் குளிர்ச்சியாக இருக்கும்.

ஹாட்ரிக் அடிக்கும் நயன்தாரா..?



தெலுங்கில் மூன்றாவது முறையாக ஜோடி சேர்கிறது வெங்கடேஷ் நயன்தாரா ஜோடி.

2014ம் ஆண்டில் தமிழில் 5 படங்களும், தெலுங்கில் இரண்டு படங்களும் கைவசம் வைத்துள்ளார் நயன்தாரா.

இதில் தெலுங்கில் ‘ராதா’ என்ற படத்தில் வெங்கடேஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். முழுக்க முழுக்க அரசியல் பின்னணியில் உருவாகிறது இந்தப்படம்.

ஏற்கனவே இவர்கள் இரண்டுபேரும் ‘லட்சுமி’ ‘துளசி’ என இரண்டு படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

YouTube வழங்கவுள்ள புதிய வசதி..!




உலகின் முன்னணி வீடியோ பகிரும் தளமாக விளங்கும் YouTube ஆனது நாளுக்கு நாள் பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்திவருகின்றது.

இவற்றின் தொடர்ச்சியாக 2014ம் ஆண்டில் குறைந்த இணைய வேகத்திலும் வீடியோக்களை பார்த்து மகிழும் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளது.

4K Streaming எனும் இத்தொழில்நுட்பத்தினை இந்த வருடம் இடம்பெறும் சர்வதேச இலத்திரனியல் கண்காட்சியில் அறிமுகம் செய்து வைக்கவுள்ளது.

அதேவேளை தொலைக்காட்சிகளில் பயன்படுத்தக்கூடிய Ultra HD 4K எனும் தொழில்நுட்பத்தினையும் YouTube நிறுவனம் 2015ம் ஆண்டில் அறிமுகம் செய்து வைக்கலாம் என எதிர்பார்ப்புக்கள் வெளியாகியுள்ளன.

உலகின் முன்னணி வீடியோ பகிரும் தளமாக விளங்கும் YouTube ஆனது நாளுக்கு நாள் பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்திவருகின்றது. இவற்றின் தொடர்ச்சியாக 2014ம் ஆண்டில் குறைந்த இணைய வேகத்திலும் வீடியோக்களை பார்த்து மகிழும் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளது.
4K Streaming எனும் இத்தொழில்நுட்பத்தினை இந்த வருடம் இடம்பெறும் சர்வதேச இலத்திரனியல் கண்காட்சியில் அறிமுகம் செய்து வைக்கவுள்ளது.
அதேவேளை தொலைக்காட்சிகளில் பயன்படுத்தக்கூடிய Ultra HD 4K எனும் தொழில்நுட்பத்தினையும் YouTube நிறுவனம் 2015ம் ஆண்டில் அறிமுகம் செய்து வைக்கலாம் என எதிர்பார்ப்புக்கள் வெளியாகியுள்ளன.
- See more at: http://viyapu.com/news_detail.php?cid=14717#sthash.1o9nGmuB.dpuf

 
back to top