.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, January 9, 2014

பெண்களே..! எச்சரிக்கை..!

பெண்களுக்கு சின்ன, சின்ன டிப்ஸ்…


தற்போதுள்ள காலகட்டத்தில் பெண்கள் எப்பொழுதும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அப்போது தான் எதிர்பாராமல் ஏற்படும் நிலைமையை சமாளிக்க முடியும்.

அதுமட்டுமில்லாமல் சின்ன சின்ன விசயங்களை பற்றியும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் யாருடைய உதவியும் இல்லாமல் தானே நிலைமையை சமாளிக்க முடியும்.

* அவசரத் தேவைக்கு போலீஸ், தீயணைப்பு மற்றும் அருகில் உள்ள போலீஸ் நிலைய தொலைபேசி எண்களைத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

* செல்போனில்தான் எல்லாருடைய எண்ணும் உள்ளதே என்று எண்ணாமல், உங்கள் கணவர், நெருங்கிய உறவினர் அல்லது நண்பர், அண்டை வீட்டுக்காரரின்தொலைபேசி எண்களை மனப்பாடம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

* எதேனும் பொருள் விற்க என்றோ அல்லது நன்கொடை வசூலிக்க என்றோ வீட்டுக்கு வரும் முன், பின் அறிமுகம் இல்லாத நபர்களை உடனடியாக வீட்டுக்குள் அனுமதிக்காதீர்கள்.

* வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில், அதிக உயரத்தில் இருந்து பொருள்களை எடுப்பது போன்ற ஆபத்து நிறைந்த வேலைகளைத் தவிர்த்துவிடுங்கள்.

* கேஸ் சிலிண்டர் தீர்ந்து போனால் புதிய சிலிண்டர் மாற்றுவது,கேன் தண்ணீர் தீர்ந்து போனால் மாற்றுவது, “பல்ப்’ மாட்டுவது போன்ற சிறிய வேலைகளை நீங்களாகவே செய்யக் கற்றுக் கொள்ளுங்கள்.

* கேஸ் சிலிண்டர் கொண்டு வரும் நபர், மின்சாரம் மற்றும் தொலைபேசி பணியாளர்கள் வீட்டுக்கு வந்தால், அவர்களின் பணி குறித்த அடையாளங்களை உறுதிப்படுத்தியபின் வீட்டுக்குள் அனுமதியுங்கள்.

* யாரும் வந்திருப்பதாக தெரிந்தால் உடனே கதவை திறக்காமல் சன்னல் வழியாக யார் என்று பார்த்த பின்னரே கதவை திறக்க வேண்டும். தெரியாத நபராக இருந்தால் அப்படியே பேசி அனுப்பி விடுங்கள்.

0 comments:

 
back to top