உலகில் அதிகஅளவு சிகரெட் குடிக்கும் பெண்கள் உள்ள நாடுகள் பட்டியிலில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளதாக அமெரிக்கா மெடிக்கல் அசோசியேன் சிகரெட் புகைப்பவர்கள் குறித்து (1980-2012) வெளியிட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது
இந்தியாவில் 12.1 மில்லியன் பெண்கள் தற்போது சிகரெட் புகைப்பதாக கூறப்பட்டுள்ளது. இது அமெரிக்காவை விட அதிகமாகும். இந்தியாவில ஒரு நாளைக்கு ஒருவர் புகைக்கும் சிகரெட்டுகளின் சராசரி எண்ணிக்கை 8.2 ஆகும்.
கடந்த 1980 இல் இந்தியாவில் புகை பிடித்த ஆண்களின் எண்ணிக்கை 33.8 சதவீதமாக இருந்தது தற்போது 2012 ன்படி 23 சதவீதமாக குறைந்துள்ளது என்று ஆய்வில் கூறப்படுகிறது. உலகம் முழுவதும் ஒரு நாளைக்கு 1980 இல் 721 மில்லியனாக இருந்த சிகரெட் புகைப்பவர்களின் எண்ணிக்கை 2012 ஆம் ஆண்டு கணக்குப்படி 967மில்லியனாக அதிகரித்துள்ளது.
10 ஆண்களில் 3 பேர் சிகரெட் புகைப்பதாகவும்,20 பெண்களில் ஒருவர் சிகரெட் புகைப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவில் புகை பிடிப்பவர்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6.1 சதவீதமாகவும், உடல் நலம் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 5.1 சதவீதமாகவும் உள்ளது.
புகைபிடிப்பது உடல் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும் என்று மருததுவர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். இருந்தபோதிலும் அதையும் மீறி தொடர்ந்து புகை பிடிப்பவர்கள், மரணத்தை விலைக்கு வாங்குவதை உணரவில்லை என்பது வேதனைக்குரிய விஷயமாகும்.
0 comments:
Post a Comment