.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label பயனுள்ள தகவல்!. Show all posts
Showing posts with label பயனுள்ள தகவல்!. Show all posts

Tuesday, January 21, 2014

வயது அதிகமான ஆண்களை திருமணம் செய்து கொண்டால்....

பெரும்பாலான திருமணம் ஒரே வயதுள்ளவருடன் நடப்பதை விட, தன்னை விட சற்று வயது பெரியவர்களை செய்வது தான் அதிகம். திருமணம் செய்யும் போது, பெண்ணை விட ஆணின் வயது சற்று அதிகமாக இருந்தால், நிறைய நன்மைகள் உள்ளன.அதே சமயம் தீமைகளும் உள்ளன. இது பெரும்பாலும் பெண்களுக்கு தான் பொருந்தும். தன்னை விட பெரிய ஆண்களை திருமணம் செய்து கொண்டால், ஏதேனும் கஷ்டமான பிரச்சனையின் போது சரியாக முடிவெடுக்கத் தெரியவில்லையென்றால், அத்தகையவரை திருமணம் செய்து கொள்ளும் போது, ஈஸியாக சரிசெய்து விடலாம்.எத்தகைய பிரச்சனைக்கு எப்படி நடக்க வேண்டும் என்று நன்கு தெரியும். ஆகவே இந்த வாழ்க்கைப் பாடத்தை அவரிடமிருந்து கற்றுக் கொள்ளலாம். வயது அதிகம் உள்ளவரை திருமணம் செய்யும் போது, அவர்கள் வாழ்க்கையில்...

Thursday, January 16, 2014

குளிரிலும் மிளிர வேண்டுமா..?

இந்த ஆண்டு, குளிர் கொஞ்சம் அதிகம் தான். வீடு, அலுவலகம் என்று காலில் சக்கரம் கட்டி, சுற்றிக் கொண் டிருக்கும் பெண்களால், தங்களின் உடல் அழகைப் பராமரிக்க, நேரம் கிடைப்ப தில்லை. கிடைக்கும் நேரத்தில், வீட்டிலேயே அழகைப் பராமரித்து, பொலிவுடன் ஜொலிக்க... இதோ சில டிப்ஸ்!பனிக் காற்று, சருமத்தில் சுருக்கங்களை உருவாக்கும். குறிப்பாக, கண்கள் மற்றும் உதடுகளை சுற்றி சுருக்கம் ஏற்படும். வறண்ட சருமமாக இருந்தால், அதிக திறனுள்ள மாய்சரைசரைப் பயன்படுத்துவது அவசியம். இத சருமத்தில் உள்ள சிறு சிறு ஓட்டைகளை அடைத்து விடாமல் பார்த்துக் கொள்ளுங் கள். மேக்கப் செய்யும் முன், இதனை, கண் மற்றும் உதடுகளை சுற்றி போடவும். இதனால், நாள் முழுவதும் மேக்கப் கலையாமல் இருக்கும்.கண்களைச்...

ஐ லவ் யு...அப்பா...உங்கள் மகன் சொல்ல வேண்டுமா...?

நீங்கள் மாற்றுத் தந்தையாக இருக்கும் நிலை ஏற்படுவது ஒரு மிகப்பெரிய முன்னேற்றம் தான். மாற்றுத் தந்தையாக இருப்பதென்பது ஒரு புதிய குழந்தையை பெற்றெடுத்து தந்தையாக மாறுவதில் இருந்து முழுவதும் மாறுபட்டதாகும். நீங்கள் தந்தையாக இருப்பதை விட இதில் சந்திக்கும் சவால்கள் அதிகம். புதிதாக பிறந்த குழந்தையை ஒரு தந்தையாக வளர்க்கும் போது, அந்த உறவு இயல்பாகவும், சுமூகமாகவும் இருக்கும். ஆனால், நீங்கள் ஒரு மாற்றுத் தந்தையாக வேறு ஒருவரின் இடத்தை பூர்த்தி செய்ய முயலும் போது, இதுவரையிலும் தங்கள் தந்தையுடன் இருந்து வந்த, குழந்தைகளை கணிப்பது மிகவும் கடினமாக இருக்கும்.நீங்கள் குழந்தைகளை மிகவும் கவனத்துடன் அணுக வேண்டும் மற்றும் அவர்களுடைய உண்மையான தந்தையுடனான...

2 - ன் 1 முருங்கை சாம்பார் -- சீக்ரெட் ரெசிபி .....!

சீக்ரெட் ரெசிபிசாம்பார் பொடிஎன்னென்ன தேவை?துவரம்பருப்பு - அரை கப்கடலைப்பருப்பு - அரை கப்கொத்தமல்லி (தனியா) - ஒரு கப்மிளகாய் வற்றல் - 1 கப்மிளகு - 1 டேபிள்ஸ்பூன்சீரகம் - 1 டேபிள்ஸ்பூன்கடுகு - 1 டீஸ்பூன்வெந்தயம் - 1 டேபிள்ஸ்பூன்பெருங்காயம் - 1 சிறிய கட்டிகறிவேப்பிலை - 2 ஈர்க்கு உலர்ந்தது.எப்படிச் செய்வது?வெறும் கடாயில் பெருங்காயத்தை பொரித்து பருப்பு வகைகளை வாசம் வரும் வரை வறுத்து வைக்கவும். மற்ற பொருள்களையும் வாசம் வரும்வரை  வறுத்து பொடிக்கவும். இன்னொரு முறை: பெருங்காயத்தைதவிர அனைத்தும் வெயிலில் உலர வைத்தும், பெருங்காயத்தை கடாயில் பொரித்தும்பொடிக்கலாம்.என்னென்ன தேவை?கால் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வேக வைத்த துவரம்பருப்பு - இரண்டு கப்முருங்கைக்காய்...

கம்பியில்லாமல் மின் இணைப்பு - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு...!

கம்பியில்லா முறையில் மின் சாதனங்களுக்கு மின் இணைப்பைப் பெறும் முறையை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.செல்போன் உள்ளிட்ட மின் சாதனப் பொருள்களை ஒயர் இணைப்பு இல்லாமல் சார்ஜ் செய்து கொள்ளக்கூடிய முறையை அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக அந்த பல்கலைக்கழகத்தின் மின் னணு மற்றும் கணினி பொறியியல் துறை உதவி பேராசிரியர் யாரோஸ்லாவ் உர்ஸுமோவ் கூறுகையில், “மிகவும் நுண்ணிய மின் காந்த அலைகள் மூலம் மின்சாரத்தை கொண்டு செல்ல முடியும். இதன் மூலம் ஒயர் (கம்பி) இணைப்பு இல்லாமலேயே மின் சாதனப் பொருள்களுக்கு தேவையான மின்சாரத்தைப் பெற்று இயக்க முடியும்.மின்காந்த அலைகளை பெற்று மின்சாரமாக மாற்றும் கருவியில் உள்ள...

Wednesday, January 15, 2014

30 நொடிகளுக்கு மேல் ஈடுபாடில்லை...!

30 நொடிகளுக்கு மேல் ஈடுபாடில்லை - படிப்பதில் மாணவர்களுக்கு...!  இக்கட்டுரையை நீங்கள் அச்சில் படித்தால் நான் எழுதியதில் பாதியைத்தான் நீங்கள் படிப்பீர்கள். இணையத்தில் படிக்கும் வாய்ப்பு இருந்தால் ஐந்தில் ஒரு பகுதியைக்கூட முடித்திருக்க மாட்டீர்கள். அண்மையில் நடத்தப்பட்ட இரண்டு ஆய்வுகளில் கட்டுரை களை முழுவதுமாகப் படிப்பதற்கான பொறுமை பெரும்பாலானோருக்கு இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.  கல்வியாளர்களே ஈடுபாட்டோடு நூல்களைப் படிப்பதில்லை. மாணவர்கள் படிக்க வேண்டிய நூல்களின் பட்டியலைத் தான் சுருக்க வேண்டியிருந்ததாக விரிவுரையாளர் ஒருவர் கூறினார். இளைய ஆசிரியர்கள் முழுமையாகப் படிப்பதற்குப் பதிலாக தேடுபொறியை மட்டுமே வைத்து எளிதாக வேலையை...

செபி தீவிர நடவடிக்கை -முதலீட்டாளர்களின் குறைகளைக் கேட்டறிய....

 பிபிஓ எனப்படும் வெளிப்பணி ஒப்படைப்பு மையங்கள் மூலம் பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் குறைகளைக் கேட்டறிய பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) திட்டமிட்டுள்ளது. இதற்காக பிபிஓ-க்களிடம் இதற்கு ஆகும் செலவு குறித்து அழைப்பு டெண்டரை கோரியுள்ளது.200 ஏஜென்டுகளையும் ஒருங்கிணைத்து உதவி மையத்தை இத்தகைய பிபிஓ-க்கள் செயல்படுத்த வேண்டும். இதற்கான அழைப்பு டெண்டர் கோரப்பட்டுள்ளது. ஹெல்ப்லைன் எனப்படும் தொலைபேசி வழி குறைகேட்பு மையத்தை குறைவான பணியாளர்களின் உதவியோடு அதாவது 50 பணியாளர்களுடன் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்குரிய அடிப்படை கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட நிறுவனங்களுக்கு மட்டுமே இதற்கான அனுமதி அளிக்கப்படும். இப்போது 50 ஏஜென்டுகளை ஒருங்கிணைக்கும்...

Tuesday, January 14, 2014

என்றும் பாகற்காய்! எதிலும் பாகற்காய்!...

நம் உடலில் உள்ள பல புழுக்களினால் தான் நமக்கு நோய் ஏற்படுகிறது. சரியான உணவு உண்ணும் பட்சத்தில் புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும். உடலில் உள்ள புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு அதிகரிக்க இயற்கை அளித்த அருமையான காய் தான் பாகற்காய். பாகல் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை,மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும். பாகல் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது. பாகல் இலைச் சாற்றில் காசிக் கட்டியை உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத்...

இடதுகைப் பழக்கம் உள்ளவர்களாக..? எச்சரிக்கை..!

நம்மில் சிலபேர் இடதுகைப் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறோம். இது ஏன் என்று தெரியுமா? நமது மூளையின் வலப்பாகம் உடம்பின் இடதுபாக உறுப்புகளையும், இடப்பாகம் உடம்பின் வலதுபக்க உறுப்புகளையும் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கட்டளை பிறப்பித்து வருகிறது. பொதுவாக மனிதர்களில் 90 சதவீதம் பேருக்கு இடப்பக்கம் அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. எனவே அவர்கள் வலதுகை பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள். மீதமுள்ள 10 சதவீதம் பேருக்கு மூளையின் வலப்பாகம் சக்தி வாய்ந்ததாக இருப்பதால் அவர்கள் இடதுகைப் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். இந்தப் பழக்கத்தை இவர்கள் மாற்ற முயற்சி செய்தால் பேச்சிலும், பார்வையிலும் குறைபாடுகள் ஏற்படலாம் என்கிறது அறிவியல...

Monday, January 13, 2014

உங்கள் புகைப்படங்கள் இணையத்தில் எங்கெங்கு உள்ளன என்று கண்டறிய...?

உங்கள் புகைப்படங்கள் இணையத்தில் எங்கெங்கு உள்ளன என்று கண்டறிய..? இணைய உலகில் புகைப்படங்கள் பலவகையில் பரவிக்கிடக்கின்றன. பொதுவான படம் என்று இருந்துவிட்டால் பரவயில்லை. ஆனால் ஒருவரின் அந்தரங்கப்படங்கள் (Personal photos) வெளியானால் என்னாவது? சில நேரம் குடும்பப் புகைப்படங்கள் கூட மோசமாக சித்தரிக்கப்படுகிறது. மேலும் நீங்கள் புகைப்படத்துறையில் இருப்பவரெனின் எடுக்கும் புகைப்படங்களுக்கு நீங்கள் மட்டுமே அதன் சொந்தக்காரராக இருப்பீர்கள்.  உங்கள் புகைப்படத்தில் காப்பிரைட் (copyright and watermark ) போன்று எதாவது வாசகத்துடன் அதை இணையத்தில் வெளியிட்டு இருப்பீர்கள்.ஆனால் அது இணையத்திலேயே பல இடங்களில் பல பேரால் நகல் எடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு...

மொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்ப பெற புது வசதி..!!

இந்தியாவில் மொபைல் போன் வைத்திருக்கும் அனைவருக்கும் இருக்கும் ஒரு பிரச்சினை தேவை இல்லாத Service – களை மொபைல் நிறுவனங்கள் Activate செய்து பணம் பறிப்பது. பேங்க் கொள்ளைகளை விட, இதில் தான் நிறைய பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கும். இந்த பிரச்சினையில் இருந்து எளிதாக தப்பிக்கும் வழியை பார்ப்போம். இப்படி நமக்கு Activate செய்யப்படும் சர்வீஸ்களுக்கு VAS (Value Added Services) என்று பெயர். Dialer Tune/Caller Tune, Wallpaper, SMS(Joke, Devotional மற்றும் பல) மற்றும் பல இதில் வரும். இம்மாதிரி பிரச்சினை எந்த நெட்வொர்க்கில் வந்தாலும் நீங்கள் 155223 என்ற அலைபேசி எண்ணுக்கு அழைத்தால் நீங்கள் எந்த Service Activate செய்து உள்ளீர்களோ அதை Cancel செய்து விடலாம்....

உஷாரய்யா உஷாரு..! ஆன்லைன் ஷாப்பிங் டிப்ஸ்..!

ஆன்லைன் ஷாப்பிங்… ஏமாற்றம் தவிர்க்க உஷார் டிப்ஸ்..! எந்தத் துறை நன்கு வளர்கிறதோ, அந்தத் துறையில் மோசடி பேர்வழிகளின் நடமாட்டமும் அதிகமாகவே இருக்கும். இதற்கு இணையமும் விதிவிலக்கல்ல. முக்கியமாக, ஆன்லைன் ஷாப்பிங்கில் இன்று நடக்கும் ஏமாற்றுவேலைகள் கொஞ்சநஞ்சமல்ல. எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள், இதிலெல்லாம் சிக்காமல் இருக்க எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்கவேண்டும் என்று சொல்கிறார் பி.கே. ஆன்லைன் தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனத்தின் சீனியர் எக்ஸிக்யூட்டிவ் பிரபு கிருஷ்ணனா ”ஆன்லைன் ஷாப்பிங்கில் பல நல்ல விஷயங்கள் இருப்பது போல ஏமாற்று விஷயங்களும் இருக்கவே  செய்கின்றன. போலி பொருட்களை விற்பது, குறிப்பிட்ட காலத்துக்குள் பொருளை டெலிவரி செய்யாமல் இழுத்தடிப்பது,...

இந்த பொங்களுக்கு - சாம்பல் பூசணிக்காய், உளுத்தம்பருப்பு வடை...

தேவையான பொருட்கள்: தோல் நீக்கிய முழு உளுந்து – ஒரு ஆழாக்கு, சாம்பல் பூசணிக்காய் – ஒரு துண்டு, கொத்துமல்லி, கறிவேப்பிலை – சிறிது, பெரிய வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – ஐந்து, உப்பு – சுவைக்கு, பொரிப்பதற்கு தேவையான எண்ணெய். செய்முறை: வெள்ளை உளுந்தை அரை மணிநேரத்திற்கு முன் கழுவி தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும். வடை பக்குவத்தில் கல்லுரலில் நுரைக்க அரைத்துக் கொண்டு துருவிய வெள்ளை பூசணிக்காய், பொடியாக நறுக்கிய வெங்காயத்துண்டுகள், பச்சை மிளகாய்த் துண்டுகள், கொத்துமல்லி, கறிவேப்பிலை சேர்த்து, உப்பு சேர்த்து நன்றாகக் கலந்துக் கொண்டு காய்ந்த எண்ணெயில் சூடாகப் பொரித்து தேங்காய் சட்னியுடன் பறிமாறவும...

15 -ல் தொப்பையை குறைக்கலாம்.!!!!!!

1.நன்கு தூங்கவும் நல்ல தூக்கத்துடன், தூங்கும் போது குப்புறப்படுத்து தூங்குங்கள். இதனாலும் தொப்பை குறையும். அதிலும் இரண்டே வாரங்களில் தொப்பை குறைய வேண்டுமானால், குப்புறப்படுங்கள். 2.உப்பை தவிர்க்கவும் தொப்பை குறைய வேண்டுமானால், உணவில் சேர்க்கும் உப்பின் அளவைக் குறைக்க வேண்டும். ஏனெனில் அதிகப்படியான உப்பு உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதலை விளைவிப்பதோடு, தொப்பையை குறைக்க தடையாக இருக்கும். எனவே உணவில் உப்பை அளவை குறைக்கவும். 3.காய்கறிகளை அதிகம் சாப்பிடவும் இது பச்சை காய்கறிகளின் சீசன் என்பதால், உணவில் பச்சை காய்கறிகளை அதிகம் உட்கொள்ளுங்கள். அதிலும் ப்ராக்கோலி, பாகற்காய் மற்றும் முட்டைக்கோஸ் ஆகியவற்றை ஜூஸ் போட்டு குடித்து வந்தால், உடல் எடை...

கச்சிதமாக இருப்பதே அழகு!

நல்ல உணவு, அமைதியான மனம், மலர்ந்த முகம் இந்த மூன்றுமே உலகின் தலைசிறந்த டாக்டர்கள். மூன்றும் நன்றாக இருந்தால் தோற்றத்தில் அழகு துள்ளும். இயற்கையாகவே பெண்கள் அழகுதான். அழகுக்கு மேலும் அழகு சேர்க்க சில டிப்ஸ்: * பசுமையான மரம் செடி கொடிகளை அடிக்கடி பார்ப்பது, கண்ணுக்கு குளிர்ச்சி. மனதுக்கும் மகிழ்ச்சி. * கன்னம் ஒட்டிப் போய் இருக்கிறதா? தினமும் வாயில் தண்­ணீர் ஊற்றி கன்னத்தின் உட்பகுதி விரியுமளவுக்கு நன்றாக கொப்பளியுங்கள். * ஆடை அணிவது முதலில் வசதிக்காக என்பது நினைவிருக்கட்டும். உடை உடலை கவ்விப் பிடிக்கும் அளவுக்கு இறுக்கமாக இருக்கவேண்டாம். ரிலாக்ஸ்டாக இருக்கிறது என்று ஓவராக தொளதொளவும் வேண்டாம். கச்சிதமாக இருப்பதே அழகு. * வேலைக்கு போகும்...

கீ போர்ட் - ஷார்ட் கோட்களின் தொகுப்பு.....

Alt + 0153….. ™… trademark symbol Alt + 0169…. ©…. copyright symbol Alt + 0174….. ®….registered trademark symbol Alt + 0176 …°……degree symbol Alt + 0177 …±….plus-or -minus sign Alt + 0182 …¶…..paragraph mark Alt + 0190 …¾….fraction, three-fourths Alt + 0215 ….×…..multiplication sign Alt + 0162…¢….the cent sign Alt + 0161…..¡….. .upside down exclamation point Alt + 0191…..¿….. upside down question mark Alt + 1………..smiley face Alt + 2 ……☻…..bla ck smiley face Alt + 15…..☼…..sun Alt + 12……♀…..female sign Alt + 11…..♂……m ale sign Alt + 6…….♠…..spade Alt + 5…….♣…… Club Alt + 3…………. Heart Alt + 4…….♦…… Diamond Alt + 13……♪…..eighth note Alt...

Saturday, January 11, 2014

வைகுண்ட ஏகாதசி அன்று செய்யக்கூடாதது

ஏகாதசி திதி (முக்கியமாக வைகுண்ட ஏகாதசி) நாட்களில் தாய், தந்தைக்கு சிரார்த்தம் (நினைவுநாள்) வந்தால் அன்று நடத்தாமல் மறுநாள் துவாதசியன்று நடத்த வேண்டும். அன்று கோயில்களில் தரப்படும் பிரசாதத்தைக் கூட சாப்பிடக்கூடாது.  (கூடுமானவரை கோயில்களில் பிரசாதம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகள், நோயாளிகள், முதியவர்களுக்கு கொடுக்கலாம்) ஏகாதசியன்று உண்ணாமல் இருப்பவர்களை கேலி செய்து அவர்களை உண்ண வைப்பவன் நரகத்திலும் மிகக்கீழான நரகத்திற்கு செல்வான்.  இந்நாளில் துளசி இலை பறிக்கக்கூடாது. தேவையானதை முதல்நாளே பறித்து வைத்து விட வேண்டும். வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் துவாதசியன்று அதிகாலையில் நீராடி நெற்றியில் நாமம் அல்லது திருநீறு பூசி,...

Friday, January 10, 2014

எச்சரிக்கை.!!!! நான்ஸ்டிக் குக்வேர் பயன்படுத்துபவர்களே..!

இயற்கையான உணவை அதிகம் எடுத்து கொள்ளும் போது அது உடலின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. உணவில் இயற்கைக்கு மாறாக வேதி பொருள்கள் கலப்பு அதிகரிப்பால் அவை பல்வேறு வியாதிகளை உடலில் ஏற்படுத்தி விடுகிறது. இது பற்றி வெஸ்ட் விர்ஃதுஜினியா பல்கலை கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஓர் ஆய்வு மேற்கொண்டனர். அதில், நம்மை சுற்றி பி.எப்.சி. (பெர்புளுரோகார்பன்) என்ற வேதி பொருள் அதிகம் காணப்படுகிறது. இது தண்ணீர் மற்றும் கொழுப்பு போன்ற பொருள்களுடன் ஒட்டுவதில்லை. இந்த தன்மையினால் இவ்வேதிபொருள், நான்ஸ்டிக் குக்வேர் போன்ற தயாரிப்புகளில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகை தயாரிப்புகள் அதிகமாக உபயோகிக்கப்படும் பொழுது தைராய்டு புற்றுநோய், நோய் எதிர்ப்பு சக்தியில் பாதிப்பு...

டைனோசருக்கு பலம் அதிகமா அல்லது ஆப்பிளுக்கு பலம் அதிகமா..?

டைனோசருக்கு பலம் அதிகமா அல்லது ஆப்பிளுக்கு பலம் அதிகமா என்று யாராவது கேட்டால், நாம் நிச்சயம் அவரைப் பார்த்து சிரித்திருப்போம். என்ன, சின்னப்புள்ளத்தனமா இருக்கு என்றிருப்பார் நம் வடிவேலு. ஆனால், 60 மி்ல்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமியை தாக்கிய மாபெரும் எரிகல்லால் ஏற்பட்ட பயங்கரமான சுற்றுச்சூழல் மாற்றங்கள் தான் (பல லட்சம் அணு குண்டுகள் வெடித்தால் ஏற்படும் அளவுக்கு சேதம் பூமியில் உண்டானது. அப்போது எழும்பிய தூசு மண்டலம், சூரிய ஒளியை பல்லாண்டுகள் மறைத்ததால் உலகின் பெரும்பாலான தாவரங்கள் அழிந்து, அதை நம்பி வாழ்ந்த மிருகங்களையும் அழித்தது, குறிப்பாக டைனோசர்களை கூண்டோடு ஒழித்துக் கட்டியது என்பது தியரி) டைனோசர்களை அழிந்தன. ஆனால், அதில் தப்பிப்...

மிஸ்டுகால்- தவறிய அழைப்புகளில் தடம் புரளும் வாழ்க்கை..!

மிஸ்டுகால்- தவறிய அழைப்புகளில் தடம் புரளும் வாழ்க்கை!!! எச்சரிக்கை ரிப்போர்ட் :- மிஸ்டு கால்(Missed Call) – இது ஒரு அழையா விருந்தாளி. மீனைப் பிடிக்க தூண்டில் போட்டு காத்திருப்பவர் போலவே சிலர் மிஸ்டு கால்கள் மூலம் வலை வீசுகின்றனர். உலகமெங்கும் விரிக்கப்பட்டுள்ள மிஸ்டு கால் என்ற வலையில் சிக்குபவர்கள் இளம் பெண்களும், திருமணமான பெண்களுமாவர். மிஸ்டுகால்களை தொடுக்கும் பாலியல் வக்கிரப் புத்திக் கொண்டோரின் அம்புகளால் தாக்கப்படுபவர்களில் வளைகுடாவாசிகளின் மனைவிகளும் அடங்குவர் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன. மிஸ்டுகால் மூலம் போடப்படும் தூண்டில் ஆர்குட், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் புகைப்படங்களை போஸ்ட் பதிவது, தகவல்கள்,...
 
back to top