.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, January 16, 2014

குளிரிலும் மிளிர வேண்டுமா..?



இந்த ஆண்டு, குளிர் கொஞ்சம் அதிகம் தான். வீடு, அலுவலகம் என்று காலில் சக்கரம் கட்டி, சுற்றிக் கொண் டிருக்கும் பெண்களால், தங்களின் உடல் அழகைப் பராமரிக்க, நேரம் கிடைப்ப தில்லை. கிடைக்கும் நேரத்தில், வீட்டிலேயே அழகைப் பராமரித்து, பொலிவுடன் ஜொலிக்க...

 இதோ சில டிப்ஸ்!

பனிக் காற்று, சருமத்தில் சுருக்கங்களை உருவாக்கும். குறிப்பாக, கண்கள் மற்றும் உதடுகளை சுற்றி சுருக்கம் ஏற்படும். வறண்ட சருமமாக இருந்தால், அதிக திறனுள்ள மாய்சரைசரைப் பயன்படுத்துவது அவசியம். இத சருமத்தில் உள்ள சிறு சிறு ஓட்டைகளை அடைத்து விடாமல் பார்த்துக் கொள்ளுங் கள்.

மேக்கப் செய்யும் முன், இதனை, கண் மற்றும் உதடுகளை சுற்றி போடவும். இதனால், நாள் முழுவதும் மேக்கப் கலையாமல் இருக்கும்.

கண்களைச் சுற்றி சுருக்கம் ஏற்படாமல் இருக்க, சாதாரண பாதாம் எண்ணெயை கண்களைச் சுற்றி தேய்த்து, மோதிர விரலால், ஒரு நிமிடம் மசாஜ் செய்யுங்கள். பின், 15 நிமிடம் கழித்து, மென்மையான பஞ்சுத் துணியால் துடைத்து விடுங்கள்.

 இது, கரு வளையத்தை போக்க உதவும். வெள்ளரி ஜூஸ் மற்றும் தக்காளி ஜூஸ் இரண்டையும் சமமான அளவு கலந்து கண்களுக்குக் கீழே தேய்த்து, 15 நிமிடம் வைத்திருந்தால் போதும், கண்கள் கவிபாடும்.

பனி நிறைந்த காலைப் பொழுதும், குளிர்ந்த காற்றும் சருமத்தை சொரசொரப்பாக்கி விடும். இதிலிருந்து விடுபட, சருமத்திற்கு நீர்ச் சத்து அவசியம். ஆலிவ் ஆயில் அல்லது உங்கள் சருமத்திற்கு ஒத்துப் போகும் ஏதேனும் ஒரு எண்ணெயை, ஒரு கப் எடுத்துக் கொள்ளுங்கள்.

அதில், கல் உப்பை எண்ணெயில் முழுமையாக நிரம்பும் அளவிற்கு சேர்க்கவும். இந்த கலவையை கழுத்தில் இருந்து உடல் முழுவதும் பொலிவு இழந்த சருமத்தின் மீது, வட்ட வடிவமான அசைவில் தேய்க்கவும்.

இதனால், சருமத்தின் சொரசொரப்பு குறைவதோடு, நீர்ச் சத்தும் கிடைக்கும். வறண்ட சருமத்திற்கு கிரீம் கலந்த சோப் வகைகளே சிறந்தது. குளித்த பின், பாடி லோஷன் தேய்த்து, பின், பவுடர் உபயோகித்தால், சருமம் மிருதுவாக இருக்கும்.

உடலின் மொத்த பாரத்தையும் பாதங்கள் தாங்குவதால், அதிக அழுத்தங்களைச் சந்திக்கிறது. உடலின் முக்கிய நரம்பு மண்டலங்களுடன் இணையும் பிரஷர் பாயின்டுகளும் பாதங்களில் தான் இருக்கின்றன. இதனால், வாரம் ஒரு முறை, மசாஜ் செய்தால், இந்த அழுத்தத்திலிருந்து பாதங்கள் விடுபடும். ஒரு அகன்ற பாத்திரத்தில், வெது வெதுப்பான தண்ணீரில், "எக்சோட்டிக் பாத் கிரிஸ் டல்சை' கரைக்கவும்.

 இதில், 10 முதல் 15 மார்பிள் கல் துண்டுகளைப் போடவும். பாதங்களை இந்த தண்ணீரினுள் வைத்து, மார்பிள் கல்லில் குதிகால்களைத் மெதுவாகத் தேய்க்கவும். இது உங்கள் பாதங்களை மிருதுவாக வைப்பதோடு, பித்த வெடிப்புகளும் வராது. தினமும் பாடிலோஷன் பயன்படுத்துவது, அதிக பலனை தரும்.

வாரம் ஒரு முறை ஆயில் மசாஜ் செய்வதை விட, வேறு எந்த சிறந்த சிகிச்சையும் கூந்தலுக்கு இருக்க முடியாது. தேங்காய் எண்ணெயை சூடாக்கும் முன், அதில் கால் பாகம் ஆலிவ், பாதாம் அல்லது விளக்கெண்ணெயை சேர்த்துக் கொள்ளவும். இதை தலையில் தேய்த்து, குறைந்தது அரை மணி நேரம் ஊற வைக்கவும். வறண்ட வானிலை நிலவும் போது, இந்த ஆயில் மசாஜ், கூந்தலுக்கு தேவையான சத்தை தரும்.

0 comments:

 
back to top