இளம் இசையமைப்பாளரான அனிருத் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் மோசடிப் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக வதந்திகள் பரவிவருகின்றன.
ஒய் திஸ் கொலவெறி பாடலின் மூலம் உலகையே ஆட்டம்போட வைத்த இசையமைப்பாளர் அனிருத். இன்றைய இளைஞர்களின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராகத் திகழ்ந்துவரும் இவர் மீது மோசடிப்புகார் அளிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் பரவிவருகின்றன.
காதலில் சொதப்புவது எப்படி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பாலாஜி மோகன் தற்பொழுது இயக்கிவரும் வாய் மூடி பேசவும் திரைப்படத்திற்கு முதலில் அனிருத் இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்பொழ்து இப்படத்திற்கு ராகவேந்திரா என்ற அறிமுக இசையமைப்பாளர் இசையமைக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்படத்திற்கு இசையமைப்பதற்காக அனிருத் முன்பணம் பெற்றுக் கொண்டதாகவும், ஆனால் அவர் இப்படத்திற்கு இசையமைக்கவில்லை என்றும், முன்பணத்தைத் திரும்பப் பெற்றுத்தரக் கோரியும் இப்படத்தின் தயாரிப்பாளர், தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டிருப்பதாகவும் வதந்திகள் பரவிவருகின்றன.
வாய் மூடி பேசவும் திரைப்படம் மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் தயாராகிவருகிறது. தல்கர் சல்மான் மற்றும் நஸ்ரியா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துவருகின்றனர்.



12:15 AM
Unknown

Posted in:
0 comments:
Post a Comment