.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, January 10, 2014

அஜீத் - விஜய்; பொங்கல் விருந்தை அடிச்சுக்காம சாப்பிடுங்கப்பா..!


எதிரெதிர் துருவங்களாக இருந்த அஜித்தும் விஜய்யும் இணைந்தது அஜித்தின் முயற்சியால் தான். ரசிகர்கள் அதிக எமோஷனாவதால் இனி இருவரது படங்களும் ஒரேநாளில் ரிலீஸ் செய்ய வேண்டாம் என்று அஜித் சொன்னதன் பின்பு தான் இந்த ஒரே நாள் கொண்டாட்டம் தவிர்க்கப்பட்டது.

இந்த வருட பொங்கலுக்கு கைவிட்ட பழக்கத்தை கையிலெடுத்திருப்பது ஜில்லா டீம் தான். படம் துவங்கியபோதே ஜனவரி 10 ரிலீஸ் என அறிவித்து விட்ட வீரம் டீமுடன், பொங்கல் ரிலீஸ் என்று படப்பிடிப்பை துவங்கிய ஜில்லா டீம் 10-ஆம் தேதி ரிலீஸ் என அறிவித்துவிட்டது.

ஜனவரி 10-ஆம் தேதிக்காக கிளைமேக்ஸ் காட்சிக்காக காத்திருப்பதுபோல் காத்திருக்கின்றனர் ரசிகர்கள். இரண்டு திரைப்படத்தில் வரும் உண்மையான க்ளைமேக்ஸ் காட்சியும் அதிரடித்திருவிழாவாம். அண்ணன் - தம்பிகள் என ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த ‘விநாயகம் பிரதர்ஸ்’ கதை தான் வீரம் என்றாலும் க்ளைமேக்ஸில் 20 நிமிட சண்டை காட்சிகள் உணர்ச்சிகரமான சீன்கள் தானாம்.

அப்பா - மகனின் (சிவன் - சக்தி) ஆக்‌ஷன் கலந்த கதை தான் ஜில்லா. நூறு ஏக்கர் சோளக்காட்டில் ஏரியல் வியூவில் எடுக்கப்பட்ட க்ளைமேக்ஸ் சண்டைக்காட்சி தான் ஜில்லாவின் ஸ்பெஷல். அவுங்கவுங்க ஆளுக அவுங்கவங்க பொங்கல் விருந்தை அடிச்சுக்காம சாப்பிடுங்க.

ஊர் சுற்றலாம் வாங்க.. - சென்னை ..!



சென்னை

தலைநகரம் : சென்னை

பரப்பு : 174 ச.கி.மீ

மக்கள் தொகை : 4,216,268

எழுத்தறிவு : 3,079,004 (80.14%)

ஆண்கள் : 2,161,605

பெண்கள் : 2,094,663

மக்கள் நெருக்கம் : 1 ச.கீ.மீ - க்கு 24,231

அமைவிடம்:

தமிழகத்தின் வடகிழக்கு மூலையில் வங்காள விரிகுடா கடற்கரையைத் தொட்டு அமைந்துள்ளது. இதன் கிழக்கே வங்காள விரிகுடா ; ஏனைய திசைகளில் திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் அமைந்துள்ளன.

வரலாறு :


சென்னை நகரம் 1659 இல் நிர்மானம் செய்யப்பட்டது. பிரான்சிஸ்டே என்ற ஆங்கிலேயர் 1640 இல் புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்டினார். 1688 இல் சென்னை மாநகராட்சி உருவாக்கப்பட்டது. 1746, 1758, 1772 களில் சென்னை பிரெஞ்சுக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது : அதன் பின் நாடு சுதந்திரமடையும்வரை அது ஆங்கிலேயரின் கீழேயே இருந்தது.

சட்டசபைத் தொகுதிகள்-14

ராயபுரம், துறைமுகம், டாக்டர் ராதா கிருஷ்ணன்நகர், பார்க்டவுண், பெரம்பூர், புரசைவாக்கம், எழும்பூர், அண்ணாநகர், தியாகராஜநகர், ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மைலாப்பூர், சைதாப்பேட்டை.

பாராளூமன்றத் தொகுதிகள்-3

வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை.

வழிபாட்டிடங்கள்:


கந்தகோட்டம், வடபழனி, மாங்காடு மாரியம்மன் கோவில், அஷ்டலட்சுமி கோவில், திருவேற்காடு கருமாரி அம்மன் கோவில், ஆயிரம் விளக்கு மசூதி, ஸ்ரீராகவேந்திர மடம், சாந்தோம் சர்ச்.

சுற்றுலாத் தலங்கள்

வள்ளுவர் கோட்டம், கோல்டன் பீச், வண்டலுர் மிருகக் காட்சி சாலை, மெரினா பீச், கிண்டி சிறுவர் பூங்கா, மியூசியம்.

வள்ளுவர் கோட்டம்,


இது சென்னை மத்திய பகுதியில் அமைந்துள்ளது. தேர் போன்ற அமைப்பு காணப்படுகிறது. 133 குறள்களும் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.

கோல்டன் பீச்:


சென்னையிலிருந்து 20 நிமிட பயண தூரத்தில் இது அமைந்துள்ளது. இங்கு சிறியவர் முதல் பெரியவர் வரை சிறந்த பொழுதுபொக்கு அம்சங்கள் நிறைந்துள்ளன.

மெரினா பீச்:

இது சென்னைக்கு கிழக்கே காமராஜர் சாலையில் அமைந்துள்ளது. ஆசியாவின் நீண்ட கடற்கரையான இதன் நீளம் சுமார் 13 கிலோ மீட்டர் ஆகும்.

சிறப்புகள்

தென்னிந்திய கலாச்சாரத்தின் நுழைவு வாயிலாக கருதப்படுகிறது. தமிழகத்தின் தலைநகரம், தொழிற் துறையில் சிறந்த துறைமுக நகரமும் கூட. பங்கு மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. பன்னாட்டு விமான சேவையால் உலகின் பல பகுதிகளோடும் இணைக்கப்பட்டுள்ளது.

மொழி :

தமிழ், குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, தெலுங்கு, உருது.

Thursday, January 9, 2014

உங்களுடைய ஆவணங்கள் தொலைந்தால் எப்படி திரும்பப் பெறுவது..?

உங்களுடைய  ஆவணங்கள் தொலைந்தால் எப்படி திரும்பப் பெறுவது..?



  • இன்ஷூரன்ஸ் பாலிசி!


யாரை அணுகுவது..?

பாலிசியை விநியோகம் செய்த கிளையை.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.

எவ்வளவு கட்டணம்?

ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட வேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000 ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப
கட்டணம் செலுத்த வேண்டும்.

கால வரையறை:

விண்ணப்பம் அளித்த 15 நாட்களுக்குள் நகல் ஆவணம் கிடைக்கக்கூடும்.

நடைமுறை:

நகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம் அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள் தருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய் பத்திரத்தில் டைப் செய்துகொள்ள வேண்டும்.இன்னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போனவிவரங்கள் கேள்வி பதில் வடிவில்கேட்கப்பட்டிருக்கும்; அதை பூர்த்தி செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு, ஆவணங்களை இணைத்து தரவேண்டும்.


  • மதிப்பெண் பட்டியல்!


 (பள்ளி மற்றும்கல்லூரி) யாரை அணுகுவது..?

பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ்,கட்டணம் செலுத்திய ரசீது.

எவ்வளவு கட்டணம்?

உயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105.

மேல்நிலை பொதுத்தேர்வு ( 2) பட்டியல் ரூ.505.

கால வரையறை:

விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்கள்.

நடைமுறை:

காவல் துறையில் புகார் அளித்து 'கண்டுபிடிக்க முடியவில்லை’ என சான்றிதழ் வாங்கியபிறகு, முன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம்விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் கையப்பம் வாங்க வேண்டும். அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில்

அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார்.தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை

இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு

சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.



  • ரேஷன் கார்டு!


 யாரை அணுகுவது..?

கிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலர்; நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள்

வழங்குதுறை மண்டல உதவி ஆணையர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டை.

 எவ்வளவு கட்டணம்?

புதிய ரேஷன் கார்டு வாங்கும்போது ரூ.10 கட்ட
வேண்டும்.

கால வரையறை:

விண்ணப்பம் அளித்த 45 நாட்களுக்குள் கிடைத்துவிடும்.

நடைமுறை:

சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல் போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர
வேண்டும். அவர்களின் விசாரணைக்குப் பிறகு புது குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும்.


  • டிரைவிங் லைசென்ஸ்! யாரை அணுகுவது?


மாவட்டப் போக்குவரத்து அதிகாரி.என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

பழைய லைசென்ஸ் நகல் அல்லது எண் எவ்வளவு கட்டணம்?

கட்டணம் ரூ.315 (இலகுரக மற்றும் கனரக வாகனம்).

கால வரையறை:

விண்ணப்பம் செய்தபிறகு அதிகபட்சமாக ஒரு வாரம்.

நடைமுறை:

காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம் FIR ( NON TRACEABLE ) சான்றிதழ் வாங்கியபிறகு மாவட்டப் போக்குவரத்து அதிகாரிக்கு விண்ணப்ப மனு கொடுக்க வேண்டும்.


  • பான் கார்டு!யாரை அணுகுவது?


பான் கார்டு பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள் அல்லது வருமான வரித்துறை.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு, அடையாளச்சான்று மற்றும் முகவரிச் சான்று நகல்கள்.

எவ்வளவு கட்டணம்?

அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.96 ரூபாய்.
கால வரையறை: விண்ணப்பித்தப் பிறகு 45 நாட்கள்.

நடைமுறை:

பான் கார்டு கரெக்ஷன் விண்ணப்பம் வாங்கி அதில்தேவையான விவரங் களைக் குறிப்பிட்டுவிண்ணப்பிக்க வேண்டும்.


  • பங்குச் சந்தை ஆவணம்!


யாரை அணுகுவது?

சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பதிவாளர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காவல் துறை சான்றிதழ், பங்கு ஆவணத்தின் நகல்அல்லது ஃபோலியோ எண். எவ்வளவு கட்டணம்?

தனியாக கட்டணம் கட்டத் தேவையில்லை; ஆனால்,பங்குகளின் சந்தை மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும்.

கால வரையறை:

விண்ணப்பித்த 45 நாட்களிலிருந்து 90 நாட்களுக்குள்.

நடைமுறை:

முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கடிதம்எழுதவும். இதன் அடிப்படையில் காவல் துறையில்புகார் அளித்து சான்றிதழ் வாங்க வேண்டும். பங்குகள் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனம் குறிப்பிடும் தொகைக்கு முத்திரைத்தாளில் ஒப்புதல் கடிதம் தர வேண்டும். சில நிறுவனங்கள் செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட வலியுறுத்தும்.


  • கிரயப் பத்திரம்! யாரை அணுகுவது..?


பத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காவல் துறை கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம், யாரிடமும் இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரி பப்ளிக் ஒருவரின் உறுதிமொழி, சர்வே எண் விவரங்கள்.

எவ்வளவு கட்டணம்?

ஆவணக் கட்டணம் 100 ரூபாய்.இது தவிர, கூடுதலாக ஒவ்வொருபக்கத்திற்கும் 20ரூபாய்.

கால வரையறை:

ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.

நடைமுறை:

கிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்து அவர்களிடமிருந்து

சான்றிதழ் வாங்க வேண்டும். தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும்.இதற்குபிறகு சார்பு பதிவாளர் அலுவலம் செல்ல வேண்டும்.


  • டெபிட் கார்டு!யாரை அணுகுவது..?


சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

கணக்குத் தொடர்பான விவரங்கள்.

எவ்வளவு கட்டணம்?

ரூ.100.

கால வரையறை:

வங்கியைப் பொறுத்து ஓரிரு நாட்கள் அல்லது
அதிகபட்சம் 15 நாட்கள்.

நடைமுறை:

டெபிட் கார்டு தொலைந்தவுடன் அந்த வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தகவல் தெரிவித்து, அதன் மூலம் மோசடியான
பரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்க வேண்டும். அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட கிளைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி புது டெபிட் கார்டு வழங்குமாறு கோர வேண்டும்.


  •  மனைப் பட்டா! யாரை அணுகுவது..?


வட்டாட்சியர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்.?

நகல் பட்டா கோரும் விண்ணப்பம்.

எவ்வளவு கட்டணம்?

ரூ.20.

கால வரையறை:

ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.

நடைமுறை:

முதலில் தாசில்தாரிடம் மனு தர வேண்டும். அவர்பரிந்துரையின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.இதன் அடிப்படையில் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தால்  நகல் பட்டா கிடைத்துவிடும்.


  • பாஸ்போர்ட்! யாரை அணுகுவது..?


மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காவல் துறை சான்றிதழ், பழைய பாஸ்போர்ட் நகல், 20ரூபாய் முத்திரைத்தாளில் விண்ணப்பம்.

எவ்வளவு கட்டணம்?

ரூ.4,000.

கால வரையறை:

இந்தியாவில் தொலைத் திருந்தால் 35-லிருந்து 40
நாட்கள்; வெளிநாட்டில் தொலைத்திருந்தால் அதிக
காலம் எடுக்கும்.

நடைமுறை:

பாஸ்போர்ட் தொலைத்த பகுதியில் உள்ள காவல்
துறையில் புகார் அளித்து கண்டு பிடிக்கப்படவில்லைஎன்கிற சான்றிதழ் வாங்க வேண்டும். 20 ரூபாய்

முத்திரைத்தாளில் தொலைந்த விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். இவற்றில் நோட்டரி பப்ளிக் ஒருவரின் கையெழுத்து பெற்று மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

அதன் அடிப்படையில் அவர்கள் விசாரணை மேற்கொண்டபிறகு நகல் பாஸ்போர்ட் அனுப்பி வைத்துவிடுவார்கள்.


  • கிரெடிட் கார்டு!


கிரெடிட் கார்டு தொலைந்ததும் உடனடியாக
வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தகவல் அளித்து பரிவர்த்தனைகளை நிறுத்த வேண்டும்.

யாரை அணுகுவது?

நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
தொலைந்துபோன கிரெடிட் கார்டு தொடர்பான
விவரங்கள்.

எவ்வளவு கட்டணம்?

ரூ.100 (நிறுவனத்துக்கேற்ப வேறுபடும்).

கால வரையறை:

15 வேலை நாட்கள்.

நடைமுறை :

தொலைந்த கார்டுக்கு மாற்றாக வேறு கார்டு அளிக்கக்கோரினால் பதினைந்து வேலை நாட்களுக்குள்

உங்களுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். அடையாளச்
சான்று காண்பித்து வாங்க வேண்டும்.


  • இது எல்லாவத்தையும் விட தொலைத்து விடாமல் இருப்பது நல்லது

பெண்களே..! எச்சரிக்கை..!

பெண்களுக்கு சின்ன, சின்ன டிப்ஸ்…


தற்போதுள்ள காலகட்டத்தில் பெண்கள் எப்பொழுதும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அப்போது தான் எதிர்பாராமல் ஏற்படும் நிலைமையை சமாளிக்க முடியும்.

அதுமட்டுமில்லாமல் சின்ன சின்ன விசயங்களை பற்றியும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் யாருடைய உதவியும் இல்லாமல் தானே நிலைமையை சமாளிக்க முடியும்.

* அவசரத் தேவைக்கு போலீஸ், தீயணைப்பு மற்றும் அருகில் உள்ள போலீஸ் நிலைய தொலைபேசி எண்களைத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

* செல்போனில்தான் எல்லாருடைய எண்ணும் உள்ளதே என்று எண்ணாமல், உங்கள் கணவர், நெருங்கிய உறவினர் அல்லது நண்பர், அண்டை வீட்டுக்காரரின்தொலைபேசி எண்களை மனப்பாடம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

* எதேனும் பொருள் விற்க என்றோ அல்லது நன்கொடை வசூலிக்க என்றோ வீட்டுக்கு வரும் முன், பின் அறிமுகம் இல்லாத நபர்களை உடனடியாக வீட்டுக்குள் அனுமதிக்காதீர்கள்.

* வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில், அதிக உயரத்தில் இருந்து பொருள்களை எடுப்பது போன்ற ஆபத்து நிறைந்த வேலைகளைத் தவிர்த்துவிடுங்கள்.

* கேஸ் சிலிண்டர் தீர்ந்து போனால் புதிய சிலிண்டர் மாற்றுவது,கேன் தண்ணீர் தீர்ந்து போனால் மாற்றுவது, “பல்ப்’ மாட்டுவது போன்ற சிறிய வேலைகளை நீங்களாகவே செய்யக் கற்றுக் கொள்ளுங்கள்.

* கேஸ் சிலிண்டர் கொண்டு வரும் நபர், மின்சாரம் மற்றும் தொலைபேசி பணியாளர்கள் வீட்டுக்கு வந்தால், அவர்களின் பணி குறித்த அடையாளங்களை உறுதிப்படுத்தியபின் வீட்டுக்குள் அனுமதியுங்கள்.

* யாரும் வந்திருப்பதாக தெரிந்தால் உடனே கதவை திறக்காமல் சன்னல் வழியாக யார் என்று பார்த்த பின்னரே கதவை திறக்க வேண்டும். தெரியாத நபராக இருந்தால் அப்படியே பேசி அனுப்பி விடுங்கள்.
 
back to top