.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, January 10, 2014

இல்லத்தரசிகளுக்கு - அரசு அறிவிப்பு?




மானிய விலை சிலிண்டர்களி்ன் எண்ணி்க்கை 12 ஆக உயர்கிறது!

மானிய விலை மூலம் வழங்கப்படும் சிலிண்டர்களின் எண்ணிக்கையை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டு மானியம் மூலம் வழங்கப்படும் சிலிண்டரின் எண்ணிக்கையை மத்திய அரசு ஒன்பதாக குறைத்தது. இதன் காரணமாக பல்வேறு தரப்பில் அதிருப்தி எழுந்தது.இது ஐந்து மாநில சட்டசபை தேர்தலிலும் எதிரொலித்தது.

இதனையடுத்து சிலிண்டரின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அமைச்சர்கள் பலர் வலியுறுத்தி வந்தனர்.

 இதனை தொடர்ந்து மானிய விலை சிலிண்டர்களி்ன் எண்ணி்க்கைய ஒன்பதலிருந்து 12 ஆக உயர்த்துவது என்றும் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மருத்துவ ஆய்வில் வியத்தகு சாதனை..!

மருத்துவ ஆய்வில் வியத்தகு சாதனை: புற்று நோய் பரவுவதை தடுக்கும் சோதனை முயற்சி வெற்றி


மருத்துவ ஆய்வில் வியத்தகு சாதனையாக புற்று நோய் பரவுவதை தடுக்கும் சோதனை முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

உயிர்கொல்லி வியாதியான புற்றுநோய்க்கு இலக்கானவர்களுக்கு மரணத்தை தவிர மருந்து ஏதும் இல்லை என பேசப்பட்டு வந்த பழைய வேதாந்தம் இதன் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது.

அதிலும், மார்பக புற்று நோய் மிக வேகமாக பரவக்கூடியது என்பதால் இந்நோயால் தாக்கப்பட்ட கோடிக்கணக்கான பெண்களின் ஆயுட்காலத்தின் பெரும்பகுதி பயத்திலும், பீதியிலும், வலியிலும், வேதனையிலும் தான் கழிந்து வந்தது. பெரும்பாலான புற்று நோய் சார்ந்த மரணங்களுக்கு நோய் கிருமிகள் மனித உடலுக்குள் வேகமாக பரவி ரத்த அணுக்களை சிதைத்து அழிப்பதே காரணம் என கண்டறியப்பட்டது.

இவ்வகையிலான புற்றுக் கட்டியில் இருக்கும் கிருமிகள் வேகமாக பரவுவதை தடுக்கும் தீவிர ஆராய்ச்சியில் அமெரிக்காவில் உள்ள கார்னெல் மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நீண்ட காலமாக ஈடுபட்டு வந்தனர்.

இவர்களின் பல ஆண்டு கால உழைப்புக்கு தற்போது முதல்கட்ட பலன் கிடைத்துள்ளது.

புற்று நோயினால் பாதிக்கப்பட்ட மனித ரத்தம் மற்றும் எலிகளின் ரத்தத்தில், ஒட்டும் தன்மை கொண்ட ஒருவித ‘நானோ’ துகள்களை செலுத்தி ஆய்வு செய்ததில் அதிசயிக்கத்தக்க வகையில் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது.

இதன் மூலம் புற்றுக் கிருமிகள் வேறு இடத்திற்கு பரவுவது முற்றிலுமாக தடுக்கப்பட்டதுடன் புற்று கிருமிகளும் கொல்லப்பட்டன. 2 மணி நேரத்திற்குள் இந்த அரிய மாற்றம் நிகழ்ந்ததாக ஆராய்ச்சியாளர்கள் பெருமிதத்துடன் குறிப்பிட்டனர்.

சோதனை முயற்சியாக நடத்தப்பட்ட இந்த முதல்கட்ட ஆய்வு இன்னும் பலகட்ட சோதனைகளையும் மேம்பாடுகளையும் கடந்து, வெற்றிகரமான செயல் வடிவத்தை பெறும் போது புற்று நோய் சார்ந்த மரணங்கள் முற்றிலுமாக குறைந்து விடும் என்பதை உறுதியாக நம்பலாம்.

கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு – திரை விமர்சனம்



அக்கா, தம்பியாகிய கவிதாவும் சிவாவும் கிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர். சிவா மற்றும் அவரது நண்பர்கள், அக்கா கவிதா மீது பேரன்பு கொண்டு பாசத்தோடு வாழ்ந்து வருகிறார்கள். கவிதாவிற்கு போலீசில் சேருவதற்கான கடிதம் வருகிறது. இதனால் சிவா மற்றும் அவரது நண்பர்கள் கவிதாவை கண்ணீர் மல்க போலீஸ் தேர்வுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

ஒரு நாள் சிவா, கவிதா ஒரு ஆபத்தில் சிக்குவதாக கனவு காணுகிறார். இதனால் பதறிபோய் அவருக்கு போன் செய்கிறார். ஆனால் போன் நம்பர் ஒர்க் ஆகாமல் போய் விடுகிறது. இதனால் துடித்து போகிறார்.

மறுநாள், கிராமத்திலுள்ள ஒரு தோட்டத்தின் உரிமையாளர் தனது தோட்டத்தில் மர்ம பை ஒன்றை பார்க்கிறார். அதை திறந்து பார்க்கும் அவர் அதிர்ந்து போகிறார். அதில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டு கிடக்கிறாள். உடனே போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. விசாரணையில் கொலை செய்யப்பட்டு கிடந்தது சிவாவின் அக்கா கவிதா என தெரிகிறது. இதனால் சிவா மற்றும் அவரது நண்பர்கள் கதறி அழுகிறார்கள். பின்னர் அக்கா சாவிற்கு காரணமானவர்களை பழிவாங்க துடிக்கிறார்கள்.

இதனிடையே முன்னாள் அமைச்சர் ஒருவரின் ஆட்களை மர்ம கும்பல் கொலை செய்கிறது. பிறகு சிவா மற்றும் அவரது நண்பர்கள் துணையோடு அமைச்சரை கடத்துகிறது. போலீஸ் அவர்களை துரத்திக் கொண்டு சென்று அமைச்சரை மீட்கிறார்கள். போலீஸ் அதிகாரியான அக்கா கவிதாவின் காதலனான பாஸ்கர் அமைச்சரை கடத்தி சென்ற சிவாவை தப்பிக்க உதவி செய்கிறார்.

பிறகு அமைச்சரின் சகோதரர் மர்ம நபரால் கொலை செய்யப்படுகிறார். இதனால் போலீஸ் அனைத்து கொலைகளையும், கவிதா கொலையையும் கண்டறிய தனி டீம் ஒன்றை அமைக்கிறது.

இறுதியில் கவிதா எப்படி கொலை செய்யப்பட்டாள்? எதற்காக கொலை செய்யப்பட்டாள்? கொலை செய்தவர்களை சிவா பழிவாங்கினாரா? மற்ற கொலைகளை போலீஸ் கண்டுபிடித்ததா? என்பதே மீதிக்கதை.

படத்தின் நாயகன் ஆதவராம் நடிக்க முயற்சி செய்திருக்கிறார். நாயகி பிரியாவுடன் ஒரே பாடலில் டுயட் பாடுவதுடன் இரு காட்சிகளில் மட்டுமே இணைந்து நடித்துள்ளார். அக்கா கதாபாத்திரமான மஞ்சுவும் நடிப்பதற்கான வாய்ப்பு குறைவே. போலீஸ் அதிகாரியாக வரும் பிளாரென்ஸ் பெரைரா கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்.

அக்கா, தம்பி பாசத்தை கதையாக எடுத்துக் கொண்ட இயக்குனர் ஸ்ரீ கிருஷ்ணா, அதை திரைக்கதையில் தெளிவாக கூறியிருக்கலாம். படத்தில் தேவையற்ற காட்சிகள், தேவையில்லாத இடத்தில் பாடல் காட்சிகள் என பார்ப்பவர்களை கடுப்பேற்றுகிறார். கதாபாத்திரத்தை விட போலீஸ் என சொல்லிக்கொண்டு நிறைய பேர் வருகிறார். அதை குறைத்திருக்கலாம் இயக்குனர். எடிட்டிங் மற்றும் ஒளிப்பதிவிலாவது கவனம் செலுத்தியிருக்கலாம். பிரேம் இசையில் பாடல்களை ஒருமுறை கேட்கலாம்.

விஜய்யின் இமேஜுக்காக உருவான கதை ஜில்லா...!




விஜய், மோகன்லால் நடித்த ஜில்லா நாளை ரிலீசாகிறது.இதுபற்றி படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி நிருபர்களிடம் கூறியதாவது:சூப்பர் குட் பிலிம்சின் 25வது ஆண்டில், 85-வது படமாக ஜில்லா உருவாகியுள்ளது. விஜய், மோகன்லால் இருவரும் ஒத்துழைப்பு கொடுத்து நடித்ததால், நாங்கள் சொன்னபடி பொங்கலையொட்டி படத்தை வெளியிடுகிறோம். கேரளாவில் படத்தை ரிலீஸ் செய்யும் உரிமையைப் பெற்றுள்ள மோகன்லால், நடித்ததற்கு சம்பளம் வாங்கவில்லை.

எங்கள் நிறுவனத்துக்காக, பூவே உனக்காக, லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும், ஷாஜஹான், திருப்பாச்சி படங்களில் நடித்தார் விஜய். அந்த படங்கள் வெள்ளிவிழா கொண்டாடின. அதுபோல் ஜில்லாவும் வெள்ளிவிழா கொண்டாடும். இந்தப் படத்தில் பேமிலி சென்டிமென்ட்டும் அதிரடி ஆக்ஷனும் கலந்திருக்கும். விஜய்க்காக, அவரது இமேஜுக்காக உருவாக்கப்பட்ட கதைதான் இந்தப் படம். அடுத்து ஜீவா நடிக்கும் படத்தை தயாரிக்கிறோம்.

தெலுங்கில் லிங்குசாமி இயக்கத்தில் மகேஷ்பாபு ஹீரோவாக நடிக்கும் படத்தையும் தயாரிக்க இருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.இயக்குனர் ஆர்.டி.நேசன் கூறும்போது, தனது நண்பர்கள் குழுவுடன் தெனாவட்டாகத் திரியும் இளைஞனை, செல்லமாக ஜில்லா என்று அழைப்பார்கள். அதையே தலைப்பாக்கி விட்டேன். விஜய்க்கும், அவரது வளர்ப்புத் தந்தை மோகன்லாலுக்கும் நடக்கும் போராட்டம்தான் கதை என்றார்.
 
back to top