.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, January 13, 2014

கேப்டனின் அறியாத வாழ்க்கை வரலாறு..?




‘புரட்சிக் கலைஞர்’ எனவும், ‘கேப்டன்’ எனவும் அழைக்கப்படும் விஜயகாந்த் அவர்கள், தமிழ் திரைப்படத்துறையில் ஒரு புகழ்ப்பெற்ற நடிகர் மட்டுமல்லாமல், சிறந்த அரசியல்வாதியும் ஆவார்.

 2005 ஆம் ஆண்டு ‘தேசிய முற்போக்கு திராவிட கழகம்’ என்னும் கட்சியை ஆரம்பித்து வழிநடத்தி வருகிறார். ‘சட்டம் ஒரு இருட்டறை’, ‘நூறாவது நாள்’, ‘வைதேகி காத்திருந்தால்’, ‘அம்மன் கோவில் கிழக்காலே’, ‘ஊமைவிழிகள்’, ‘செந்தூரப் பூவே’, ‘சத்ரியன்’, ‘கேப்டன் பிரபாகரன்’, ‘சின்ன கவுண்டர்’, ‘என்னாசை மச்சான்’, ‘உளவுத்துறை’, ‘வானத்தைப் போல’, ‘ரமணா’, ‘சொக்கத்தங்கம்’ போன்றவை இவர் நடிப்பில் வெளிவந்த சிறந்த திரைப்படங்களாகப் போற்றப்படுகின்றன.

2006 ஆம் ஆண்டு, தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், ‘விருத்தாசலம்’ தொகுதியிலும், 2011 ஆம் ஆண்டு ‘ரிஷிவந்தியம்’ தொகுதியிலும் வெற்றிப்பெற்று, தமிழக சட்டப் பேரவை உறுப்பினராகவும், எதிர்கட்சித் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.

ஒரு நடிகராகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பிறகு தமிழ் நாட்டு அரசியலில் தே.மு.தி.க கட்சியை உருவாக்கி, குறுகிய காலத்திற்குள் மாபெரும் வெற்றிக்கண்ட விஜயகாந்த் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சினிமா, அரசியல் பணிகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: ஆகஸ்ட் 25, 1952

இடம்: மதுரை, தமிழ்நாடு மாநிலம், இந்தியா

பணி: நடிகர் மற்றும் அரசியல்வாதி

நாட்டுரிமை: இந்தியன்



பிறப்பு  

‘விஜயராஜ்’ என்னும் இயற்பெயர்கொண்ட விஜயகாந்த் அவர்கள், 1952  ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25  ஆம் நாள், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், மதுரை  மாவட்டதிலுள்ள “திருமங்கலம்” என்ற இடத்தில் ‘கே.என். அழகர்சிவாமி நாயிடுக்கும்’ ஆண்டாள் என்பவருக்கும் மகனாக பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

தன்னுடைய பள்ளிப்படிப்பை தேவகோட்டையிலுள்ள ‘தி பிரிட்டோ உயர்நிலைப் பள்ளியிலும்’, மதுரையிலுள்ள ‘நாடார் உயர்நிலைப் பள்ளியிலும்’ பயின்றார். இளம் வயதிலேயே சினிமா பார்க்கும் ஆர்வம் அதிகம் இருந்ததால், படிப்பில் அவருக்கு நாட்டம் ஏற்படவில்லை.

 இதனால் தன்னுடைய படிப்பை, பத்தாம் வகுப்போடு முடித்துக்கொண்டு, அப்பா பார்த்துவந்த அரிசி ஆலை நிர்வாகத்தை சிறிதுகாலம் கவனித்து வந்தார்.

திரைப்படத்துறையில் விஜயகாந்தின் பயணம்


1978 ஆம் ஆண்டு இயக்குனர் ‘காஜா’ அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த, ‘இனிக்கும் இளமை’ என்ற திரைப்படத்தில், முதன் முதலாக ஒரு கௌரவத் தோற்றத்தில் நடித்தார்.

அதன் பிறகு சினிமாத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு சென்னைக்கு வந்து சேர்ந்தார். 1979-ல் ‘ஓம்சக்தி’ மற்றும் 1980-ல் ‘தூரத்து இடிமுழக்கம்’ போன்ற படங்களில் நடித்த அவருக்கு, 1981 ஆம் ஆண்டு எஸ். ஏ. சந்திரசேகர் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த ‘சட்டம் ஒரு இருட்டறை’ திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது மட்டுமல்லாமல், அவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய படமாகவும் அமைந்தது.

 அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு அதிரடி நாயகனாக தன் பெயரை பதிவு செய்த அவர், ‘மனக்கணக்கு’, ‘சிவப்பு மாலை’, ‘நீதி பிழைத்தது’, ‘பார்வையின் மறுபக்கம்’, ‘ஆட்டோ ராஜா’, ‘சாட்சி’, ‘துரை கல்யாணம்’, ‘நாளை உனது நாள்’, ‘100வது நாள்’, ‘ஊமை விழிகள்’ போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழ்சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம்வந்தார்.


கேப்டன் எனப் பெயர்வரக் காரணம்

‘வைதேகி காத்திருந்தால்’, ‘அம்மன் கோயில் கிழக்காலே’, ‘சத்ரியன்’, ‘புலன் விசாரணை’ போன்ற திரைப்படங்களில் அற்புதமானக் கதாபத்திரங்களை ஏற்று நடித்து, குறுகிய காலத்துக்குள் 90-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முடித்த அவர், 1991 ஆம் ஆண்டு செல்வமணி இயக்கத்தில் ‘கேப்டன் பிரபாகரன்’ என்ற திரைபடத்தில் நடித்தார்.

இத்திரைப்படம் அவருக்கு 100வது படமாக மட்டுமல்லாமல், தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றியையும் பெற்றது. சினிமா ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற படங்களாக அமைந்த இதில், ஒரு காட்டிலாக்கா அதிகாரியாக நடித்து, பேரும் புகழும் பெற்றதால், இவர் மக்களாலும், திரையுலகத்தினராலும் “கேப்டன்” என்று அழைக்கப்பட்டார்.


இவர் நடித்த சிலத் திரைப்படங்கள்


‘இனிக்கும் இளமை’ (1978), ‘ஓம் சக்தி’ (1979), ‘சட்டம் ஒரு இருட்டறை’ (1981), ‘சாட்சி’ (1983), ‘100வது நாள்’ (1984), ‘சத்தியம் நீயே’ (1984), ‘தீர்ப்பு என் கையில்’ (1984), ‘வைதேகி காத்திருந்தால்’ (1984), ‘ஏமாற்றாதே ஏமாற்றாதே’ (1985), ‘நானே ராஜா நானே மந்திரி’ (1985), ‘அம்மன் கோயில் கிழக்காலே’ (1986), ‘ஊமைவிழிகள்’’ (1986), ‘கரிமேட்டுக் கருவாயன்’ (1986), ‘தழுவாத கைகள்’ (1986), ‘சட்டம் ஒரு விளையாட்டு’ (1987), ‘சிறை பறவை’ (1987), ‘செந்தூரப் பூவே’ (1988), ‘தென்பாண்டி சீமையிலே’ (1988), ‘பூந்தோட்ட காவல்காரன்’ (1988), ‘சத்ரியன்’ (1990), ‘சந்தனக் காற்று’ (1990), ‘புலன் விசாரணை’ (1990), ‘கேப்டன்  பிரபாகரன்’ (1991), ‘மாநகர காவல்’ (1991), ‘சின்ன கவுண்டர்’ (1992), ‘ஏழைஜாதி (1993), ‘கோயில் காளை’ (1993), ‘செந்தூரப் பாண்டி’ (1993), ‘ஆனஸ்ட் ராஜ்’ (1994), ‘என் ஆசை மச்சான்’ (1994), ‘சேதுபதி ஐபிஎஸ்’ (1994), ‘அலெக்ஸ்சாண்டர்’ (1996), ‘உளவுத்துறை’ (1998), ‘வானத்தைப்போல’ (2000), ‘ரமணா’ (2002), ‘சொக்கத்தங்கம்’ (2003) போன்றவை இவர் நடிப்பில் வெளிவந்த சிறந்த படங்களாகும்.


இல்லற வாழ்க்கை


1990 ஆம் ஆண்டு பிரேமலதா என்பவரைத் திருமணம் செய்துகொண்ட விஜயகாந்த் அவர்களுக்கு, விஜய் பிரபாகரன் மற்றும் சண்முகப் பாண்டியன் என்ற இரு மகன்கள் பிறந்தனர்.


அரசியல் வாழ்க்கை


தமிழ் சினிமாவில் சுமார் 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, ‘புரட்சி கலைஞன்’ என பெயர்பெற்ற அவர், எம்ஜிஆரின் தீவிர ராசிகனாக மட்டுமல்லாமல், 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி மதுரையில் “தேசிய முற்போக்கு திராவிட கழகம்” என்னும் கட்சியை ஆரம்பித்து, அரசியலிலும் கால்பதிக்க துவங்கினார். 2006 ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் இவரின் தே.மு.தி.க. கட்சி மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் போட்டியிட்டு, ஏறக்குறைய அனைத்து இடங்களிலும் கணிசமான வாக்குகளைப் பெற்று, தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சிகளுக்கு அடுத்து தனிபெரும் கட்சியாக உருவெடுத்தது.

 விருத்தாசலம் தொகுதியில் முதற்களம் கண்ட விஜயகாந்த் அவர்கள், தன்னை எதிர்த்து போட்டியிட்டவரை விட சுமார் 13,000 வாக்குகள் அதிகம் பெற்று, சட்டமன்ற உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டார். பிறகு 2011 ஆம் ஆண்டு  நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க உடன் கூட்டணி அமைத்து, களம் கண்ட இவருடைய கட்சி 41 இடங்களில் போட்டியிட்டு 29 தொகுதிகளில் வெற்றிப்பெற்று தி.மு.க கட்சியை பின்னுக்குத் தள்ளி பிரதான எதிர்கட்சி அந்தஸ்தினைப் பெற்றது.

ஆனால் குறுகிய நாட்களுக்குள் அ.தி.மு.க-வுடன் ஏற்படுத்திக்கொண்ட கூட்டணியை முறித்துகொண்ட விஜயகாந்த் அவர்கள், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.

தனுஷ்-சிவகார்த்திகேயன் நட்பில் பிளவு..?



தனுஷ்-சிவகார்த்திகேயன் நட்பில் பிளவு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

சின்னத்திரை காம்பையராக இருந்து சினிமாவில் ஹீரோவாகியிருப்பவர் சிவகார்த்திகேயன். அந்த வகையில் டிவியில் இருப்பவர்கள் சினிமாவில் பெரிய அளவில் சாதிக்க முடியாது என்ற செண்டிமென்ட்டை உடைத்தெறிந்துவிட்டு தற்போது வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் என தொடர்ந்து இந்த வருடம் மட்டும் ஹாட்ரிக் வெற்றியை கொடுத்திருக்கிறார். சிவகார்த்திகேயனை வளர்த்துவிட்டதில் தனுஷுற்கு முக்கிய பங்கு உண்டு என்று சொல்லலாம். தனுஷ் தயாரித்த எதிர்நீச்சல் படம்தான் சிவகார்த்திகேயனுக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதுமுதல் சிவகார்த்திகேயனின் மார்கெட் உயரச் சென்றதோடு மட்டுமல்லாமல் கோடிகளை சம்பளமாகவும் பெறத் துவங்கிவிட்டார்.

ஒருபுறம் சிவகார்த்திகேயன் வேகமாக வளர்ந்து வந்தாலும் அவரை வளர்த்துவிட்ட தனுஷின் நிலையோ இறங்குமுகமாகத்தான் உள்ளது. இந்த ஆண்டில் தனுஷ் நடித்து வெளிவந்த ‘மரியான், நய்யாண்டி’ இரண்டு படங்களுமே மாபெரும் தோல்விப் படங்களாக அமைந்தன. இதனால் தனுஷின் நெருங்கிய வட்டாரங்களுக்கு அவர் சிவகார்த்திகேயனை வளர்த்து விடுவது பிடிக்கவில்லையாம்.

சிவகார்த்திகேயன் நடித்துள்ள படங்கள் எல்லாமே நீங்கள் நடிக்க வேண்டிய படங்களைப் போலவே உள்ளன. உங்களுக்குப் போட்டியாக நீங்களே ஒருவரை உருவாக்கி, தோல்வியை சந்தித்துக் கொள்கிறீர்களே என்கிறார்களாம். இது, தனுஷ்-சிவகார்த்திகேயன் நட்பில் பிளவை உண்டாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

தனுஷ், சிவகார்த்திகேயனை வைத்து மீண்டும் ஒரு படம் தயாரிக்க இருந்தது நினைவிருக்கலாம். இந்நிலையில் லேசாகப் புகைய ஆரம்பித்துள்ள இந்த விவகாரம் தீப்பிடித்து எறியும் என்கிறார்கள்

ஆன்லைனில் ஜில்லா, வீரம்: அதிர்ச்சியில் ரசிகர்கள்..!



பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீஸாகியுள்ள ஜில்லா மற்றும் வீரம் படங்கள் இணையதளத்தில் லீக்காகி உள்ளன.

பொங்கல் விருந்தாக அஜீத்தின் வீரம் மற்றும் விஜய்யின் ஜில்லா ஆகிய படங்கள் கடந்த 10ம் தேதி ரிலீஸாகின. இரண்டுமே பெரிய நடிகர்களின் படம் என்றாலும் ஜில்லாவும், வீரமும் நல்ல வசூலை அள்ளிக் கொண்டிருக்கின்றன.

தங்கள் தல, தளபதி படங்களை ரசிகர்கள் தியேட்டர்களில் முண்டியடித்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சிலர் தங்கள் பிரிய நடிகர்களின் படத்தை திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

 கோடிக்கணக்கான பணத்தை செலவிட்டு வீரம், ஜில்லா படங்களை எடுத்துள்ளனர். இந்நிலையில் படம் ரிலீஸான 3 நாட்களுக்குள் இணையதளத்தில் இந்த இரண்டு படங்களும் அப்லோட் செய்யப்பட்டுள்ளன.

இணையதளத்தில் ஜில்லா, வீரம் படத்தை பார்த்துவிட்டோமே, பார்க்கப் போகிறோமே என்று சிலர் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரீல் அந்து போச்சிடா..! ஜில்லா-வீரம் பட பஞ்ச் வசனங்கள்..!

பட்டைய கிளப்பும் ஜில்லா-வீரம் பட பஞ்ச் வசனங்கள்


பொங்கல் திருநாளையொட்டி அஜீத்தின் “வீரம்”, விஜய்யின் “ஜில்லா” படங்கள் வெளிவந்து வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கின்றன.

பஞ்ச் வசனம் என்பது சினிமாவில் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. ரஜினி, கமல், விஜயகாந்த் ஆகியேரது படங்களில் பஞ்ச் கண்டிப்பாக இடம்பெறும். அதுபோலவே சமீப காலங்களாக அஜீத், விஜய் ஆகியோரது படங்களிலும் பஞ்ச் பட்டைய கிளப்பி வருகிறது. இந்நிலையில் பொங்கலையொட்டி வெளியாகியிருக்கும வீரம், ஜில்லா படங்களில் இந்த பஞ்ச் வசனங்கள் இடம் பெற்றுள்ளன. அதில் சில உங்களுக்காக,

“வீரம்” பஞ்ச் வசனங்கள்

• சந்தோஷம் வந்தா நாலுப்பேரோட பகிர்ந்துக்கணும். கஷ்டம் வந்தா தான் மட்டும் அனுபவிக்கணும். அவன்தான் மனுஷன்.

• சுடுக்காட்டுக்கு எப்படி போகணும்னு கேட்டாங்க. வழியைச் சொன்னேன். இந்நேரம் போய் சேர்ந்திருப்பாங்க.

• நம்மக்கூட இருக்கிறவங்களை நாமப் பார்த்துகிட்டா, நமக்கு மேல இருக்குறவன் நம்மைப் பார்த்துப்பான்.

• எதிரியா இருந்தாலும் அவன் நெஞ்சுல குத்தனும்டா

• நீ என்ன ஜாதின்னு நினைக்கிறீயோ நான் அந்த ஜாதி. நீ தேவன்னு நினைச்சா நான் தேவன், நீ நாடார்னு நினைச்சா நான் நாடார், நீ தலித்னு நினைச்சா நான் தலித், நீ வன்னியர்னு நினைச்சா நான் வன்னியர். நான் உலகத்துல இருக்கிற ஒரே ஜாதி. உழைக்கிற ஜாதி’

“ஜில்லா” பஞ்ச் வசனங்கள்

• எதிரிய எதிர்ல வச்சுக்கலாம்- ஆனா துரோகிய தூரத்துலக்கூட வச்சுக்கக்கூடாது.

• ஆஸ்பத்திரிக்கு வந்தா ஒண்ணு குணமாகிப் போகனும், இல்ல பொணமாகிப் போகனும்.

• தீயிலயும், பகையிலயும் மிச்சம் வைக்கக்கூடாது.

• சிவனையும் பாக்க மாட்டேன், எவனையும் பாக்க மாட்டேன், தூக்கிட்டுப்போயிட்டே இருப்பேன்.

• நாட்டுல வண்டி ஓட்டத் தெரியாதவன் கூட உண்டு. பிகரை ஓட்டத் தெரியாதவன் யாரும் இல்ல.

• போலீஸ் அடிச்சுப்பார்திதிருப்பே. போலீசையயே அடிச்சு பார்த்திருக்கியா?.

• சப்பை பிகரைக்கூட லவ் பண்ணுவேன். ஆனா சப் இன்ஸ்பெக்டரை லவ் பண்ணமாட்டேன்.

• மத்தவங்ககிட்டே தோத்தாத்தான் தோல்வி, சொந்தப்பையன்கிட்டே தோத்தாலும் அது வெற்றிதான்.

 
back to top