பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீஸாகியுள்ள ஜில்லா மற்றும் வீரம் படங்கள் இணையதளத்தில் லீக்காகி உள்ளன.
பொங்கல் விருந்தாக அஜீத்தின் வீரம் மற்றும் விஜய்யின் ஜில்லா ஆகிய படங்கள் கடந்த 10ம் தேதி ரிலீஸாகின. இரண்டுமே பெரிய நடிகர்களின் படம் என்றாலும் ஜில்லாவும், வீரமும் நல்ல வசூலை அள்ளிக் கொண்டிருக்கின்றன.
தங்கள் தல, தளபதி படங்களை ரசிகர்கள் தியேட்டர்களில் முண்டியடித்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சிலர் தங்கள் பிரிய நடிகர்களின் படத்தை திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
கோடிக்கணக்கான பணத்தை செலவிட்டு வீரம், ஜில்லா படங்களை எடுத்துள்ளனர். இந்நிலையில் படம் ரிலீஸான 3 நாட்களுக்குள் இணையதளத்தில் இந்த இரண்டு படங்களும் அப்லோட் செய்யப்பட்டுள்ளன.
இணையதளத்தில் ஜில்லா, வீரம் படத்தை பார்த்துவிட்டோமே, பார்க்கப் போகிறோமே என்று சிலர் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



8:21 PM
Unknown

Posted in:
0 comments:
Post a Comment