பொங்கலையொட்டி கடந்த 10ம் தேதி அஜித்தின் வீரம், விஜய்யின் ஜில்லா படங்கள் திரைக்கு வந்தன.
இரண்டு படங்களுமே நல்ல ஓபனிங்கை பெற்றுள்ளது. அதே சமயம் வீரம் படம் 2 மணி நேரம் 40 நிமிடமும் ஜில்லா 3 மணி நேரமும் ஓடக்கூடியதாக இருந்தது. ஜில்லா படத்தின் நீளம் குறித்து விஜய் ரசிகர்களும் விமர்சகர்களும் குறை தெரிவித்தனர்.
இதையடுத்து உடனடியாக படத்தின் 10 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டது. அந்த பத்து நிமிட காட்சிகளில் ‘எப்ப மாமா ட்ரீட்டு’ பாடலும் தூக்கப்பட்டு விட்டது.
இதனிடையே நீக்கப்பட்ட பாடலை மீண்டும் சேர்க்கும்படி தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரிக்கும் இயக்குனர் நேசனுக்கும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.
இந்நிலையில் பெரம்பலூரில் திரையரங்கு ஒன்றில் ‘எப்ப மாமா ட்ரீட்டு’ பாடல் காட்சி ஒளிபரப்பாகாததால், ஆத்திரமடைந்த ரசிகர்கள் இருக்கைகள் மற்றும் திரையை சேதப்படுத்தினர்.
இதைத் தொடர்ந்து அடுத்த காட்சிகளில் காவல் துறையினரின் தீவிர பரிசோதனைக்குப் பிறகே ரசிகர்கள் திரையரங்குக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஜில்லாவில் க்ளைமாக்ஸுக்கு முன் இடம்பெறும் அந்தப்பாடலில் விஜய்யின் டான்ஸ் மூவ்மெண்ட்கள் அற்புதமாக இருக்கும்.
0 comments:
Post a Comment