.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, January 16, 2014

3ஜி ஆதரவு கொண்ட நோக்கியா ஆஷா 503 ரூ.6.683 விலையில் இப்போது கிடைக்கும்....!



நோக்கியா நிறுவனம் இந்திய சந்தையில் அதன் ஆஷா போன் தொடர்களை விரிவுபடுத்தி ஆஷா 500, ஆஷா 502 மற்றும் ஆஷா 503 அறிமுகப்படுதியுள்ளது. இந்திய சந்தையில் நோக்கியா ஆஷா 500 ரூ.4,499 விலையிலும், நோக்கியா ஆஷா 502 ரூ.5.969 விலையிலும் இப்போது கிடைக்கிறது.

இறுதியாக நிறுவனம் நோக்கியா ஆஷா 503 அறிமுகப்படுதியுள்ளது. முன்னதாக நோக்கியா ஆஷா 503 ரூ.6,799 விலையில் கிடைக்கும் என்று அறிவித்திருந்தது. ஆனால் இப்போது நோக்கியா வலைத்தளத்தில் இருந்து நோக்கியா ஆஷா 503 ரூ.6.683 விலையில் ஆர்டர் செய்யலாம். இந்த போன் கருப்பு, வெள்ளை, மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம் வகைகளில் கிடைக்கும்.

நோக்கியா ஆஷா 503, சாதனத்தில் ஸ்வைப் பயனர் இடைமுகம் மற்றும் பாதுகாப்பிற்காக கார்னிங் கொரில்லா கண்ணாடி 2 பொருத்திய 3 இன்ச் QVGA (240x320) தீர்மானம் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது எல்இடி ப்ளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல் பின்புற கேமரா உள்ளது. ஆஷா 500 மற்றும் ஆஷா 502 போன்று, ஆஷா 503 இரட்டை காத்திருப்பு ஆதரவு கொண்ட இரட்டை சிம் சாதனம் ஆகும். இது 64MB ரேம் வருகிறது மற்றும்
மைக்ரோSD அட்டை வழியாக 32 ஜிபி வரை அதிகப்படுத்த கூடிய சேமிப்பு துணைபுரிகிறது.

ஆஷா 503, 1110mAh பேட்டரி திறன் கொண்டுள்ளது. இணைப்பு விருப்பங்கள் 3G, Wi-Fi, 802.11 b/g/n, ஸ்லாம் கொண்ட ப்ளூடூத் 3.0 மற்றும் FM ரேடியோ ஆகியவை அடங்கும். அக்டோபர் 2013ல் நோக்கியா உலக நிகழ்ச்சியில், நோக்கியா ஆஷா 500 மற்றும் ஆஷா 502 கைபேசியில் இயங்கும் ஆஷா Platform 1.1 ல் இருந்து மேம்படுத்தப்பட்டு நோக்கியா ஆஷா 503ல் ஆஷா Platform 1.2 செயல்படும் என்று அறிமுகப்படுத்தப்பட்டது.

நோக்கியா ஆஷா 503 அம்சங்கள்:

கார்னிங் கொரில்லா கண்ணாடி 2 பொருத்திய 3 இன்ச் QVGA (240x320) தீர்மானம் டிஸ்ப்ளே,
எல்இடி ப்ளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல் பின்புற கேமரா,
இரட்டை காத்திருப்பு ஆதரவு கொண்ட இரட்டை சிம்,
64MB ரேம்,
மைக்ரோSD அட்டை வழியாக 32 ஜிபி வரை அதிகப்படுத்த கூடிய சேமிப்பு,
3G,
Wi-Fi,
802.11 b/g/n,
ஸ்லாம் கொண்ட ப்ளூடூத் 3.0,
FM ரேடியோ,
1110mAh பேட்டரி.

நித்யானந்தா - புது சேனல் விரைவில்.....!



இது நம்புறதுக்கு கொஞ்சம் கஷ்டமான வதந்திதான் ஆனா நம்பித்தான் ஆகணும். பரபரப்பான அந்த சாமியார் இப்போது ஒரு சேனல்ல நிகழ்ச்சி பணிக்கிட்டிருக்கார்.

 அப்படியே ஒரு சேனல் எப்படி நடத்துறதுங்கறதையும் கற்றுக் கொண்டாராம். விரைவில் அவர் ஒரு தனி சேனல் ஆரம்பிக்கப்போறாராம். அது ஆனந்தம் தரும் ஆன்மீக சேனல் இல்லையாம்.

 ஆல் இன் ஆல் தரும் எண்டர்டயிண்ட்மெண்ட் சேனலாம். அதுக்கு மானேஜிங் டைரக்டராவும், புரோகிராம் ஹெட்டாகவும் ஆகப்போகிறவர் சாமியாரின் அன்புக்கு பாத்திரமான அந்த நடிகை தானாம்.

ஆசிரமத்தின் நிதியை கையாளும் உரிமையை கொடுப்பதற்காகத்தான் அண்மையில் அவர் தீட்சை பெற்றாராம்.

தனது சிடியை வெளியிட்டு அவமானப்படுத்திய சேனலை தன்னோட சேனல் மூலம் பழிக்குபழி வாங்குவேன்னு நெருக்கமானவங்கிட்ட சொல்லியிருக்காராம்.

அதர்வாவின் கணிதன் -- ஆரம்பிக்கிறது...!!




அதர்வா நடித்துக் கொண்டிருக்கும் படம் கணிதன். வி.கிரியேஷன் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். டி.என்.சந்தோஷ் டைரக்ட் செய்கிறார்.

 அரவிந்த் கிருஷ்ணா கேமரா மேன். டிரம்ஸ் சிவமணி இசை. அதர்வா ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை கேத்ரின் டிரேசா நடிக்கிறார். படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் முடிந்து விட்டது.

கணிதன் என்றால் கணக்கு பார்ப்பவனாம். வீரத்துடன் இருக்கிறவனை வீரன் என்று அழைக்கிற மாதிரி கணக்கு பண்ணி வாழ்கிறவனை கணிதன் என்று அழைக்கிறார்களாம். அதர்வா எதையும் திட்டமிட்டு கணக்கா செய்கிறவர்.

அவரது கணக்கும் ஒரு இடத்தில் தப்பாகிறது. பிறகு அதனை எப்படி சரி செய்கிறார் என்பதுதான் கதையாம். அடுத்த கட்ட ஷூட்டிங் இன்னும் சில நாட்களில் ஆரம்பிக்கிறது. படத்தில் கே.பாக்யராஜ், நரேன், ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். வித்தியாசமான கோணத்தில் சொல்லப்படப்போகிற ஆக்ஷன் கதையாம்.

நான் தான் ஹீரோ - அடம்பிடித்த அஜித்...!!




காதல் காட்சிக்கு யாரும் டூப் போடாதபோது சண்டை காட்சிக்கு மட்டும் டூப் போடுவதில் நியாயம் இல்லை என்று அஜீத் குமார் தெரிவித்துள்ளார். சண்டை காட்சிகளில் டூப் போட விரும்பாதவர் அஜீத்.

எத்தனை ரிஸ்க்கான காட்சியாக இருந்தாலும் நான் தான் நடிப்பேன் என்று அடம்பிடித்து நடிப்பவர். அப்படி அவர் வீரம் படத்திலும் டூப் போடாமல் சண்டை காட்சிகளில் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக ரயிலில் வரும் ஒரு சண்டை காட்சியில் நடித்துள்ளார்.

இந்த காட்சி குறித்து சிவா கூறுகையில், 'ரயில் ஓடிக் கொண்டிருக்கும்போது ஒரு கையால் சண்டை போட்டுக் கொண்டு மற்றொரு கையால் கம்பிகளை பிடித்து அஜீத் நகர வேண்டும். இந்த காட்சியில் ரிஸ்க் அதிகம் என்பதால் டூப் போடலாம் என்று அஜீத்திடம் தெரிவித்தேன். ஆனால் அவர் டூப் போட மறுத்துவிட்டார்.

ரயில் காட்சியில் அப்படி என்ன தான் ரிஸ்க் இருக்கிறது என்பதை பார்த்துவிடலாம் என்று களம் இறங்கிய அஜீத் சிறப்பாக அந்த காட்சியில் நடித்தார். ஆனால் அவர் நடித்து முடிக்கும் வரை எங்களுக்கு எல்லாம் பயமாக இருந்தது.

ஏன் இப்படி ரிஸ்க் எடுத்து நடிக்கிறீர்கள் என்று அஜீத்தை கேட்டேன். அதற்கு அவர், நான் தான் ஹீரோ. அதனால் நான் தான் வில்லனை அடிக்க வேண்டுமே தவிர டூப் நடிகரை வைத்து அடிக்க வைக்கக் கூடாது என்றார் அஜீத்.

காதலியை கட்டிப்பிடித்து நடிக்கும் காட்சிகளில் எல்லாம் டூப் போடாமல் ஹீரோ தான் நடிக்கிறார். அப்படி இருக்கையில் சண்டை காட்சிகளில் டூப் நடிகரை நடிக்க வைப்பதில் நியாயம் இல்லையே. அதனால் தான் எதுவாக இருந்தாலும் நானே நடித்துவிடலாம் என்று முடிவு செய்தேன் என்று அஜீத் என்னிடம் தெரிவித்தார்' என்றார் சிவா.

 
back to top