.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, January 16, 2014

இந்த 10 இருந்தால் இனிக்கும் வாழ்க்கை..!!!




  •  அன்பு செலுத்துங்கள், அக்கறை காட்டுங்கள்.

  •  ஆர்வத்துடன் அதிகமாக செயல்பட விரும்புங்கள்.

  • இன்சொல் கூறி நான், எனது போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திடுங்கள்.

  •  உணர்வுகளை மதிக்கவும்,மரியாதை கொடுக்கவும் புகழவும் கற்றுக் கொள்ளுங்கள்.

  •  ஊக்கத்துடன் சுறுசுறுப்பாகச் செயல்படுங்கள்.

  •  எப்போதும் பேசுவதைக் கேட்டு,பின்விளைவை யோசித்து சரியான சைகை, முகபாவத்துடன் தெளிவாகப்பேசுங்கள்.

  • ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்துடன் பிறர் குறைகளை அலட்சியப் படுத்துங்கள்.

  • ஐங்குணமாகிய நகைச்சுவை, நேர்மை, சமயோசிதம், இன்முகம், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள்.

  •  ஒவ்வொருவரையும் வெவ்வேறு புதுப்புது வழிகளில் கையாளுங்கள்

  • ஓஹோ, இவர் இப்படித்தான் என்று யாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடாதீர்கள்.

விஜய்யை வைத்து அவார்டுக்காகவோ, குடும்ப படமோ எடுக்க முடியாது – ஜில்லா தயாரிப்பாளர்....



நல்ல படம் எடுப்பது என்பது இப்போது குதிரைக் கொம்பாக இருக்கின்றது. அதிலும் டாப் ஹீரோவை வைத்து குடும்ப பாங்கான நல்ல படம் எடுப்பது மிகவும் கஷ்டமான காரியமாக உள்ளது.

தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி சில தினங்களுக்கு முன்பு ‘ஜில்லா’ படம் பற்றி பேசியதாவது,‘ஜில்லா’ படம் பொங்கலுக்கு முன்னாடியே ரிலீசாகி நல்லா ஓடிக்கிட்டிருக்கு.

பொங்கலுக்கு முன்னாடியே ரிலீஸ் பண்ணினா கலெக்‌ஷன் பாதிக்குமோன்னு எனக்குள்ள ஒரு பயம் இருந்துச்சு. ஆனால் நாங்க எதிர்பார்த்ததை விடவும் படம் நல்லா வசூல் பண்ணிக்கிட்டிருக்கு.

அதே நேரத்துல இன்னொரு விஷயத்தையும் நான் இங்க சொல்லியாகணும். விஜய் மாதிரியான ஒரு ஹீரோவை வெச்சு ஒரு ஆர்ட் பிலிமையோ, அல்லது குடும்பத்தோட உட்கார்ந்து பார்க்கிற மாதிரியான குடும்பப் படமோ எடுக்க முடியாது.

ஏன்னா அவரோட ரசிகர்கள் அந்த மாதிரியான படங்களை விரும்ப மாட்டாங்க. அவருக்கு இருக்கிற ரசிகர்கள் அப்படிப்பட்டவங்க. அவரோட ரசிகர்களை திருப்திபடுத்துற அளவுக்கு படம் எடுக்கலேன்னா அந்தப்படம் கண்டிப்பா ஓடாது. அது தப்பாப் போயிடும்.

அதுமட்டுமில்லாம அவரை நம்பி நெறைய டிஸ்ட்ரிபியூட்டர்கள் பணத்தை இன்வெஸ்ட் பண்ணியிருக்காங்க. அவங்களும் சந்தோஷமா இருக்கிற மாதிரி தான் படம் எடுக்க முடியுமே தவிர அவார்டுக்காகவெல்லாம் படம் எடுக்க முடியாது.

அதனால தான் ‘ஜில்லா’ படத்தை மிகப்பெரிய கமர்ஷியல் படமா எடுத்துருக்கோம். தமிழ்நாட்டுல மட்டுமில்லாம ‘ஜில்லா’ ரிலீசான எல்லா ஏரியாக்களிலும் நல்லா போய்க்கிட்டிருக்கு என்றார் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி.

ஏற்கனவே விஜய்யை வைத்து ‘பூவே உனக்காக’ என்ற சில்வர் ஜூப்ளி படத்தை தயாரித்த அதே தயாரிப்பாளர் தான் இப்போது அதே மாதிரியான ஒரு குடும்பப் படத்தை விஜய்யை வைத்து எடுக்க முடியாது என்று கூறியிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

அஜீத் உடன் கவுதம் மேனன் படத்தில் அனுஷ்கா..!



நடிகை அனுஷ்கா தற்போது ருத்ரமாதேவி மற்றும் மஹாபலி ஆகிய திரைப்படங்களின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.  இந்த இரு படங்களிலும் அவர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

வீரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜீத் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் அடுத்து நடிக்க உள்ளார்.  இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க அனுஷ்காவிடம் தயாரிப்பாளர்கள் கேட்டு உள்ளனர்.

உடனே, சரி என்று அனுஷ்கா ஒப்புதல் அளித்துள்ளார்.  ஆனால், அதற்கான அதிகாரபூர்வ ஒப்பந்தத்தில் இன்னும் கையெழுத்திடவில்லை.  அனைத்து விசயங்களும் முடிந்த பின்பு படத்திற்கான படப்பிடிப்பு வருகிற மார்ச்சில் தொடங்கும்.  இத்தகவலை நடிகை அனுஷ்காவின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

நமீதா - ரத்ததானம் உடல்தானம் செய்தவர்கள் என்னை சந்திக்கலாம்.....


கேளம்பாக்கத்தில் பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ள SMK Fomra Institute of Technology- இல் பொறியியல் மாணவ மாணவியரும் பொங்கல் கொண்டாடி மகிழ்ந்தார் நமீதா.

காலை 10 மணிமுதல் மதியம் 3 மணி வரை மாணவ மாணவியருடன் அமர்ந்து பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி ஆர்த்தி தொகுத்து வழங்கிய நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்தார். மாணவ மாணவியரின் சுற்றுப்புறச்சூழல் குறித்த பட்டிமன்றம், மாணவியரின் நடன நிகழ்ச்சிகள் ஆகியவற்றை மிகவும் ரசித்துப்பார்த்த நமீதா மேடையில் ஏறி அவர்களுடன் தானும் நடனமாடி அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். மாணவ_ மாணவிகள் மற்றும் கல்லூரிப்பேராசிரியர்கள், நலிவடைந்தவர்களுக்காகச் சேகரித்து வைத்திருந்த உதவிப்பொருட்களை நமீதா ஏழைமக்களுக்கு வழங்கினார்.

ரத்ததானம் உடல்தானம் செய்தவர்கள் என்னை சந்திக்கலாம்..

மாணவர்கள் மத்தியில் பேசிய நமீதா, இங்கே எத்தனை பேர் ரத்ததானம் செய்துள்ளீர்கள் என்று கேட்டார் பாதி மாணவர்கள் செய்திருந்தனர். இவ்வளவு பேர் செய்துள்ளீர்களா என ஆச்சர்யப்பட்ட  நமீதா அவர்களை பாராட்டினார். மேலும் உடல் தானம் எத்தனை பேர் செய்துள்ளீர்கள் என்பதற்கு ஏறக்குறைய நூறு பேர் செய்திருந்ததாக கை உயர்த்தினர். இது நல்ல மாற்றம். மாணவர்கள் இவ்வளவு சமூக அக்கறையோடு இருப்பது பாராட்டிற்குரியது. வரும்காலம் எனக்கு நம்பிக்கை தருகிறது. படிப்பதோடு சம்பாதிப்பதோடு நமது சமூகம் சார்ந்த சிந்தனையும் மாணவர்களுக்கு வேண்டும். அதை இந்த காலேஜில் பார்க்கிறேன். மகிழ்கிறேன் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர்,
ரத்ததானம்  அல்லது   உடல்தானம் செய்தவர்கள் என்னை எப்போது வேண்டுமானாலும் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். அவர்கள் அதை செய்ததற்கான சான்றிதழோடு வந்தால் போதுமானது. இதன் மூலம் பல உயிர்கள் நீண்டு வாழும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது என்று பேசினார்.

பொங்கல் வைத்தார்.. கரும்பு கடித்தார்..

சம்பந்தப்பட்ட மாணவர்களை நிகழ்ச்சி தொகுப்பாளர் பெயரைச் சொல்லி அழைத்ததை ஒரு தடவை தான் கேட்டிருப்பார் ஆனால், ஒவ்வொருவரையும் பெயரைச் சொல்லி அழைத்து அவர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தினார்.

நாட்டுப்புற கலைஞர்களையும் அவ்வாறே "ராஜன் அண்ணா.."என்று அழைத்து மனதாரப்பாராட்டி அவரையும் புளாங்கிதம் அடையவைத்தார். பேராசியர்கள் , கல்லூரி அலுவர்கள் மட்டுமின்றி அங்கு உதவியாளர் நிலையில் பணியாற்றும் பெண்களையும் அவரே அழைத்துத் தன்பக்கத்தில் நிற்க வைத்து நலம் விசாரித்துக் கொண்டார்.

முன்னதாக கல்லூரிக்குள் நுழைந்த நமீதாவை மாணவிகள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். தொடர்ந்து கோலப்போட்டி நடந்தது, நமீதாவும் கோலம் போட்டு மகிழ்ந்தார். மாணவியர் வைத்த பொங்கலை ருசிபார்த்து சிறப்பாகப் பொங்கல் வைத்தவரிடம் எப்படி இவ்வளவு சுவையாக வைத்தீர்கள் என்று கேட்டுத் தெரிந்து கொண்டார்.

வழக்கமாக நமீதா கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் போன்று இல்லாமல், மிகவும் சகஜமாகவும் குடும்ப உறுப்பினர்களிடம் பழகியது போன்ற திருப்தியுடனும் ளுஆமு குழஅசய ஐளெவவைரவந ழக வுநஉ"ழெடழபல கல்லூரியில் நடந்த பொங்கல் விழாவில் கலந்து கொண்டது , கல்லூரி மாணவ மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தாருக்கு மட்டுமல்ல நமீதாவிற்கே ஒரு புதிய அனுபவத்தைக் கொடுத்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

உரி அடித்தார்..


உரியடிக்கையில் கண்களைக் கட்டிக்கொண்டு ஏமாற்றாமல் அவர் சரியாக அடித்தது அங்குள்ளவர்களை ஆச்சர்யப்படுத்தியது

 
back to top