.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, January 16, 2014

ஐ லவ் யு...அப்பா...உங்கள் மகன் சொல்ல வேண்டுமா...?



நீங்கள் மாற்றுத் தந்தையாக இருக்கும் நிலை ஏற்படுவது ஒரு மிகப்பெரிய முன்னேற்றம் தான். மாற்றுத் தந்தையாக இருப்பதென்பது ஒரு புதிய குழந்தையை பெற்றெடுத்து தந்தையாக மாறுவதில் இருந்து முழுவதும் மாறுபட்டதாகும்.

நீங்கள் தந்தையாக இருப்பதை விட இதில் சந்திக்கும் சவால்கள் அதிகம். புதிதாக பிறந்த குழந்தையை ஒரு தந்தையாக வளர்க்கும் போது, அந்த உறவு இயல்பாகவும், சுமூகமாகவும் இருக்கும்.

 ஆனால், நீங்கள் ஒரு மாற்றுத் தந்தையாக வேறு ஒருவரின் இடத்தை பூர்த்தி செய்ய முயலும் போது, இதுவரையிலும் தங்கள் தந்தையுடன் இருந்து வந்த, குழந்தைகளை கணிப்பது மிகவும் கடினமாக இருக்கும்.

நீங்கள் குழந்தைகளை மிகவும் கவனத்துடன் அணுக வேண்டும் மற்றும் அவர்களுடைய உண்மையான தந்தையுடனான உறவை மதிக்க வேண்டும். அவர்கள் ஏற்றுக் கொள்ளும் வரையிலும் பொறுமையாக இருக்க வேண்டும்.

சில சமயங்களில் விரைவில் இது நடந்து, நிலைமை சாதகமாகி விடும். எனினும், பெரும்பாலான நேரங்களில், இந்த மாற்றத்திற்கு காலம் ஆகும் மற்றும் சற்றே அதிக காலம் கழித்து தான் உங்களை தங்களுடைய மாற்றுத் தந்தையாக ஏற்றுக் கொள்வார்கள்.

இவையனைத்தும் புதியதாகவும் மற்றும் ஒரு புதிய மனிதனை தங்களுடைய உள் வட்டத்திற்குள் கொண்டு வருவது அவர்களுக்கு கடினமாகவும் இருக்கும்.

மாற்றுத் தந்தையாக இருப்பதிலிருந்து முழுமையான தந்தையாக மாறும் போது நம்மை பிரிக்கும் விஷயமாக குழந்தைகளுக்கு தந்தையர்கள் இருப்பது இருக்கிறது.

தந்தைகளை, அவர்கள் மிகவும் விரும்புவதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளது. அவர்களுடைய ஆதிக்கம் உங்களுடையதை விட நன்றாக உருவாகி இருக்கும்.

 நீங்கள் என்ன செய்தாலும், அந்த வளையத்திற்குள் நுழைய வேண்டாம். உங்களுக்கு சொந்தமாக ஒரு இடத்தை உருவாக்குங்கள் மற்றும் அதன் வழியாக குழந்தைகளுடன் உறவை கொண்டு வாருங்கள்.

அவர்களுடைய இடத்தை கொடுங்கள் மற்றும் மிகவும் அதிகமான ஆதிக்கம் செலுத்த வேண்டாம்.

இந்த 10 இருந்தால் இனிக்கும் வாழ்க்கை..!!!




  •  அன்பு செலுத்துங்கள், அக்கறை காட்டுங்கள்.

  •  ஆர்வத்துடன் அதிகமாக செயல்பட விரும்புங்கள்.

  • இன்சொல் கூறி நான், எனது போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திடுங்கள்.

  •  உணர்வுகளை மதிக்கவும்,மரியாதை கொடுக்கவும் புகழவும் கற்றுக் கொள்ளுங்கள்.

  •  ஊக்கத்துடன் சுறுசுறுப்பாகச் செயல்படுங்கள்.

  •  எப்போதும் பேசுவதைக் கேட்டு,பின்விளைவை யோசித்து சரியான சைகை, முகபாவத்துடன் தெளிவாகப்பேசுங்கள்.

  • ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்துடன் பிறர் குறைகளை அலட்சியப் படுத்துங்கள்.

  • ஐங்குணமாகிய நகைச்சுவை, நேர்மை, சமயோசிதம், இன்முகம், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள்.

  •  ஒவ்வொருவரையும் வெவ்வேறு புதுப்புது வழிகளில் கையாளுங்கள்

  • ஓஹோ, இவர் இப்படித்தான் என்று யாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடாதீர்கள்.

விஜய்யை வைத்து அவார்டுக்காகவோ, குடும்ப படமோ எடுக்க முடியாது – ஜில்லா தயாரிப்பாளர்....



நல்ல படம் எடுப்பது என்பது இப்போது குதிரைக் கொம்பாக இருக்கின்றது. அதிலும் டாப் ஹீரோவை வைத்து குடும்ப பாங்கான நல்ல படம் எடுப்பது மிகவும் கஷ்டமான காரியமாக உள்ளது.

தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி சில தினங்களுக்கு முன்பு ‘ஜில்லா’ படம் பற்றி பேசியதாவது,‘ஜில்லா’ படம் பொங்கலுக்கு முன்னாடியே ரிலீசாகி நல்லா ஓடிக்கிட்டிருக்கு.

பொங்கலுக்கு முன்னாடியே ரிலீஸ் பண்ணினா கலெக்‌ஷன் பாதிக்குமோன்னு எனக்குள்ள ஒரு பயம் இருந்துச்சு. ஆனால் நாங்க எதிர்பார்த்ததை விடவும் படம் நல்லா வசூல் பண்ணிக்கிட்டிருக்கு.

அதே நேரத்துல இன்னொரு விஷயத்தையும் நான் இங்க சொல்லியாகணும். விஜய் மாதிரியான ஒரு ஹீரோவை வெச்சு ஒரு ஆர்ட் பிலிமையோ, அல்லது குடும்பத்தோட உட்கார்ந்து பார்க்கிற மாதிரியான குடும்பப் படமோ எடுக்க முடியாது.

ஏன்னா அவரோட ரசிகர்கள் அந்த மாதிரியான படங்களை விரும்ப மாட்டாங்க. அவருக்கு இருக்கிற ரசிகர்கள் அப்படிப்பட்டவங்க. அவரோட ரசிகர்களை திருப்திபடுத்துற அளவுக்கு படம் எடுக்கலேன்னா அந்தப்படம் கண்டிப்பா ஓடாது. அது தப்பாப் போயிடும்.

அதுமட்டுமில்லாம அவரை நம்பி நெறைய டிஸ்ட்ரிபியூட்டர்கள் பணத்தை இன்வெஸ்ட் பண்ணியிருக்காங்க. அவங்களும் சந்தோஷமா இருக்கிற மாதிரி தான் படம் எடுக்க முடியுமே தவிர அவார்டுக்காகவெல்லாம் படம் எடுக்க முடியாது.

அதனால தான் ‘ஜில்லா’ படத்தை மிகப்பெரிய கமர்ஷியல் படமா எடுத்துருக்கோம். தமிழ்நாட்டுல மட்டுமில்லாம ‘ஜில்லா’ ரிலீசான எல்லா ஏரியாக்களிலும் நல்லா போய்க்கிட்டிருக்கு என்றார் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி.

ஏற்கனவே விஜய்யை வைத்து ‘பூவே உனக்காக’ என்ற சில்வர் ஜூப்ளி படத்தை தயாரித்த அதே தயாரிப்பாளர் தான் இப்போது அதே மாதிரியான ஒரு குடும்பப் படத்தை விஜய்யை வைத்து எடுக்க முடியாது என்று கூறியிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

அஜீத் உடன் கவுதம் மேனன் படத்தில் அனுஷ்கா..!



நடிகை அனுஷ்கா தற்போது ருத்ரமாதேவி மற்றும் மஹாபலி ஆகிய திரைப்படங்களின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.  இந்த இரு படங்களிலும் அவர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

வீரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜீத் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் அடுத்து நடிக்க உள்ளார்.  இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க அனுஷ்காவிடம் தயாரிப்பாளர்கள் கேட்டு உள்ளனர்.

உடனே, சரி என்று அனுஷ்கா ஒப்புதல் அளித்துள்ளார்.  ஆனால், அதற்கான அதிகாரபூர்வ ஒப்பந்தத்தில் இன்னும் கையெழுத்திடவில்லை.  அனைத்து விசயங்களும் முடிந்த பின்பு படத்திற்கான படப்பிடிப்பு வருகிற மார்ச்சில் தொடங்கும்.  இத்தகவலை நடிகை அனுஷ்காவின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
 
back to top