.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, January 16, 2014

தாடியை சீக்கிரம் வளர வைக்க சில டிப்ஸ்..!


தாடியை சீக்கிரம் வளர வைக்க சில டிப்ஸ்..! 

மென்மையான அழகான மற்றும் முடியே இல்லாத ஆண்களின் முகத்தைப் பார்த்து பெண்கள் மயங்குவார்கள். ஆனால் ஆண்களுக்கு தாடி வைத்திருப்பதே பிடித்த விஷயமாகும். அதுமட்டுமல்லாமல் வேறு வேறு பாணிகளில் அதை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். அது அவர்களுக்கு மிகுந்த ஆனந்தத்தை தரும். பண்டைய காலத்தில் தாடி வீரத்தின் அடையாளமாக இருந்தது. ஒரு அரக்கத்தனமான பெரிய தாடியை உடையவர்கள் மிகுந்த பலசாலியாக கருதப்படுவார்கள். தாடி ஒரு ஆணுக்கு அழகூட்டும் ஆண்மையை வெளிப்படுத்தும்.

ஆண் மனதில் உள்ள ஆசைகளில் ஒன்று தாடி வளர்ப்பதாகும். இதை சிறிதளவு சாதித்தாலும் மிகுந்த ஆனந்தம் அடைவார்கள். பெரிது பெரிதாக மற்றும் நல்ல அடர்த்தியுடன் அனைவராலும் முகத்தில் முடி வளர்க்க முடியாது. ஆனால், வளர்க்க முடியாதவர்கள் சில முயற்சிகளின் மூலம் அதன் வளர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த முடியும். நமது வயது, மரபணுவின் அமைப்பு ஆகியவையே தாடி வளர்ச்சியின் அளவையும் அடர்த்தியையும் தீர்மானிக்கின்றது. ஆனால் உங்கள் வயதிற்கேற்ற வளர்ச்சியை விட அதிக அளவு தாடியை வளர செய்வதற்கு இயற்கையான பல வழிகள் உள்ளன.

உங்கள் தாடி சீக்கிரமாக வளர்வதற்கு அதை ஊட்டமளித்து பராமரிக்க வேண்டியது அவசியமாகும். வாழ்வில் உள்ள மற்ற காரியங்களை போல இதற்கும் நல்ல ஊட்டமளித்தல் மற்றும் தேவையான அளவு கவனிப்பை அதற்கு கொடுத்தல் ஆகிய செயல்கள் சீக்கிரம் வளர உதவும். முகத்தில் உள்ள காய்ந்து போன மற்றும் இறந்து போன திசுக்களை வாரம் ஒரு முறை எக்ஸ்போலியேட் செய்வதன் மூலம் தாடி விரைவாக வளர உதவுகின்றது.

அதிக அளவு அக்கறையுடன் முகத்தில் உள்ள தாடியையும், முகத்தையும் பாதுகாக்க வேண்டும். அதை நன்கு எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து பார்த்துக் கொள்ள வேண்டியதும் அவசியம். இதற்கென்று சில எண்ணெய்கள் பயன்படுத்தி தாடிக்கு தேவையான ஊட்டத்தை அளிக்க மறக்கக் கூடாது.

உணவு

 புரதச் சத்து அதிகம் உள்ள உணவு பொருட்களும் மற்றும் மன அழுத்தம் இல்லாத வாழ்வும் தாடியை சீக்கிரம் வளர்க்க உதவுகின்றன. முடி வளர்வதற்கு தேவையான ஊட்டத்தை புரதச்சத்தே தருகின்றது. அதை செயல்படுத்த நல்ல தூக்கம் தேவைபடுகின்றது. தினமும் எட்டு டம்ளர் தண்ணீர் குடிப்பது அடர்த்தியான நீளமான முடியை வளர செய்யும். மன அழுத்தம் இல்லாமல் இருப்பதும் இதில் மிகவும் அவசியமானதாகும். இல்லையென்றால் அது இருக்கும் முடியையும் உதிர செய்துவிடும்.

வளர விடுங்கள்

முடி வளரும் பருவத்தில் கொஞ்சம் ஏற்றமும் இறக்கமுமாக அமைந்திருக்கும். மெதுவாக வளரும் முடியும் தாடி வளர வளர சீக்கிரம் முளைத்து வளரும். இவ்வாறு வளரும் போது அவை சமமாகவும், ஏதேனும் சமமில்லாத திட்டுகள் இருந்தால் அவையும் மறைந்துவிடும். ஆகையால் முடி வளர்வதற்காக நேரம் கொடுங்கள்.

இறந்த தோலை நீக்குதல்

 உங்கள் வாழ்க்கை முறைக்கேற்ப முகத்தில் உள்ள தேவையற்ற இறந்த திசுக்களை நீக்கி விடுங்கள். நல்ல ஸ்கிரப்-ஐ பயன்படுத்தி இதை செய்யுங்கள். இறந்த தோல் தசைகளை எடுத்து விடுதல் புதிய தசைகளையும் நல்ல முடியையும் வளரச் செய்யும். ஆண்களின் சருமத்திற்கென்று தயார் செய்யப்பட்ட எக்ஸ்போலியேட் மாஸ்க்-ஐயும் பயன்படுத்தி பாருங்கள்.

கண்டிஷனர்

 நல்ல முடி இருந்தால் மட்டும் போதாது அதை நல்ல முறையில் கண்டிஷன் செய்து வைக்க வேண்டும். இது தாடி முடியை வெட்டச் செய்யாமல் பாதுகாக்கும். காஸ்டர் எண்ணெய் இதற்கு மிக சிறந்த கண்டிஷனிங் பொருளாக அமைகின்றது. கண்டிஷனர் உங்கள் தாடியை சரியாக வளர வைக்கும். ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், பெப்பர்மின்ட் எண்ணெய் ஆகியவை முகத்தில் இருக்கும் முடிகளுக்கு ஊட்டமளிப்பதில் சிறந்தவையாகும்.

வைட்டமின்கள்

வைட்டமின் 'பி' யை உங்கள் உணவிலும் அழகு சாதனப் பொருட்களிலும் சேர்த்துக் கொள்ளுங்கள். வைட்டமின் பி1, வைட்டமின் பி6, வைட்டமின் பி12 ஆகியவை முடியை சீக்கிரம் வளர வைக்க உதவும். பையோடின் என்ற இணை சேர்க்கையை எடுத்துக் கொள்வதும் முடி மற்றும் நகத்தை விரைவாக வளர்க்க உதவும். பையோடின் - கல்லீரல், காலிபிளவர், பீன்ஸ், மீன், கேரட், வாழைப்பழம், சோயா, முட்டை மற்றும் தானியங்களில் உள்ளது.

கவுண்டரின் கலக்கல் நடனம்..!



ஒரு இடைவெளிக்குப்பிறகு மீண்டும் தனது ராஜபாட்டையில் அடியெடுத்து வைத்திருக்கிறார் கவுண்டமணி.

கௌதம் மேனனின் உதவியாளரான ஆரோக்கியதாஸ் இயக்கும் “49–ஓ“ என்ற படத்தில் கவுண்டமணி கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்தப்படத்தில் மழைவரம் வேண்டி வருணதேவனை குளிர்விக்கும் விதமாக குழுவினருடன் கவுண்டமணி ஆடிப்பாடும் பாடல் ஒன்று இடம்பெறுகிறது.

இந்தப்பாடல் மழைவர உத்திரவாதம் அளிக்கிறதோ இல்லையோ படத்தில் சிரிப்பு மழைக்கு உத்திரவாதம் உண்டு” என்கிறார் இயக்குனர் ஆரோக்கியதாஸ்.

அந்த அளவுக்கு இந்தப்படத்தில் கவுண்டர் உதிர்க்கும் வசனம் ஒவ்வொன்றும் அவரது ரசிகர்களுக்கு பேரானந்தம் தருமாம்.மேலும் “49-ஓ“ அரசியல் படமல்ல, நகைச்சுவை மிளிர சொல்லப்படும் ஒரு புத்திசாலித்தனமான படம் என்று கூறியுள்ளார்.


ஐ லவ் யு...அப்பா...உங்கள் மகன் சொல்ல வேண்டுமா...?



நீங்கள் மாற்றுத் தந்தையாக இருக்கும் நிலை ஏற்படுவது ஒரு மிகப்பெரிய முன்னேற்றம் தான். மாற்றுத் தந்தையாக இருப்பதென்பது ஒரு புதிய குழந்தையை பெற்றெடுத்து தந்தையாக மாறுவதில் இருந்து முழுவதும் மாறுபட்டதாகும்.

நீங்கள் தந்தையாக இருப்பதை விட இதில் சந்திக்கும் சவால்கள் அதிகம். புதிதாக பிறந்த குழந்தையை ஒரு தந்தையாக வளர்க்கும் போது, அந்த உறவு இயல்பாகவும், சுமூகமாகவும் இருக்கும்.

 ஆனால், நீங்கள் ஒரு மாற்றுத் தந்தையாக வேறு ஒருவரின் இடத்தை பூர்த்தி செய்ய முயலும் போது, இதுவரையிலும் தங்கள் தந்தையுடன் இருந்து வந்த, குழந்தைகளை கணிப்பது மிகவும் கடினமாக இருக்கும்.

நீங்கள் குழந்தைகளை மிகவும் கவனத்துடன் அணுக வேண்டும் மற்றும் அவர்களுடைய உண்மையான தந்தையுடனான உறவை மதிக்க வேண்டும். அவர்கள் ஏற்றுக் கொள்ளும் வரையிலும் பொறுமையாக இருக்க வேண்டும்.

சில சமயங்களில் விரைவில் இது நடந்து, நிலைமை சாதகமாகி விடும். எனினும், பெரும்பாலான நேரங்களில், இந்த மாற்றத்திற்கு காலம் ஆகும் மற்றும் சற்றே அதிக காலம் கழித்து தான் உங்களை தங்களுடைய மாற்றுத் தந்தையாக ஏற்றுக் கொள்வார்கள்.

இவையனைத்தும் புதியதாகவும் மற்றும் ஒரு புதிய மனிதனை தங்களுடைய உள் வட்டத்திற்குள் கொண்டு வருவது அவர்களுக்கு கடினமாகவும் இருக்கும்.

மாற்றுத் தந்தையாக இருப்பதிலிருந்து முழுமையான தந்தையாக மாறும் போது நம்மை பிரிக்கும் விஷயமாக குழந்தைகளுக்கு தந்தையர்கள் இருப்பது இருக்கிறது.

தந்தைகளை, அவர்கள் மிகவும் விரும்புவதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளது. அவர்களுடைய ஆதிக்கம் உங்களுடையதை விட நன்றாக உருவாகி இருக்கும்.

 நீங்கள் என்ன செய்தாலும், அந்த வளையத்திற்குள் நுழைய வேண்டாம். உங்களுக்கு சொந்தமாக ஒரு இடத்தை உருவாக்குங்கள் மற்றும் அதன் வழியாக குழந்தைகளுடன் உறவை கொண்டு வாருங்கள்.

அவர்களுடைய இடத்தை கொடுங்கள் மற்றும் மிகவும் அதிகமான ஆதிக்கம் செலுத்த வேண்டாம்.

இந்த 10 இருந்தால் இனிக்கும் வாழ்க்கை..!!!




  •  அன்பு செலுத்துங்கள், அக்கறை காட்டுங்கள்.

  •  ஆர்வத்துடன் அதிகமாக செயல்பட விரும்புங்கள்.

  • இன்சொல் கூறி நான், எனது போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திடுங்கள்.

  •  உணர்வுகளை மதிக்கவும்,மரியாதை கொடுக்கவும் புகழவும் கற்றுக் கொள்ளுங்கள்.

  •  ஊக்கத்துடன் சுறுசுறுப்பாகச் செயல்படுங்கள்.

  •  எப்போதும் பேசுவதைக் கேட்டு,பின்விளைவை யோசித்து சரியான சைகை, முகபாவத்துடன் தெளிவாகப்பேசுங்கள்.

  • ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்துடன் பிறர் குறைகளை அலட்சியப் படுத்துங்கள்.

  • ஐங்குணமாகிய நகைச்சுவை, நேர்மை, சமயோசிதம், இன்முகம், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள்.

  •  ஒவ்வொருவரையும் வெவ்வேறு புதுப்புது வழிகளில் கையாளுங்கள்

  • ஓஹோ, இவர் இப்படித்தான் என்று யாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடாதீர்கள்.
 
back to top