கேளம்பாக்கத்தில் பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ள SMK Fomra Institute of Technology- இல் பொறியியல் மாணவ மாணவியரும் பொங்கல் கொண்டாடி மகிழ்ந்தார் நமீதா.
காலை 10 மணிமுதல் மதியம் 3 மணி வரை மாணவ மாணவியருடன் அமர்ந்து பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி ஆர்த்தி தொகுத்து வழங்கிய நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்தார். மாணவ மாணவியரின் சுற்றுப்புறச்சூழல் குறித்த பட்டிமன்றம், மாணவியரின் நடன நிகழ்ச்சிகள் ஆகியவற்றை மிகவும் ரசித்துப்பார்த்த நமீதா மேடையில் ஏறி அவர்களுடன் தானும் நடனமாடி அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். மாணவ_ மாணவிகள் மற்றும் கல்லூரிப்பேராசிரியர்கள், நலிவடைந்தவர்களுக்காகச் சேகரித்து வைத்திருந்த உதவிப்பொருட்களை நமீதா ஏழைமக்களுக்கு வழங்கினார்.
ரத்ததானம் உடல்தானம் செய்தவர்கள் என்னை சந்திக்கலாம்..
மாணவர்கள் மத்தியில் பேசிய நமீதா, இங்கே எத்தனை பேர் ரத்ததானம் செய்துள்ளீர்கள் என்று கேட்டார் பாதி மாணவர்கள் செய்திருந்தனர். இவ்வளவு பேர் செய்துள்ளீர்களா என ஆச்சர்யப்பட்ட நமீதா அவர்களை பாராட்டினார். மேலும் உடல் தானம் எத்தனை பேர் செய்துள்ளீர்கள் என்பதற்கு ஏறக்குறைய நூறு பேர் செய்திருந்ததாக கை உயர்த்தினர். இது நல்ல மாற்றம். மாணவர்கள் இவ்வளவு சமூக அக்கறையோடு இருப்பது பாராட்டிற்குரியது. வரும்காலம் எனக்கு நம்பிக்கை தருகிறது. படிப்பதோடு சம்பாதிப்பதோடு நமது சமூகம் சார்ந்த சிந்தனையும் மாணவர்களுக்கு வேண்டும். அதை இந்த காலேஜில் பார்க்கிறேன். மகிழ்கிறேன் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர்,
ரத்ததானம் அல்லது உடல்தானம் செய்தவர்கள் என்னை எப்போது வேண்டுமானாலும் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். அவர்கள் அதை செய்ததற்கான சான்றிதழோடு வந்தால் போதுமானது. இதன் மூலம் பல உயிர்கள் நீண்டு வாழும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது என்று பேசினார்.
பொங்கல் வைத்தார்.. கரும்பு கடித்தார்..
சம்பந்தப்பட்ட மாணவர்களை நிகழ்ச்சி தொகுப்பாளர் பெயரைச் சொல்லி அழைத்ததை ஒரு தடவை தான் கேட்டிருப்பார் ஆனால், ஒவ்வொருவரையும் பெயரைச் சொல்லி அழைத்து அவர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தினார்.
நாட்டுப்புற கலைஞர்களையும் அவ்வாறே "ராஜன் அண்ணா.."என்று அழைத்து மனதாரப்பாராட்டி அவரையும் புளாங்கிதம் அடையவைத்தார். பேராசியர்கள் , கல்லூரி அலுவர்கள் மட்டுமின்றி அங்கு உதவியாளர் நிலையில் பணியாற்றும் பெண்களையும் அவரே அழைத்துத் தன்பக்கத்தில் நிற்க வைத்து நலம் விசாரித்துக் கொண்டார்.
முன்னதாக கல்லூரிக்குள் நுழைந்த நமீதாவை மாணவிகள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். தொடர்ந்து கோலப்போட்டி நடந்தது, நமீதாவும் கோலம் போட்டு மகிழ்ந்தார். மாணவியர் வைத்த பொங்கலை ருசிபார்த்து சிறப்பாகப் பொங்கல் வைத்தவரிடம் எப்படி இவ்வளவு சுவையாக வைத்தீர்கள் என்று கேட்டுத் தெரிந்து கொண்டார்.
வழக்கமாக நமீதா கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் போன்று இல்லாமல், மிகவும் சகஜமாகவும் குடும்ப உறுப்பினர்களிடம் பழகியது போன்ற திருப்தியுடனும் ளுஆமு குழஅசய ஐளெவவைரவந ழக வுநஉ"ழெடழபல கல்லூரியில் நடந்த பொங்கல் விழாவில் கலந்து கொண்டது , கல்லூரி மாணவ மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தாருக்கு மட்டுமல்ல நமீதாவிற்கே ஒரு புதிய அனுபவத்தைக் கொடுத்தது என்று சொன்னால் அது மிகையாகாது.
உரி அடித்தார்..
உரியடிக்கையில் கண்களைக் கட்டிக்கொண்டு ஏமாற்றாமல் அவர் சரியாக அடித்தது அங்குள்ளவர்களை ஆச்சர்யப்படுத்தியது