மீண்டும் மோகன்லாலுடன் மலையாளத்தில் விஜய்!
ஜில்லா திரைப்படத்தை வெற்றிப்படமாக்கிய ரசிகர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பிலெல்லாம் நன்றி சொல்லிவருகிறார் விஜய்.
சமீபத்தில் நடந்த ஜில்லா சக்சஸ் மீட்டில் துவங்கிய இந்த நன்றி-கூறும் படலம் தற்போது சமூக வலைதளங்கள் வரை தொடர்ந்துள்ளது.
முன்னணி சமூகவலைதளம் ஒன்றில் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு விஜய் பதில் கூறினார். அப்போது ஒரு ரசிகர் ‘நீங்க பாலிவுட்டுக்கு எப்ப போக போறீங்க?’ என்ற கேள்வியைக் கேட்டார். அதற்கு விஜய் ‘நமக்கு எப்பவும் நம்ம நாடு தான்’ என்று கூறியிருக்கிறார்.
மேலும் ‘நீங்கள் எப்போது மலையாள படத்தில் நடிப்பீர்கள்?’ என்ற கேள்விக்கு, மோகன்லாலுடன் சேர்ந்து ஒரு மலையாளப் படத்தில் நடிக்க ஆசை’ என்று கூறியிருக்கிறார்.
கேரள ரசிகர்களிடையே விஜய் படங்களுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு இருந்துவருகிறது. மோகன்லால் ஜில்லா படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்ததற்கு முக்கிய காரணமும் அதுதான்.
எனவே மறுபடியும் விஜய்யும், மோகன்லாலும் இணைந்து நடிப்பதில் ஆச்சர்யம் இல்லை என்கிறது கோடம்பாக்கம்