நான் ஈ திரைப்படத்தின் மூலம் தமிழில் நன்கு அறிமுகமான தெலுங்கு நடிகர் நானி மற்றும் வாணி கபூர் இணைந்து நடித்துவரும் ஆஹா கல்யாணம்
திரைப்படத்தின் இசை வருகிற ஜனவரி 21ல் வெளியாகவுள்ளது. மேலும் இப்படத்தின் ஒரு பாடல் மட்டும் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
யாஷ் ராஜ் பிலிம்ஸ் சார்பில் ஆதித்யா சோப்ரா இப்படத்தினை தயாரித்துவருகிறார். அறிமுக இயக்குனர் கோகுல் கிருஷ்ணா இயக்கிவரும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படம்பிடிக்கப்பட்டுவருகிறது.
கடந்த 2010 ஆம் ஆண்டு மனீஷ் ஷர்மா இயக்கத்தில் வெளியாகி வெற்றிவாகை சூடிய ஹிந்திப் படமான பாந்த் பஜா பாரத் திரைப்படத்தின் ரீமேக்கான இப்படத்திற்கு தரண்குமார் இசையமைத்துள்ளார். கடந்த மே மாதம் முதல் படம்பிடிக்கப்பட்டு வரும் இப்படம் வருகிற பிப்ரவரி 7ல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த டிசம்பர் 20ல் இப்படத்தின் டீசர் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இசையமைப்பாளர் தரண்குமார் போடா போடி, விரட்டு, தகராறு, இங்க என்ன சொல்லுது முதலிய படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது நினைவிருக்கலாம்.